
உயிறீறாரும், மெய் ஈரோன்பதும்
உயிருடன் மெய் புணரும்
இரு சதம் சொச்சமும்
வளை மணி குண்டலமொத்த
பிரிதிரண்டும்
உயர்திணை காதலும்
பெருந்திணை காமமும்
எழு சீர் குறளும்
எழுத்தின் இடை குறையும்
எண்ணத் தோன்றலில்
மௌனக் குறுக்கமாய்
இல்பொருள் உவமைஎன
மாயை பழிக்குதடி
உறு பசலை பெருக்கலில்
ஒரு நொடி தீண்டலென
உனக்கும் எனக்குமாய் இந்த
பகிர்தலும் பகிர்தல் நிமித்தமும்!
- அருண்வாசகன் (