corona burialநாம் வாழும் காலத்தில் இப்படியான ஒரு அசாதாரணமான நிலையை சந்திப்போம் என யாரும் கனவிலும் எண்ணியிருக்க மாட்டோம். ஆனால் கடும் பிற்போக்குவாதிகளின் கையில் மாட்டிக் கொண்ட நாடுகளின் வரலாற்றைப் பற்றி தெரிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும் ஒரு நாள் ஒட்டு மொத்த இந்தியாவையும் மோடியும் சங்கி கும்பலும் முட்டுச் சந்தில் கொண்டு போய் நிறுத்துவார்கள் என்று.

கடும் வலதுசாரி பிற்போக்கு கும்பல்கள் ஒரு நாளும் மனித உயிர்களின் மதிப்பை அறியாதவர்கள். வலது சாரி பாசிசமும் முதலாளித்துவ பாசிசமும் ஒன்றினைந்து செயல்படும் போது அது தனது சொந்த நாட்டு மக்களையும் விட்டு வைக்காமல் பலி வாங்குகின்றது. அப்படித்தான் அமெரிக்கா மிகப்பெரும் மனித உயிர்களை பலி எடுத்தது.

உலகின் மிக பணக்கார, இராணுவ பலம் வாய்ந்த, நவீன தொழில் நுட்பங்களை கொண்ட அமெரிக்காவால் தன் சொந்த நாட்டு மக்கள் கொத்துக் கொத்தாக கொரோனோவால் சாவதில் இருந்து காப்பாற்ற முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் டிரம்ப் போன்ற கடைந்தெடுத்த பிற்போக்குவாதியின் கையில் நாடு மாட்டிக் கொண்டிருந்தது தான்.

இப்போது இந்தியாவும் அதைவிட பல மடங்கு மனிதத் தன்மையற்ற பிற்போக்குவாதிகளின் கையில் மாட்டிக் கொண்டிருப்பதால் தான் மிகப்பெரும் மனித அவலங்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றது.

நாடு முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடும், ஆச்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டு வரலாறு காணாத நெருக்கடியில் இருக்கும் போதுதான் புழுவினும் இழிந்த முட்டாள்கள் கும்பமேளாவையும் தேர்தல் பரப்புரைகளையும் நடத்திக் கொண்டிருந்தார்கள்.

உலகமே தன் சொந்த நாட்டு மக்களுக்கு விரைவாக தடுப்பூசி போட்டு உயிரைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்க இங்கே இன்னமும் மாட்டு மூத்திரத்தை கையில் வைத்துக் கொண்டு ஒரு கீழ்த்தரமான அருவருக்கத்தக்க கும்பல் சுற்றிக் கொண்டிருக்கின்றது.

மோடி எதையாவது செய்து நாட்டைக் காப்பாற்றுவார் என மந்திரத்தைப் போல சங்கிகள் திரும்பத் திரும்ப மக்களை நம்ப வைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஆனால் நாடே சுடுகாடாக மாறிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் மோடியின் மனதில் தன்னை நம்பி ஓட்டுப் போட்ட மக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனையை விட பிணங்கள் அதிகமாக விழுவதால் சுடுகாடு நடத்தும் வேலையை அம்பானி, அதானி போன்றவர்களிடம் கொடுத்து தனது ஏழை நண்பர்களுக்கு எப்படி உதவுவது என்ற சிந்தனைதான் மேலோங்கி இருக்கும். அதிகமான பிணங்கள் அதிகமான லாபத்தை ஈட்டும் என்பதால் தான் மோடி தொலைநோக்குப் பார்வையோடு தடுப்பூசிகளையும், ஆச்சிஜனையும் மக்களுக்குக் கிடைக்காமல் செய்துள்ளார்!.

இதன் மூலம் பக்கோடா கடை வைத்தது போக மீதமிருக்கும் வேலையில்லாத இளைஞர்களுக்கு பிணம் எரிக்கும் வேலையும் கிடைக்கும். அது போக தனது சிந்தாந்த வழிகாட்டிகளான பார்ப்பனர்களுக்கு செத்துப் போன பிணங்களுக்கு மோட்சம் அளிக்கும் பணியும் கிடைக்கச் செய்யலாம்.

உலகில் கொரோனோ தொற்றால் அதிகம் பாதிக்கப் படும் நாடாக இந்தியாவை மோடி மாற்றுவார் என்பது அவர் விளக்கு பிடிக்கச் சொன்ன போதும், மணியாட்ட சொன்ன போதுமே குறைந்த பட்சமாகவேனும் மூளை வேலை செய்யும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

மக்களிடம் மூட நம்பிக்கைகளைப் பரப்பி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புல்லுருவி வாழ்க்கை வாழ்ந்தவர்களின் அரசியல் வாரிசுகளே ஆட்சியில் இருக்கும் போது நாம் சொல்லவே தேவையில்லை. இப்போது கொத்தக் கொத்தாக விழும் பிணங்கள் எல்லாம் சங்கிகளின் ஆன்மாவைத் திருப்தி படுத்த கொடுக்கப் படும் நரபலிகள் ஆகும்.

முட்டாள்களும் பிற்போக்குவாதிகளும் எவன் குடியை கெடுக்கவும் தயங்க மாட்டார்கள். குஜராத் மருத்துவமனைகளில் நோயாளியின் வாயில் மாட்டு மூத்திரத்தை ஊற்றிய கழிசடை பேர்வழிகள் எவனும் மோடியில் வாயிலோ அமித்சாவின் வாயிலோ அதை கொண்டு போய் ஊற்றவில்லை.

