கொல்கத்தாவில் நடந்த இன்னுமொரு கொடூரமான வல்லுறவு கொலையை அடுத்து, நாடு மீண்டும் அதன் கொடூரமான யதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, இது பெண்களின் பாதுகாப்பிற்கான தொடர்ச்சியான மற்றும் பரவலான அச்சுறுத்தலாகும். கொல்கத்தா சம்பவம் ஒரு தனி நிகழ்வு அல்ல; அது பெண்களை தொடர்ந்து தோல்வி அடையச் செய்யும் ஒரு பாரம்பரியமான கலாச்சாரத்தின் கொடூரமான நினைவூட்டலாகும். 2002 குஜராத் கலவரத்தின் போது இதயத்தை உலுக்கிய பில்கிஸ் பானோ வழக்கு முதல் நாடு முழுவதும் எண்ணற்ற, அடிக்கடி பதிவு செய்யப்படாத வழக்குகள் வரை, இந்தியாவின் வரலாறு எண்ணற்ற பெண்கள் இரத்தத்தாலும் கண்ணீராலும், ஒலங்களாலும் நீக்க முடியாத கறைகளாக படிந்துள்ளன.

ஆணாதிக்க பாலியல் வன்கொடுமைகள் பற்றிய புள்ளி விவரங்கள் திகைக்க வைக்கின்றன. இவைகள் கதைகளோ, பத்தி  செய்திகளோ அல்ல. மனதை கலங்கடிக்கும் கொடூரமான குற்றங்கள்‌ அனைத்தும் மிகவும் பரிச்சயமானவைகளாக இயல்பாக கடந்து போகும் மனநிலை தான் பேரதிர்ச்சியாக உள்ளது. ஒவ்வொரு புதிய வன்புணர்வு வழக்கும் கடந்த காலத்தின் சோகமான எதிரொலி! சாவதற்கு மறுக்கும் எதிரொலி. 2012 ஆம் ஆண்டு டெல்லியில் ஜோதி சிங் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது, ஆனால் மாற்றத்திற்கான வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படவில்லை. இந்திய நாட்டின் சட்டங்கள், தண்டனைகள் பற்றி விவாதித்த போதும், ஆழமான வேரூன்றிய பெண் வெறுப்பு, தண்டனையின்மை கலாச்சாரம் ஆகியவற்றின் யதார்த்தம் பெரிதாக வெளிப்பட்டது.

பில்கிஸ் பானோ வழக்கு! அவர் ஒரு இளம், கர்ப்பிணிப் பெண். பார்ப்பனிய பாசிச வகுப்புவாத வன்முறையின் போது கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்த நிலையில் விடப்பட்டார். இந்த நீண்ட காலத்தின் மற்றொரு பயங்கரமான அத்தியாயம். இருண்ட வரலாறு. நன்னடத்தை என்ற போர்வையில் அவரது வழக்கில் கொடூர குற்றவாளிகள் சமீபத்தில் பாஜக ஆட்சியரால் விடுவிக்கப்பட்டது காயத்தை மேலும் ஆழமாக்குகிறது. இந்த கொடூரமான பட்டியலில் சமீபத்தில் மகாராஷ்டிரா தானே மற்றும் உத்தரகாண்டில் நடந்த கொடூரமான பாலியல் வல்லுறவு பெருங்குற்றங்கள்!

மழலையர் பள்ளி மாணவிகள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூர் ரயில் நிலையத்தில் பெரும் போராட்டத்தை தூண்டியது. அதேபோன்று உத்தரகாண்டில், ஒரு செவிலியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார், இவை பெண்களின் ஆழமான பாதிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. அதுவும் பராமரிக்கும் தொழில்களில் பணியாற்றுகின்ற,  இந்தியாவில் பெண்கள் தினமும் செல்ல வேண்டிய இடங்களில் பெண்களுக்கு எந்த விதமான பாதுகாப்பையும் அளிக்கவில்லை என்பதை இந்த சம்பவங்கள் அப்பட்டமாக நினைவூட்டுகின்றன.

