கீற்றில் தேட...

உன் கால் தடத்தில்
பதிந்து கிடக்கிறது....
என் மனத்தடம்!

உண்ணும் பருக்கையிலும்
ஒளிந்திருக்கிறது....
உன் சுவை!

உன்
நினைவள்ளித் தின்றபின்
நிமிர்கிறேன்...
குனிந்திருப்பதாய் கூறுகிறது
கூறுகெட்ட சமூகம்!

நாம் நடந்த
பாதை வழியே
நடக்கிறது...
நம் நினைவுகள்!

காத்திருப்பில்
கனிகிறது.....
அனுபவப் பலா!

அசைய மறுக்கும் மரங்களை
அழகுபடுத்துகிறது.....
கற்பனை காற்று!
 
பிறர்க்கு உணவிட்டு
பசித்தே கிடக்கிறது....
இரவல் வாழ்க்கை!

- தீபா திருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)