ஏற்கெனவே தடுப்பூசி கிடைக்காமலும், ஆச்சிஜன் கிடைக்காமலும் செத்துக் கொண்டிருக்கும் சாமானிய மக்களிடம் மூத்திரத்தையும், சாணியையும் பரிந்துரை செய்யும் இவர்கள் மிகக் கொடிய மனிதகுல விரோதிகள் ஆவார்கள்.

தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என மக்களுக்கு கோரிக்கை வைக்கும் பிரதமர் தடுப்பூசிக்கு மாற்றாக தனது ஆட்களால் வைக்கப்படும் அயோக்கியத் தனமான தீர்வுகளைப் பற்றி வாய் திறக்க மறுக்கின்றார். காரணம் சங்கிகளின் அரசியல் வாழ்வே மக்களை ஏமாற்றி பிழைப்பதில் தான் உள்ளது என்பதால் தான்.

ஜனவரி 8, 2021 அன்று அமெரிக்காவில் 307,581 பேர் கொரோனோ நோயால் பாதிக்கப் பட்டதே அதிகபட்ச அளவாக இருந்ததை மோடியும் சங்கிக் கும்பலும் சேர்ந்து இன்று முறியடித்து விட்டார்கள்.

முறியடித்ததோடு இனி உலகில் இது போன்ற பேரழிவை ஏற்படுத்திய பிற்போக்கு கும்பல் இருக்கக் கூடாது என்பதை உறுதிப் படுத்த கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

அதன் காரணமாகத் தான் பிப்ரவரி 11 அன்று 10,000 க்கும் குறைவாக இருந்த கொரோனோ தொற்று ஏப்ரல் 24, 2021 அன்று ஏறக்குறைய மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் தொற்றுக்கள் வரை உயர்ந்து இருக்கின்றது. இதுவரை ஏறக்குறைய 1.92 லட்சம் மக்கள் கொரோனோவால் இறந்துள்ளார்கள்.

அரசாங்கம் தரும் இந்த புள்ளி விவரங்கள் கூட உண்மையான எண்ணிக்கைக்கு மிகக் குறைவாக இருக்கவே வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் சொல்கின்றார்கள். அரசாங்கம் திட்டமிட்டு உயிரிழப்புகளை மறைப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.

தினம் அரசாங்கம் தரும் உயிரிழப்புகளை விட உண்மையான இறப்பு விகிதம் பத்து மடங்கு இருக்கலாம் என்பதைப் பல்வேறு தரவுகளைக் கொண்டு அவர்கள் நிறுவி இருக்கின்றார்கள்.

எல்லாம் கை மீறி போய் விட்டது. மூளை சிந்திக்கும் திராணியுள்ள அனைவரும் பதை பதைக்கின்றார்கள். ஆட்சியும் அதிகாரமும் உள்ள நபர்கள் பிற்போக்கு கும்பலாய், அறிவியலைப் புறக்கணிக்கும் பேர்வழிகளாய், மனித உயிர்களைத் துச்சமாகப் பார்க்கும் ஈனர்களாய் உள்ள போது அதை எதிர்த்து கருத்தியல் தளத்தில் மட்டுமே போராட முடியும் என்ற முட்டுச் சந்தில் அவர்கள் நிற்கின்றார்கள்.

பல்லாண்டு காலமாய் உண்மைக்கும், போலி அறிவியலுக்கும் வித்தியாசம் தெரியாமல் அடிமைகளாய், ஆண்டைகளின் காலை நாக்கிப் பிழைப்பதைத் தனது வாழ்க்கையின் பாக்கியமாக கருதிய அடிமை கும்பல், சங்கி ஓநாய்களின் பொய் பரப்புரையை நம்பி மாட்டு மூத்திரத்தை குடிக்க முண்டி அடித்து நிற்கின்றார்கள்.

நம்மால் படிக்காத பாமர மக்களைக் கூட சொல்லி திருத்தி விட முடியும் ஆனால் வயிற்றுப் பிழைப்புக்காக அறிவியலைப் படித்துவிட்டு, அறிவியலின் அத்தனை வசதிகளையும் அனுபவித்துக் கொண்டு அதற்கு எதிராகவே பரப்புரைச் செய்யும் கேடு கெட்ட ஈனப் பிறவிகளை ஒரு நாளும் திருத்த முடியாது.

இன்று கொரோனோவுக்கு எதிராகப் போலி அறிவியலை முன் வைக்கும் அனைத்து சங்கி முட்டாள்களும் நக்கிப் பிழைக்கும் நாயினும் இழிந்த பிறவிகளே ஆவர்கள்.

மோடி ஆட்சியில் இந்தியா வல்லரசாகும் வல்லரசாகும் என்ற சங்கிகள் மூலைக்கு மூலை நின்று கொண்டு கத்திக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் நினைத்ததைப் போலவே மோடி இந்தியாவை வல்லரசு ஆக்கி விட்டார். பிணங்களை எரிக்கும் சுடுகாடுகள் மிக செழிப்பாக வளர்ந்து கொண்டு இருக்கின்றன.

குடிப்பதற்கு மாட்டு மூத்திரம் இருக்கின்றது, தின்பதற்கு மாட்டுச் சாணி இருக்கின்றது வேறு என்ன வேண்டும் இந்தியா வல்லரசு ஆக?.

- செ.கார்கி

Pin It