கர்நாடகாவின் கோலாரில் நடந்த தேர்தல் பேரணியின் போது, ராகுல் காந்தி, தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடி, சர்ச்சைக்குரிய கிரிக்கெட் நிர்வாகி லலித் மோடி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய 3 பேரின் பெயரைக் குறிப்பிட்டு, “இந்தத் திருடர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பது எப்படி என்று ஏப்ரல் 13, 2019 அன்று கேட்டார். பெயர், மோடி. அவர் பேசிய உரை இன்னும் அப்படியே காணொளி காட்சிகளாக இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=u6LexaGQQFE
அச்சா, ஏக் சோட்டா சா சவால், இன் சப் கே நாம், இன் சப் சோரோன் கே நாம், மோடி மோடி மோடி கைசே ஹை? நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி. அவுர் அபி தோடா தூண்டேங்கே டு அவுர் பஹுத் சாரே மோடி நிக்லேங்கே.”
"எனக்கு ஒரு கேள்வி. இவர்கள் அனைவரின் பெயரிலும். இந்த திருடர்கள் அனைவரின் பெயரிலும் மோடி மோடி மோடி ஏன்? நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி. நாம் இன்னும் கொஞ்சம் தேடினால், இதுபோன்ற பல மோடிகள் வெளி வருவார்கள்.
குஜராத் மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்எல்ஏவுமான பூர்ணேஷ் மோடி, ராகுல் காந்தியின் கருத்து ஒட்டுமொத்த ‘மோடி சமூகத்தையும்’ இழிவுபடுத்தியதாகக் கூறி அவர் மீது புகார் அளித்தார்.
இந்த வழக்கு 16-04-2019 அன்று தாக்கல் செய்யப்பட்டது.
ராகுல் காந்தி 24-06-2021 அன்று அப்போதைய சூரத் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார்.புகார்தாரர் ராகுல் காந்தியை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கையை நீதிமன்றத்தில் 07-03-2022 அன்று வைக்க அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்ததோடு வாதங்களை தொடரக் கோரியது. ஆனால் வாதங்களை தொடராமல் உயர் நீதிமன்றத்திற்கு விரைந்து விசாரணை நடவடிக்கைகளுக்குத் தடை கோரினார். தடை வழங்கப்பட்டது.
சர்ச்சைக்குரிய தொழிலதிபர் கௌதம் அதானியுடன் இருந்த தொடர்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் நரேந்திர மோடி மீது ராகுல் காந்தி கடுமையான தாக்குதலைத் தொடங்கிய ஒரு வாரத்தில் பூர்ணேஷ் மோடி ஒரு வருடமாக நிறுத்தி வைத்திருந்த வழக்கை மீண்டும் தொடங்க முடிவு செய்தார்.
புகார்தாரர் 11 மாத இடைவெளிக்குப் பிறகு, 16,02 2023 அன்று மீண்டும் உயர் நீதிமன்றத்திற்குச் சென்று, தடையை நீக்கக் கோரி, "விசாரணை நீதிமன்றத்தில் இந்த வழக்கை நடத்துவதற்காக போதுமான சான்றுகள் வந்துள்ளன" என்று கூறி அந்த தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிப்ரவரி 27, 2023 அன்று, இந்த முறை மற்றொரு நீதிபதி எச்.எச் வர்மா முன் விசாரணை மீண்டும் தொடங்கியது.
மார்ச் 8, 2023 அன்று ராகுல் காந்தியின் வழக்கறிஞர், காங்கிரஸ் தலைவரின் ஆவேசமான பேச்சுக்கு இலக்கானவர் நரேந்திர மோடி என்பதால் அவதூறு கூறுவதற்கு இந்த புகார்தாரர் பூர்ணேஷ் மோடிக்கு உரிமையில்லை என்று ராகுல் காந்தியின் வழக்கறிஞர் வாதிட்டார்.
அடுத்த வாரம் வாதங்கள் முடிவடைந்து, சிஜேஎம் வர்மா தீர்ப்பை என்று ஒத்தி வைத்தார். மார்ச் 23, 2023 அன்று, தலைமை சூரத் ஜூடிசியல் மாஜிஸ்திரேட், எச்.எச்.வர்மா, இந்திய தண்டனை சட்டம் 499 மற்றும் 500 பிரிவுகளின் கீழ் கிரிமினல் அவதூறு குற்றத்திற்காக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.15000 அபராதம் விதித்தார். மேலும் அதே நீதிபதி அவரத்து தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் வழங்கி ஜாமீன் அளித்துள்ளது.
