கோட்சேவை யோக்கியனாக்கிவிட முடியாது. அவன் தீவிரவாதிதான். இந்திய நாட்டின் இறையாண்மையைப் பாழ்படுத்த வகுப்புவாத கலவரத்தைத் தூண்டி, இந்தியாவை மத ரீதியாகப் பிரிக்க நினைத்த இந்துத்துவ காவி தீவிரவாதி கோட்சே என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. கமல் அவனைப் பற்றி பேசினாலும் பேசாவிட்டாலும் சரி அவன் தீவிரவாதிதான்.

ஆனால் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிக்குச் சென்று இந்து தீவிரவாதி என்று பொதுப்படையாகக் கூறியது நிச்சயமாக இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் செயலே. இஸ்லாமிய தீவிரவாதி என்று உலக, உள்ளுர் மீடியாக்கள், காவித் தீவிரவாதிகள் குறிப்பிடும்போது இஸ்லாமியர்களின் மனம் எப்படி புண்படுமோ, அதுபோலவே இந்து தீவிரவாதி என்று கூறியிருப்பது ஒட்டுமொத்த மதத்தையே புண்படுத்துவது போல அவர்களுக்கு இருந்திருக்கும். தீவிரவாதத்தை எந்த மதமும் விரும்புவதில்லை, அதனைப் பின்பற்றுபவர்களின் குறைபாடுக்காக அந்த மதத்தைக் குறை கூற இயலாது.

amit shah and modiபொதுவான சமூகம் உள்ள இடத்தில் அவர் சொல்லியிருந்தார் என்றால் கூட ஒத்துக் கொள்ளலாம். ஆனால் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்குச் சென்று இந்து தீவிரவாதி என்ற வார்த்தையை பிரயோகித்திருக்கக் கூடாது.

நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் பாசிசவாதிகளின் சூழ்ச்சிகள் என்னவென்று அறியாமல் எளிதில் நெருப்பினை உண்டாக்கும் வார்த்தையைப் பிரயோகித்தது தவறுதான் என்றாலும், இதனை நடுநிலைவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் போலியான இந்துத்துவவாதிகளும், பாஜகவினரும் பொங்குவதைப் பார்த்தால் ஆச்சர்யமாயிருக்கிறது . அவர்களுக்கு மறந்தால் ஞாபகமூட்டுவதற்காகவே இந்த வெறுப்பு பேச்சுக்களின் வரலாறுகள்:

இனவாதத்தைத் தூண்டும்படியான மதவெறுப்புப் பேச்சுக்களில் 50 சதவிகிதத்தை பாஜக எம் எல் ஏ க்கள் மற்றும் எம்பி. க்களே பேசியிருக்கிறார்கள்.

https://thewire.in/government/58-sitting-mlas-mps-face-hate-speech-cases-over-50-are-from-bjp-adr

மகேஷ் ஷர்மா ( பாஜக மத்திய கலாச்சார அமைச்சர்):

2015ம் ஆண்டில் இந்தியா டுடே பேட்டியின்போது முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பற்றிப் பேசும்போது, 'முஸ்லிமாக இருந்தபோதும்' அவர் ஒரு 'சிறந்த மனிதர்' என்றும், 'தேசியவாதி' என்றும், 'மனித நேயமுள்ளவர்' என்றும் முஸ்லிம்களுக்கு எதிராக விஷத்தைக் கக்கியபொழுது இவருக்கு எதிராக எந்த நடுநிலை நக்கிகளும் பொங்கவில்லை. எங்கே போனார்கள் இந்த இந்துத்துவா நடுநிலைவாதிகள்?

அனந்த் குமார் ஹெக்டே (பாஜக திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோருக்கான மத்திய அமைச்சர்):

2016ஆம் ஆண்டில் ஒரு பேட்டியின் போது, 'உலகில் இஸ்லாம் இருக்கும் வரையில் தீவிரவாதம் இருக்கும். இஸ்லாம் மதத்தை ஒழிக்கும் வரையில், நம்மால் தீவிரவாதத்தை அழிக்க முடியாது' என்று சொன்னார். மேலும், 'இஸ்லாம், உலக அமைதிக்கு எதிரான வெடிகுண்டு' என்றும் சொன்னார்.

சாத்வி நிரஞ்சன் (பாஜக உணவு பதப்படுத்துதல் தொழில்துறை மத்திய அமைச்சர்):

2014 டிசம்பர் இல் நடந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தபோது, இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் சட்ட விரோதமாகப் பிறந்தவர்கள் என்று பொருள் படும்படியாக 'ராமருக்குப் பிறந்தவர்களின் ஆட்சி வேண்டுமா, சட்ட விரோதமாகப் பிறந்தவர்களின் ஆட்சி வேண்டுமா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்' என்று கூறியபோது இவருக்கு எதிராக எந்த நடுநிலை நக்கிகளும் பொங்கவில்லை.

கிரிராஜ் சிங் (பாஜக சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை மத்திய அமைச்சர்):

2014, ஏப்ரல் 19 இல் நடந்த தேர்தல் கூட்டத்தில் மோடியை எதிர்ப்பவர்கள் எல்லோரும் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும் என்றும், முஸ்லிம்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்கின்றார்கள் என்றும் கூறி வெறுப்பை உமிழ்ந்தார்.

