ராமனுக்கு இந்தியா கொடுத்த விலை மிகப்பெரியது. இன்று வரையிலும் கொடுத்தும் வருகின்றது. இந்திய அளவில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய மக்களின் உயிர்கள் ராமனின் அகோரப் பசிக்கு இரையாக்கப்பட்டதென்றால், தமிழகம் அதன் கனவுத் திட்டத்தை இந்த ஆரிய வந்தேறிகளின் புரட்டுக்கு விலையாகக் கொடுத்தது. தமிழ் மொழியையும், தமிழ் இனத்தையும் அழிப்பதையே தன் வாழ்நாள் இலக்காக வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் பார்ப்பனியம், இந்த நிமிடம் வரை அதைத் தொடர்ச்சியாக செய்துகொண்டுதான் இருக்கின்றது. மொத்த மக்கள் தொகையில் வெறும் மூன்று சதவீதம் இருக்கும் ஒரு கூட்டம், 97 சதவீத மக்களின் வாழ்க்கையை தனது சூழ்ச்சித் திட்டத்தால் அழித்துக் கொண்டிருக்கின்றது. ஒரு சில பார்ப்பனர்கள் தங்களை முழுவதுமாக பார்ப்பனியத்தின் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டதாக சொன்னாலும், மீதமுள்ள 99.999 சதவீத பார்ப்பனர்கள் நயவஞ்சகர்களாய், நாசகாரப் பேர்வழிகளாய் தமிழ்ச் சமூகத்தை தன்னுடைய பார்ப்பனிய நஞ்சால் அழித்துக் கொண்டிருப்பவர்களாகவே உள்ளார்கள். அவர்கள் தான் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள், நீட்டை ஆதரிப்பவர்கள், சாதிய ஆணவப் படுகொலைகளை ஆதரிப்பவர்கள், பெண்களைப் பாலியல் வல்லுறவு செய்வதை கட்சியின் ஒரு கொள்கையாகவே கொண்டவர்கள். இவர்கள் தான் தமிழனின் கனவுத் திட்டமான சேது சமுத்திரம் திட்டம் இன்றுவரையில் நிறைவேற்ற முடியாமல் இருப்பதற்குக் காரணமானவர்கள்.

sethu samuthiram project

தமிழர்களின் கனவுத்திட்டமான சேது சமுத்திரத் திட்டம் 1860 ஆம் ஆண்டு இந்திய கடற்படையின் கமாண்டர் டெய்லர் என்பவரின் சிந்தனையில் மலர்ந்த திட்டமாகும். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே இத்திட்டதை பல்வேறு காலங்களில் ஆய்வு செய்து ஒன்பது அறிக்கைகள் தரப்பட்டிருந்தன. பாக் நீரிணையையும் மணற்திட்டுக்களையும் 300 மீட்டர் அகலமும் 12.8 மீட்டர் ஆழமும் அகழ்ந்து இத்திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. 2005 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி இதன் தொடக்கவிழா மதுரையில் நடைபெற்றது. இந்தத் திட்டத்தின் மூலம் 400 கி.மீ தூரமும் 30 மணிநேரமும் மிச்சமாகியிருக்கும். இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருந்தால், 10 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 50,000 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைத்திருக்கும். மேலும் இந்தத் திட்டத்தால் இராமேஸ்வரம்,தொண்டி, சேதுபாவா சத்திரம், மல்லிப்பட்டினம், நாகை ஆகிய நகரங்களில் மீன்பிடித்துறைமுகங்கள், ரூ. 900 கோடி செலவில் 186 கி.மீ தூரம் மதுரை-இராமநாதபுரம்-தனுஷ்கோடி வரை நான்கு வழிச்சாலை, இராமேஸ்வரம்-முகுந்தராயர் சத்திரம் இடையே 2 கோடி செலவில் இருவழிச்சாலை போன்றவை வந்திருக்கும். இதனால் பெரும்பாலான கடலோர மாவட்டங்களின் பொருளாதாரம் பெருமளவில் வளர்ந்திருக்கும்.