பூர்வாங்க விசாரணையின்றி காந்திக்கு எதிராக சூரத் நீதிபதி வழக்கு தொடர்ந்தது சரியா?
ராகுல் காந்தியின் சட்ட வாதங்கள் , குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 202வது பிரிவின் கீழ் அதிகார வரம்பு பற்றிய முக்கியக் கேள்வியை மையமாகக் கொண்டிருந்தன, இது ஒரு நீதிமன்றம் தனது வழக்கமான பிராந்திய அதிகார வரம்பிற்கு வெளியே ஒருவருக்கு எதிராகத் தொடர்ந்தால் பின்பற்ற வேண்டிய செயல்முறையைக் குறிப்பிடுகிறது.
குற்றவியல் அவதூறு (பிரிவு 499, 500 ஐபிசி) அரசியலமைப்புச் சட்டப்படி, சுப்பிரமணியன் சுவாமி vs யூனியன் ஆஃப் இந்தியா மீதான உச்ச நீதிமன்றம், அனைத்து விதங்களிலும் புகாரை ஆராய விசாரணை நீதிமன்ற நீதிபதிக்கு பெரும் சுமை இருப்பதாகக் கூறியது. வழக்கு 202 CrPC இல் பயன்படுத்தப்பட்டுள்ள மொழியையும் நீதிபதி பார்வையில் வைத்திருக்க வேண்டும்,
இந்த விசாரணை நீதிமன்றம் தனது அதிகார வரம்பிற்கு அப்பால் உள்ள இடத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் வசிக்கும் போது எவ்வாறு தொடர வேண்டும் என்பதைக் சுட்டிக்காட்டுகிறது.. பிரிவு 499 ஐபிசியின் உட்பிரிவுகள் சரியாக பின்பற்றப்பட்டிருக்கிறதா என்று ஆராயவேண்டியது இன்றியமையாதது.
"ராகுல் காந்தி டெல்லியில் வசிப்பவர், இது இந்த நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு வெளியே உள்ளது," என்று அவரது வழக்கறிஞர் மார்ச் 7 அன்று CJM முன் சமர்பித்தார். இப்படி குற்றம் சாட்டப்பட்டஅப்போது சம்மன் அனுப்பலாமா வேண்டாமா என்ற காரணத்தை நீதிமன்றம் தெரிவிக்க வேண்டும். அப்படி எதுவும் பின்பற்றப்படவில்லை” என்று அவர் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
விஜய் தனுகா அண்ட் அதர்ஸ் வி நஜிமா மம்தாஜ் அண்ட் அதர்ஸ் (2014) வழக்கில் , குற்றம் சாட்டப்பட்ட நபர் மாஜிஸ்திரேட்டின் எல்லைக்கு அப்பால் வசிக்கும் போது, மாஜிஸ்திரேட் அந்த நபரிடம் நேரடி விசாரணை நடத்துவது கட்டாயமாகும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. .
பிர்லா கார்ப்பரேஷன் லிமிடெட் v அட்வென்ட்ஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அண்ட் ஹோல்டிங் லிமிடெட் (2019) வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு படி மேலே சென்று நீதிபதிகளின் செயல்பாடுகள் இயந்திரத்தனமாக இருக்கக்கூடாது என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களை துன்புறுத்தும் கருவியாகவும் மாற்றக்கூடாது என்றும். ஒரு கிரிமினல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரை ஆஜராகுமாறு நபரை அழைப்பது என்பது மிகவும் முக்கியமான விஷயமாகும், இப்படி தீர்ப்பு வழங்கும் முன்னர் குற்றம் கிரிமினல் வழக்கில் சாட்டப்பட்டவரை விசாரிக்காமல் தீர்ப்பு வழங்கியது தவறான அணுகுமுறை என்று ராகுல் காந்தியின் வழக்கறிஞர்கள் CJM முன் இந்தக் கேள்விகளை எழுப்பினர் இருந்தும் பலனில்லை.