யோகி ஆதித்யநாத் (பாஜக உபி முதலமைச்சர்):

இஸ்லாமியர்கள் அனைவரும் 'பச்சைக் கிருமிகள்' என்றும், கங்கிரஸ் கட்சி 'அலி' மீது நம்பிக்கை வைத்தால் நாங்கள் 'பஜ்ரங் பலி' மீது நம்பிக்கை வைப்போம் என்றும், இறந்த முஸ்லிம் பெண்களின் உடலையும் தோண்டி எடுத்து கற்பழியுங்கள் என்றும் பொதுக்கூட்டத்தில் வைத்து இவன் பேசியபொழுது இவனுக்கு எதிராக எந்த நடுநிலை நக்கிகளும் பொங்கவில்லை

வினய் கத்தியார் (பஜ்ரங்தள், உ.பி. மாநிலங்களவை உறுப்பினர்)

'முஸ்லிம்களுக்கு (நிலத்தில்) அவர்கள் பங்கு கொடுக்கப்பட்டுவிட்டது. அவர்கள் பங்களாதேஷ் அல்லது பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும்' என்று வெறுப்பை உமிழ்ந்து பேசினார்.

விக்ரம் சிங் சைனி (பாஜக உ.பி. சட்டமன்ற உறுப்பினர்)

2013 - முசாபர்நகரில் பேசும்போது , இஸ்லாமியர்களை இங்கே தங்க வைத்ததால்தான் இவ்வளவு பிரச்சனைகள் நிலவுகிறது; அவர்கள் வெளியேற்றப்பட்டிருந்தால் இந்த பூமி நம்முடையதாக இருக்கும் என்று இஸ்லாமியர் மீது வெறுப்பை உமிழ்ந்து முசாபர் நகரில் கலவரத்திற்கு வித்திட்ட இந்த ஆண்டி இந்தியனுக்கு எதிராக எந்த நடுநிலை நக்கிகளும் பொங்கவில்லை.

அமித்ஷா (பாஜக தலைவர்):

முசாஃபர்நகர் கலவரத்தில் பழி தீர்ப்போம், முசுலீம்களை பாகிஸ்தானுக்கு விரட்டுவோம் என்று பகிரங்கமாக முழங்கியதோடு, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை செயல்படுத்துவதில் உறுதியாக இருக்கிறோம். இதன் மூலம், இந்து, சீக்கியர்கள் மற்றும் புத்த மதத்தினரைத் தவிர அனைத்து ஊடுருவல்காரர்களையும் இந்த நாட்டை விட்டு வெளியேற்றுவோம்' என்றும் அமித் ஷா பேசினார். ஊடுருபவர்கள் எவராக இருந்தாலும் வெளியேற்றுவோம் என்று கூறாமல் இஸ்லாமியர்களையும் கிறித்துவர்களையும் வெளியேற்றுவோம் என்று கூறி ஒட்டுமொத்த இந்திய இஸ்லாமியர்களின் கிறித்தவர்களின் மனதை காயப்படுத்தியவரை தங்கள் கட்சியின் தலைவராகவே வைத்திருக்கும் பாஜகவினருக்கு எதிராக எந்த நடுநிலை நக்கிகளும் பொங்கவில்லை.

ரஞ்சீத் பகதூர் ஸ்ரீவத்ஸ்வா (பாஜக உத்தரப் பிரதேச தலைவர்):

'இஸ்லாமியர்களின் மன உறுதியைத் தகர்க்க நமது பிரதமர் நரேந்திர மோடி முயற்சி செய்து வருகிறார். இஸ்லாமியர்களை அழிக்க வேண்டும் என்றால் மோடிக்கு வாக்களியுங்கள்' என்றும் இஸ்லாமியர்களை அகற்ற தங்கள் கட்சி சீனாவிலிருந்து இயந்திரம் ஒன்றை இறக்குமதி செய்யப் போகிறது. அதன் பிறகு அவர்களை வற்புறுத்தி இந்து மதத்திற்கு மாற்றி விடலாம்' என்றும் நேரிடையாகப் பேசினார்.

பிராக்யா சிங் தாக்கூர் ( பாஜக வேட்பாளர்):

'நாட்டிலிருந்த கறையை நாங்கள் அகற்றிவிட்டோம். நான் அந்தக் கட்டிடத்தின் மேல் ஏறி, அதை உடைத்தேன். அந்த இடத்தில் நிச்சயம் நாங்கள் ராமர் கோயிலைக் கட்டுவோம்' என்று கூறி பாபர் மசூதி இடிப்பைப் பெருமையாகக் கூறியவரும், மாலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்டு 10க்கும் மேற்பட்ட இந்தியர்களைக் கொன்ற தீவிரவாதியை வேட்பாளராக வைத்திருக்கும் பாஜகவிற்கு எதிராக எந்த நடுநிலை நக்கிகளும் பொங்கவில்லை.

மோடி (பாஜக பிரதமர்):

2002 குஜராத் இனப்படுகொலையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகக் கொல்லப்பட்டபோது, 'ஒரு நாய் அடிபட்டாலும் வருந்துவேன்' என்று முஸ்லிம்களை நாய்களுடன் ஒப்பிட்டு விஷம் கக்கியவருக்கு எதிராக எந்த நடுநிலை நக்கிகளும் பொங்கவில்லை. அப்போது எங்கே போனார்கள் இந்த இந்துத்வா நடுநிலைவாதிகள்?

இவற்றையெல்லாம் பேசியபொழுது எப்படி இஸ்லாமியர்களின் மனம் புண்பட்டிருக்கும் என்று நினைத்துப் பார்க்காமல் ,அதற்காக எந்தக் குரலும் கொடுக்காமல், தனக்கு வந்தால் ரத்தம் எதிரிக்கு என்றால் தக்காளிச் சட்னி என நினைத்து, போலித்தனமாய் கமலுக்கு மட்டும் பொங்கினீர்கள் என்றால்

Shit happens but you wipe your ass and move on....

- ரசிகவ் ஞானியார்