தமிழர்கள் மீதும், தமிழ்நாட்டின் மீதும் எப்போதுமே தன்னுடைய இழிவான பார்ப்பன வெறுப்பை உமிழ்ந்து வரும் தினமலம் பத்திரிகை சில நாட்களுக்கு முன்னால் யார் தன்னை என்ன செய்துவிட முடியும் என்ற தைரியத்தில் ஒரு நான்காம்தர பொறுக்கியின் மொழிநடையில் ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தது.

அந்த செய்தியின் தலைப்பு “மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு, ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகின்றது” என்பது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதைத்தான் தினமலம் இப்படி எழுதி இருக்கின்றது.dinamalar on school studentsஇதை ஒரு விமர்சனமாகவோ, கருத்து சுதந்திரமாகவோ கருதி யாராவது கடந்து போக முடியுமா? உழைக்கும் மக்களின் மீதான பார்ப்பன கேடிகளின் ஆழ் மனதில் ஊறிப் போய் கிடக்கும் வெறுப்புதான் இப்படி எல்லாம் எழுத வைக்கின்றது.

தமிழ்நாடு முழுவதும் கடுமையான கண்டனங்களும், போராட்டமும் ஏற்பட்ட பின்னால் "R. சத்தியமூர்த்தி-ஐ ஆசிரியராகக் கொண்ட தினமலர் ஈரோடு, சேலம் பதிப்புகளில் இந்த செய்தி வெளியாகி உள்ளது. R. சத்தியமூர்த்தி கடந்த 23 வருடங்களாக இந்த இரண்டு பதிப்புகளையும் தனியாக நடத்தி வருகிறார். இருப்பினும் 'தினமலர்' பெயரில் இப்படி ஒரு அருவருக்கத்தக்க, வெட்கி தலை குனியக் கூடிய செய்தி வெளியாகி இருப்பது மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. தினமலர் ஈரோடு, சேலம் பதிப்புகளில் வெளியாகி உள்ள இந்த செய்தி ஏற்புடையதல்ல வன்மையாக கண்டிக்கிறோம்" என ஆசிரியர் கி.ராமசுப்பு இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால் தினமலத்தின் இந்த வருத்தமும், வேதனையும் போலியானது என்பது அதன் வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். இஸ்லாமிய, கிருஸ்தவ மத வெறுப்பை உமிழ்வதையும், முற்போக்குவாதிகளை இழிவுபடுத்துவதையும் தமிழர்களை ‘டமிலர்கள்’ என்று கொழுப்போடு எழுதுவதையும் மூட நம்பிக்கைகளை பரப்பும் போலிச்செய்திகளை வெளியிடுவதையும் எப்போதுமே தினமலம் மிக சிரத்தையோடு செய்து வந்திருக்கின்றது.

2011 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் தீக்குளித்த செங்கொடியின் தியாகத்தை கொச்சைப்படுத்தி செய்தி வெளியிட்டது தினமலம். செங்கொடி ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருப்பதால் அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்றும், அதனால் அவர் எழுதிய அந்தக் கடிதம் போலியானது என்றும் இதை போலீசாரும் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்றும் வேசித்தனமாக எழுதியது.

அத்தோடு நிறுத்திக் கொண்டதா தினமலம்? சாந்தான், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்கிலேற்ற வேண்டும் என்று பார்ப்பன வெறியுடன் எழுதிய தினமலம் செங்கொடியின் தியாகத்தை 'காதல் தோல்வியால் தீக்குளிக்கும் செங்கொடிகள்' என்று எழுதி கொச்சைப்படுத்தியது.

பெரிய கோவிலுக்கு செல்லும் பிரபலங்கள் தமது பதவியையோ, இல்லை உயிரையோ இழப்பார்கள் என்பது ஐதீகம் என்ற உருட்டை முதலில் தமிழ்நாட்டில் உருட்டியது தினமலம்தான். ஏற்கனவே இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர், சங்கர்தயாள் சர்மா போன்றவர்களுக்கு அப்படி நடந்திருப்பதாகவும் தனது மூளை எனும் மலக்குழியில் இருந்து தினமலம் வெளியிட்டு இருந்தது.

மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராடிய போது அதை குத்தாட்டம் என்று இழிவுபடுத்தியது. இதைக் கண்டித்து தினமலம் பத்திரிகையை எரித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

2018 ஜூன் மாதம் தினமலரை நிறுவிய ராமசுப்பையரின் பேரனும், அந்தப் பத்திரிகையின் வர்த்தகப் பிரிவின் இயக்குநராக செயல்பட்டு வந்தவனுமான ஆதிமூலம், கோப்ராபோஸ்ட் இணையதளம் நடத்திய Sting operation நடவடிக்கையில் மாட்டிக் கொண்டு அம்பலப்பட்டான். தினமலம் ‘உண்மையின் உரைகல்’ அல்ல, அது மலம் துடைக்கும் கல் என மக்கள் காறித் துப்பினார்கள்.

கோப்ராபோஸ்ட் இணையதளம் நடத்திய புலனாய்வு நடவடிக்கையில் புஷ்ப ஷர்மா என்கிற பத்திரிகையாளர் ‘ஆச்சார்யா அடல்’ எனும் புனைப் பெயரில் ஆதிமூலத்தை சந்திக்கின்றார். அவரிடம் தான் நாக்பூரில் இருந்து வருவதாகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்போடு நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் நம்ப வைக்கிறார். இந்துத்துவ அமைப்புகளின் சார்பில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பிரச்சாரத் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டிருப்பதாக ஆதிமூலத்திடம் சொல்கிறார்.

தங்களுடைய பிரச்சாரத் திட்டம் மூன்று கட்டங்களாக வகுக்கப் பட்டிருப்பதாகவும், அவற்றை சம்பந்தப்பட்ட பத்திரிகைகளில் அரசியல் கலப்பற்ற பொதுவான செய்திகளாகவோ, ஆன்மீகத் துணுக்குகளாகவோ விளம்பரமாகவோ வெளியிட வேண்டும் என்கிறார்.

ஆறு மாத காலத்திற்கு திட்டமிடப்பட்ட இப்பிரச்சாரத்திற்கு பெரும் தொகை ஒன்றையும் கொடுப்பதற்கு முன்வரும் புஷ்ப ஷர்மா, இது ஒரு நல்ல ‘வியாபார வாய்ப்பு’ எனச் சொல்லி ஆதிமூலத்தை சம்மதிக்க வைக்கிறார்.

அதன்படி பிரச்சாரத்தின் முதல் கட்டமாக, "சம்பந்தப்பட்ட பத்திரிகை கிருஷ்ணர் மற்றும் பகவத் கீதை குறித்த விளம்பரங்களை வெளியிட வேண்டும். தங்களது கட்சி கடந்த முப்பது வருடங்களாக ராமர் மற்றும் அயோத்தியை வைத்து போதுமான வரைக்கும் அரசியல் ஆதாயம் அடைந்து விட்டதால் புதிய குறியீடுகள் தேவைப்படுகிறது" என்கிறார்.

பகவத் கீதை மற்றும் கிருஷ்ணரைக் குறித்த துணுக்குகள், செய்திகள் மற்றும் கட்டுரைகளின் மூலம் சமூகத்தில் ஒரு பொதுவான ஆன்மீகச் சூழலை உண்டாக்குவது திட்டம் என்றும், தாங்கள் ‘இந்துத்துவ’ சக்தியாக அறியப்படுவதால் இந்தச் சூழலே தேர்தலின் போது தங்களுக்கான ஓட்டுகளாக மாறி விடும் என்றும் சொல்கிறார்.

இரண்டாவது கட்டமாக, ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் மாயாவதி போன்ற எதிர்கட்சித் தலைவர்களைக் குறித்து பகடியாக எழுத வேண்டும் என்கின்றார். அதன்படி ராகுல் காந்தியை பப்பு என்றும், அகிலேசுக்கு புவா (Bua) என்றும், மாயாவதியை பபுவா (Babua) என்றும் அடைமொழியிட்டு கிண்டல் செய்ய வேண்டும். இதன் மூலம் மக்களின் பொது புத்தியில் இந்தத் தலைவர்கள் ஆளுமையற்றவர்கள், கேலி கிண்டலுக்கே தகுதி படைத்தவர்கள் என்பதை மறைமுகமாக பதிவு செய்வது திட்டம் என்கிறார்.