ஆனால் தமிழர்கள் நன்றாக இருந்தால், அவர்கள் தங்களின் வாழ்க்கையில் முன்னேறிவிட்டால் அதை சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா ஆரிய வந்தேறி பார்ப்பனப் கும்பல்? அரக்கர்களின், அசுரர்களின், குரங்குகளின், சாம்புகன்களின், ஏகலைவன்களின் சூத்திர அத்துமீறலை தடுத்து நிறுத்த களத்தில் இறங்கியது. ‘இராம கர்ம பூமி இயக்கம்’ என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு மதவெறிப் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆதாம் பாலத்தை இராமர் பாலமாக மாற்றும் பார்ப்பன சூழ்ச்சி தொடங்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் அசோக் சிங்கால், பிரவீன் தொகாடியா போன்றவர்கள் மாநாட்டை நடத்தி விஷக் கருத்துக்களைப் பரப்பினர். ஜூலை 27 ஆம் தேதி மதுரையில் விஸ்வ இந்து பரிஷத் தலைமையில் மக்கள் எழுச்சி மாநாடு நடைபெற்றது. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழர்களின் கனவுத்திட்டத்தை பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் தடுத்து நிறுத்த முற்படும் இந்துமத வெறி அமைப்புகளுக்கு எதிராக “இராமன் என்ன எஞ்னியரா, அவர் எந்தக் கல்லூரியில் படித்தார்?” என்று கேட்ட கலைஞரை வேதாந்தி என்ற பரதேசி “தலையையும் நாக்கையும் துண்டித்து வந்தால் அதற்குச் சமமாக தங்கம் தருவேன்” என்றான்.

தமிழ்நாட்டில் எதையாவது செய்து காலூன்ற முடியுமா என கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்த ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பல், ஆதாம் பாலத்தை இராமர் பாலமாக மாற்றுவதன் மூலம் தமிழக மக்களின் மத உணர்வுகளைத் தூண்டி தாம் நினைத்ததை சாதித்துவிடலாம் என நினைத்தது. ஆனால் நடந்ததோ வேறு. திமுக தொண்டர்கள் காவிக் கூட்டத்திற்கு சரியான பதிலடி தந்து அவர்களின் எண்ணங்களில் மண்ணை அள்ளிப் போட்டார்கள். பின்னர் தமிழக மக்கள் மூலம் திட்டத்தை நிச்சயம் நிறுத்த முடியாது என்பதை உணர்ந்த காவிக்கும்பல், 2007 செப்டம்பரில் நீதிமன்றத்தில் முறையிட்டு நாற்பது சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் தடுத்து நிறுத்தியது. 2009 ஆம் ஆண்டு நவம்பரில் தமிழினத் துரோகி சு. சாமி “சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து தேசிய கடலாய்வு நிறுவனத்தின் நிபுணர்கள் குழு சந்தேகம் தெரிவித்துள்ளனர். எனவே சேது சமுத்திரத் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்” என்று உச்சிக்குடுமி நீதி மன்றத்தில் மனு போட்டான்.

ஒரு பக்கம் உச்சிக்குடுமி நீதிமன்றத்தின் மூலம் தடை பெற்றுவிட்டாலும், பொதுமக்கள் மத்தியில் கருத்தியல் ரீதியாக மோசடியான பொய்களை பரப்பும் தனது வேலையையும் காவிக்கும்பல் மேற்கொண்டது. இன்டோ லிங்க் காம் – வைஸ்ணவ நிறுவன நெட்வொர்க் என்ற இணையதளம் மூலம் “இராமர் பாலம் இருக்கின்றது என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா எடுத்த பாக் நீரிணையின் படம் ஒன்றை 2002 இல் வெளியிட்டு அங்கு தொன்மையான பாலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாகவும், அது மனிதரால் கட்டப்பட்டது போலிருப்பதாகவும்" அளந்துவிட்டார்கள். மேலும் இந்துத்துவ ஆதரவு இணைய தளங்கள் இப்பாலம் 17.5 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனவும், அக்காலத்தில் இலங்கையில் மனிதர் வாழ்ந்ததற்கான தொல்லியல் தடயங்கள் கிடைத்திருப்பதாகவும், அது இராமன் வாழ்ந்த திரேதாயுகம் என்று உறுதியாவதாகவும் கூறின. ஆனால் நாசாவின் விண்கோளால் எடுக்கப்பட்ட படங்கள் பற்றிய சர்ச்சையையடுத்து அந்நிறுவனத்தின் சார்பில் பேசிய மைக்கேல் பராகாஸ், இணையத்தில் வெளியிடப்பட்ட மன்னார் வளைகுடாவின் படம் தம் நிறுவனத்தால் எடுக்கப்பட்ட படம் என்றாலும், பரப்பப்படும் விளக்கங்கள் தம் நிறுவனத்துடையவை அல்ல என்று கூறி பாலம் பற்றிய வதந்திகளை மறுத்தார். மேலும், ஒரு புவியிலமைப்பின் காலம், உருவாக்கம், வளைகுடாவின் தொல்லியல் பற்றி அப்படங்களின் அடிப்படையில் எந்த முடிவிற்கும் வரமுடியாது என்பதையும் விளக்கிக் கூறினார். மார்க் ஹெல் என்ற மற்றொரு நாசா அதிகாரி மேற்கூறிய இணையதளங்கள் சுட்டிக்காட்டும் பகுதி இயற்கையாக அமைந்த மணற்திட்டுகள் என்று விளக்கினார். (மணல்மேல் கட்டிய பாலம் - சு.கி.ஜெயகரன்)