பெண்களுக்கு எதிரான இந்த வன்முறை ஒரு நவீன நிகழ்வு அல்ல. ஆனால் ஆணாதிக்கமும், திட்டமிட்ட ஒடுக்குமுறையின் நீண்ட வரலாற்றில் இது வேரூன்றியுள்ளது. பண்டைய சட்ட நூலான மனுஸ்மிருதி, இந்திய சமூகத்தில் பெண்கள் எவ்வாறு வரலாற்று ரீதியாக அடிபணிந்தனர் என்பதற்கு உதாரணமாக அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. பெண்களுக்கு முதலில் அவர்களின் தந்தைகள், பின்னர் அவர்களின் கணவர்கள், பிற்பாடு மகன்களை சார்ந்து அண்டி வாழும் வாழ்க்கையை இது பரிந்துரைக்கிறது. இந்த வரலாற்றுச் சூழல், சமகால இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் செய்வதற்கும்,  தொடர்ந்து கொடுமைப்படுத்தப்படுவதற்குமான இயல்பான ஒரு வரலாற்று சமூக ரீதியாக சாதகமான பின்னணியை ஆண்களுக்கு வழங்குகிறது. நமது நாட்டில் பெண்கள் பெரும்பாலும் ஆண்களின் சொத்தாகக் , ஒரு பொருளாகவே கருதப்படுகிறார்கள், அவர்களின் சுயமரியாதை,  கண்ணியம், சுய தேர்வு பரம்பரை ரீதியாக பண்பாடாகவே ஒரு முறையிலாகவே பறிக்கப்படுகிறது.

இந்தியாவில் சீரழிவு மனுஸ்மிருதி சட்டம், சித்தாந்தத்தின் அடிப்படையில் கற்பழிப்பு கலாச்சாரம் பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக சாடுதல், பாதிக்கப்பட்டவர்களிடம் சமூக அக்கறையின்மை ஆகியவற்றின் தீய சுழற்சியால் நிலைநிறுத்தப்படுகிறது. வரதட்சணை எதிர்ப்புப் பிரச்சாரங்கள், ஆடைத் தேர்வு, நாள் நேரம், அல்லது பாலியல் வன்முறைக்கு எதிரான போராட்டங்கள் மூலம் வன்முறை சீரழிவுக்கு பெண்கள் தங்களை தாங்களே அழைத்தவர்களாக, பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி பார்க்கப்படுகிறாள். பாலியல் குற்றவாளிகள் இப்படி குற்றம் காட்டுவதற்கு அடிப்படையாக மனசு மனுஸ்ருதி சட்டம் காரணமாக இருக்கிறது. இதனால் பெண்கள் பொது இடத்தில் நடமாடுவது சவாலாக முன்பை விட அதிகமாக தற்போதைய பாஜக ஒன்றிய ஆட்சியாளர்களின் காலத்தில் உள்ளது. பாரம்பரிய கலாச்சாரத்தின் எழுச்சி என்று சங் பரிவார் கும்பலால் புகழப்படுபவை பாதிக்கப்பட்டவர்களை வெட்கப்படுவதோடு மட்டுமல்லாமல், பெண்களுக்கு எதிரான பல்வேறு வகையான வன்முறைகளையும் தூண்டுகிறது. பிற்போக்குத்தனமான சமூக மனப்பான்மை, அவமானத்தின் சுமையை பெண்கள் மீது சுமத்தும் சமூகம் - நீதி அமைப்பில் அறிந்தவர்கள், உணர்ந்தவர்கள் அனைத்து பெண்களையும் ஒருங்கிணைந்து, நீடித்த முயற்சி, போராட்டங்களின் மூலம் கிட்டத்தட்ட பெண்களுக்கு பாதுகாப்பானதாக இந்த சமூகத்தை மாற்ற வேண்டும். அதற்கு அனைவரும் மனதிலும் பெண் ஆண் சமத்துவத்தையும், புரட்சியையும் விதைக்கப்பட வேண்டும்.

பாலின சமத்துவத்தற்காக அனைத்து புரட்சியாளர்களும் தனியாக போராடி முழு வெற்றியை அடைய முடியாது. நாடு முழுவதும் பெண்கள் ஒன்றுபட்டு போராட முன் வர வேண்டும். போராட்டம் ஒற்றுமையை பலப்படுத்தும். பெண்களின் முழுமையான பாதுகாப்பு என்பது இன்னும் வெகு தொலைவில் உள்ளது என்பதை புரிந்து கொண்டு புரட்சிகர பெண்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து  தங்கள் வேறுபாடுகளை களைந்து ஒரு நாடு தழுவிய அளவில் போராட்ட முன்னணியை உருவாக்க வேண்டும். வரும்  காலங்களில், ஒவ்வொரு பெண்ணும் அச்சமின்றி வாழக்கூடிய ஆண் பெண் சமத்துவ சமுதாயத்தை உருவாக்க இந்த அமைப்புகள். சக்தி வாய்ந்த இயக்கங்களை வழி நடத்த முன்வர வேண்டும்.

(Redstar ஆகஸ்ட் மாத இதழ் கட்டுரை)

மொழியாக்கம்: கி.நடராசன்