தமிழகத்தை சேர்ந்த இப்போதைய பாஜக உறுப்பினர் குஷ்பு, & கன்னியம்மாள், வழக்கில் குறிப்பிட்ட ஒரு நபரை பற்றி அவதூறாக பேசினால் மட்டுமே அந்த நபரால் அவதூறு வழக்கு தொடர முடியும். பொதுவாக ஒரு கட்சியைப்பற்றியோ கூட்டத்தை பற்றியோ பேசினால் அது அவதூறாக கருத முடியாது என்று விளக்கி இருக்கிறது.
சூரத் வழக்கில், மோடி என்ற குடும்பப் பெயரைக் கொண்டவர்கள் ஒரு சமூகத்தை உருவாக்குகிறார்கள், இது தனி நபரிடமிருந்து வேறுபட்டது, மேலும் ராகுல் காந்தி அவர்கள் அந்த சாதியினரை இழிவுபடுத்த விரும்புகிறார் என்று பேசுவதும் முறையற்றது.
இந்த திருடர்கள் ஏன் கவுன் அணிகிறார்கள் என்று ராகுல் காந்தி கேட்டிருந்தால், அது அவதூறாக இருக்க முடியாது. அதேபோல, மூன்று நபர்களின் குடும்பப் பெயரைப் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார் - அவர்களில் எவரும் அவதூறு வழக்கை தொடரவில்லை.
பாராளுமன்றத்தில் வெளிநாடுகளில் ராகுல் தவறாக பேசிவிட்டார் அதனால் ராஜினாமா செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்த பொது மோடி எத்தனை இடங்களில் எப்படி எல்லாம் பேசினார் என்பதை பதிவிட்டோம். இப்போது ராகுல் காந்தியின் மீது வன்மம் காட்டும் விதத்தில் ஒரே வார காலத்தில் இந்த வழக்கின் தடையை நீக்க கோரி அவசர கதியில் முறையற்ற வகையில் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
ராகுல் காந்தியை மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய முடியுமா?
இந்த ஆண்டு ஜனவரியில், லட்சத்தீவு மக்களவை எம்.பி., தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முகமது பைசல், கொலை முயற்சி வழக்கில் மாவட்ட நீதிமன்றத்தால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றதையடுத்து, தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
லோக்சபா நெறிமுறைக் குழு, அரசியலமைப்பின் 102(1)(இ) பிரிவின் பிரதிநிதித்துவத்தின் 8வது பிரிவின் விதிகளின்படி, தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து, அதாவது ஜனவரி 11, 2023 முதல் பைசலின் உறுப்பினர் பதவியை நீக்க முடிவு செய்தது.
கேரள உயர்நீதிமன்றம் பைசல் மீதான தண்டனையை அவர் தகுதி நீக்கத்திற்குப் பிறகு நிறுத்திவைத்ததை அடுத்து, இந்த தகுதி நீக்கம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. என்று தீர்ப்பளித்தது.
ராகுல் காந்தி வழக்கில், அவர் மேல்முறையீடு செய்ய சூரத் நீதிமன்றமே அவரது தண்டனையை நிறுத்தி வைத்ததிருக்கும் பட்சத்தில் இதற்கு முன்பு கிடைத்திருக்கும் தீர்ப்புக்களின் அடிப்படையிலும் அவரது தகுதி நீக்கம் செல்லாததாகவே கருதப்படக்கூடும்.
லோக் பிரஹார என்பவருக்கு எதிராக இந்தியத் தேர்தல் ஆணையம் (2018) இல் மேல்முறையீட்டு நிலுவையில் உள்ள ஒருவருக்கு ஒருமுறை தண்டனை நிறுத்தப்பட்டால், அந்தத் தண்டனையின் விளைவாகச் செயல்படும் தகுதியிழப்பு நடவடிக்கை எடுக்கவோ அல்லது நடைமுறையில் இருக்கவோ முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
இப்படி இருக்க இவ்வளவு வேக வேகமாக அவரை தகுதி நீக்கம் செய்வது என்ற ஒரே குறிக்கோளில் செயல்பட்டு இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
எந்த வழியில் ராகுல் காந்தியின் வாய்களுக்கு பூட்டு போட முடியும் என்று யோசித்து இறுதியாக குறுக்கு வழியைப் பயன்படுத்தி இந்த செயல்களை செய்து இருக்கிறது.
- ஆர்.எம்.பாபு