இவை எல்லாவற்றையும் ஆதிமூலம் ஏற்றுக் கொள்கின்றார். பார்ப்பன தினமலர் மட்டுமல்ல, சன்டிவி நிர்வாகமும் இந்த புலனாய்வில் மாட்டிக் கொண்டது. இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி சங்கி கும்பல் தன்னுடைய பண பலத்தில் மூலம் எப்படி ஊடகங்களை ஏவல் நாய்களாக பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றது என்பதும், ஊடகத்தில் பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் செயல்படும் விபச்சாரத் தரகர்களும் அம்பலப்பட்டு போனார்கள்.

தினமலர் வாரமலரில் எழுதிய அந்துமணி எனும் இரமேஷ் என்பவனை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இவன் தினமலர் சென்னை பதிப்பின் உரிமையாளர் ஆவான். இவன் தனக்கிருக்கும் அதிகார செல்வாக்கைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான பெண்களை நாசம் செய்ததாக புகார் உள்ளது. அதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் - தினமலர் அலுவலகத்தில் வேலை செய்தவர் - போலீசில் புகாரும் கொடுத்திருக்கின்றார்.

2021 ஜூலை மாதம் தமிழ்நாட்டைத் துண்டாடும் நோக்கில் ஒரு செய்தியை தினமலம் வெளியிட்டது. அது என்னவென்றால் தமிழ்நாட்டை இரண்டாகப் பிரித்து ‘கொங்கு நாடு’ என்ற யூனியன் பிரதேசத்தை உருவாக்க ஒன்றிய அரசு முயற்சித்து வருவதாக.

ஆனால் இதுதொடர்பாக தமிழக எம்.பி.,க்கள் நாடாளுமன்ற மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பிய போது, உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய், “தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க எந்தக் கோரிக்கையம் வரவில்லை. அதுபோல், எந்த கோரிக்கையும் பரிசீலனையில் இல்லை” எனத் தெரிவித்தார்.

இவை எல்லாம் தினமலத்தின் யோக்கியதை பற்றிய சில செய்திகள் மட்டுமே. பத்திரிகை என்பதற்குரிய எந்த நேர்மையோ, நாணயமோ இல்லாத சில்லரைப் பத்திரிகையாகவே தினமலம் தான் பிறந்ததில் இருந்தே இருந்து வருகின்றது.

தமிழ்நாட்டின் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் அதிகாரப்பூர்வ நச்சுப் பத்திரிகையாக செயல்படும் தினமலத்திற்கு அரசியல் வட்டாரத்தில் உள்ள ஆதரவுதான், அதை இப்படி எல்லாம் அயோக்கியத்தனமாக எழுத வைக்கின்றது.

இப்போது காலை உணவுத் திட்டத்தை கொச்சைப்படுத்தி, அசிங்கப்படுத்தி, அருவருப்பாக எழுதினாலும் அதன் மீதான திமுக அரசின் நடவடிக்கை என்ன என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை என்பதுதான் உண்மை.

பார்ப்பனப் பத்திரிகைகள் என்னதான் போலிச் செய்திகளையும், வன்மத்தையும், வெறுப்பையும் விதைக்கும் செய்திகளையும், தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் செய்திகளையும் வெளியிட்டாலும் அந்தப் பத்திரிகைகளை பகைத்துக் கொள்ள சூத்திர ஆட்சியாளர்கள் விரும்புவதில்லை.

இந்தக் கட்டுரையின் மூலம் மானமுள்ள தமிழ் மக்களுக்கு நாம் விடுக்கும் வேண்டுகோள், தன்மானமும் பகுத்தறிவும் உள்ள ஒவ்வொரு தமிழரும் இந்த பார்ப்பனக் கொழுப்பெடுத்த தமிழர் விரோத தினமல(ர்)த்தைப் புறக்கணிக்க வேண்டும் என்பதுதான்.

- செ.கார்கி

Pin It