இந்தியப் புவியியல் மதிப்பாய்வு (Geological survey of india), இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO), சில பல்கலைக் கழகத்தைச் சார்ந்த பேராசிரியர்கள், தனிப்பட்ட புவியியல் ஆய்வாளர்களும் ஆதாமின் பாலம், இயற்கையில் உருவான அமைப்பு என்பதை அறிவியல் ஆதாரங்களுடன் தனித்தனியாகத் தெரிவித்துள்ளனர். அங்கு விரிவாகப் புவியியல் ஆய்வுகளுக்காக 2002 டிசம்பர் முதல் 2003 மார்ச் மாதம்வரை மேற்கொள்ளப்பட்ட செயல்திட்டத்தின் பெயர் ப்ராஜக்ட் ராமேஸ்வரம். அங்கு மேற்கொள்ளப்பட்ட புவியியல் ஆய்வுகளில், ஆய்வுத்துளைகளிடுவது, கடலடிப் பாறைகளை எடுத்து அவற்றைக் கால நிர்ணயம் செய்தல் போன்ற சோதனைகள் செய்யப்பட்டன. பாம்பன் தீவு ஏறத்தாழ ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவாக ஆரம்பித்தது என்றும், கடல் மட்டம் தாழ்ந்திருந்த போது ஆதாமின் பாலம் இலங்கையையும் தென்னிந்தியாவையும் இணைத்த நிலப்பரப்பின் ஒரு பகுதியாக இருந்தது என்றும், இலங்கை ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் தீவாகப் பரிணமித்தது என்பதையும் அவர்கள் அறிவியல் ஆதாரங்களுடன் அறிவித்தனர். (மேற்குறிப்பிட்ட நூல்).

ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தென்னிந்தியாவுடன் இணைந்திருந்த ஒரு நிலப்பரப்பிற்கு 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் இராமன் என்ன வெங்காயத்துக்கு பாலம் கட்டினான் என்ற கேள்வி, மானமுள்ள தமிழர்கள் மத்தியில் எழுந்ததும் ராமர் பாலத்தில் தோரியம், டைட்டானியம் போன்ற தாதுக்கள் பெருமளவு இருக்கின்றன, அதை எடுப்பதற்காக அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து முயற்சிக்கின்றார்கள் என்று பார்ப்பனப் புளுகை அவிழ்த்து விட்டார்கள். ஒரு புளுகு எடுபடவில்லை என்றால், அதற்கு மாற்றாக மற்றொரு புளுகை அவிழ்த்து விடுவார்கள். அதுவும் அம்பலப்பட்டுவிட்டால் அடுத்து, அடுத்து என்று புளுகுகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டே இருப்பார்கள். இதுதான் பார்ப்பனியத்தின் டிசைன்.

பாஜக மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதுதான் சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றி ஆய்வு மேற்கொள்ள அப்போதைய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த திரு. அருண் ஜேட்லி 9-3-2001 ஆம் ஆண்டு அனுமதி அளித்தார். இந்த ஆய்வுப் பொறுப்பு 2001 ஆண்டு அக்டோபரில் 'நீரி’ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. முரளி மனோகர் ஜோஷி, ராமேஸ்வரம் தீவு வழியாக சேது சமுத்திரக் கால்வாய் அகழ்வுப் பணிகள் வழி 4 மேற்கொள்ளப்படுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஆதரவு தெரிவிக்காததால் அத்திட்டம் வழி 4, 5 கைவிடப்பட்டது. இவ்வாறு கால்வாய் அமையும் வழி மற்றும் விரிவான வழிமுறைகள் வாஜ்பாய் அவர்கள் தலைமையிலான பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசினால்தான் பரிசீலிக்கப்பட்டு 6வது எண் பாதை முடிவு செய்யப்பட்டது.

அவர்கள் ஆட்சியில் இருந்த போது ஆதாம் பாலமாக மணல் திட்டாக இருந்தது, அவர்கள் ஆட்சியில் இல்லாதபோது இராமர் பாலமாக மாற்றப்பட்டது. 2014 ஆம் ஆண்டு மீண்டும் பாசிச பிஜேபி ஆட்சிக்கு வந்ததும் ராமர் பாலத்தை அகற்ற முடியாது என்றும், மாற்றுப்பாதையில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உச்சிக்குடுமி நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. பிஜேபியும் ஆர்.எஸ்.எஸ்.சும் ராமன் என்ற பிம்பத்தை தங்களுடைய அரசியல் அரிப்பை தீர்த்துக் கொள்ளவே எப்போதுமே பயன்படுத்தி வந்தனர், வருகின்றனர் என்பதை நாம் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இப்போது தெரிகின்றதா, ஏன் தமிழர்கள் ராமனை செருப்பால் அடிக்க வேண்டும் என்பது. தமிழர்கள் ராமனை செருப்பால் அடிப்பதன் மூலம் சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த முடியும். அதன் மூலம் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க முடியும். லட்சக்கணக்கான மீனவ மக்களின் வாழ்க்கை மேம்பட உதவ முடியும், சாம்புகன்கள் படிப்பதை ஒழிக்க நீட்டைத் திணித்த பார்ப்பன அயோக்கியர்களின் கொட்டத்தை அடக்க முடியும். இராமனை ஆதரிப்பதால் தமிழக மக்களுக்கு ஐந்து பைசாவுக்குக் கூட பிரயோசனம் இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் இருந்து விரட்டி அடிப்பதன் மூலம் ஒட்டுமொத்த தமிழகத்துக்குமே பெரும் நன்மை காத்துக் கிடக்கின்றது.

நீங்கள் குடிகாரனா? அப்படி என்றால் ராமனை ஆதரியுங்கள். நீங்கள் பெண்களுடன் விபச்சாரம் செய்பவரா? அப்படி என்றால் ராமனை ஆதரியுங்கள். நீங்கள் அடுத்தவன் மனைவியுடன் கள்ள உறவு வைத்திருப்பவரா? அப்படி என்றால் ராமனை ஆதரியுங்கள். நீங்கள் கட்டிய மனைவியை சந்தேகப்பட்டு நெருப்பில் இறங்கவும், அப்போதும் சந்தேகம் தீராமல் கர்ப்பமாக இருக்கும் மனைவியை கொடிய மிருகங்களுக்கு இரையாக்க காட்டில் விட்டுவிடுபவரா? அப்படி என்றால் ராமனை ஆதரியுங்கள். நீங்கள் சாதி வெறியனா? அப்படி என்றால் ராமனை ஆதரியுங்கள். இல்லை இதை எல்லாம் நாங்கள் ஆதரிக்க மாட்டோம், இது எல்லாம் சூடு சுரணையற்ற, பணத்திற்காகவும், பதவிக்காகவும் கூட்டிக் கொடுக்கவும் தயங்காத மாமா பயல்களின் செயல்கள், எங்களுக்கு தன்மானமும் சுயமரியாதையும் உள்ளது என்பவர்கள் பெரியாரையும், அம்பேத்கரையும் அவர்களின் சிந்தனைகளை ஏற்றுக் கொண்ட அமைப்புகளையும் ஆதரியுங்கள். அப்படி இல்லாத உலுத்துப் போனவர்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற நாட்டையும் நாட்டில் உள்ள பெண்களையும் வல்லுறவு செய்யும் தேச பக்தர்களுடன் இணைந்து பாரத மாதாவின் புகழை பரப்புங்கள்.

(முற்றும்)

- செ.கார்கி

Pin It