தமிழனை என்றுமே மானமுள்ள சுயமரியாதையுள்ள மனிதனாக மாறுவதற்கு விடக்கூடாது என்று, காலை விழித்ததில் இருந்து இரவு தூங்கப் போகும்வரை அவனை தனது கொடும்கரங்களால் இறுக பற்றிக் கொண்டு இருக்கின்றது பார்ப்பனியம். எதற்கு எடுத்தாலும் நல்ல நேரம் பார்க்கும் அளவிற்கு தமிழனை முட்டாள்களாக, சுயசிந்தனை அற்றவர்களாய் மாற்றி வைத்திருக்கின்றது. தமிழனின் பொருளாதாரத்தை உழைக்காமல் ஒட்ட சுரண்டி தின்ன பார்ப்பனக் கும்பல் நூற்றுக்கணக்கான ஆபாசத் திருவிழாக்களை ஏற்படுத்தி வைத்து, அதை எல்லாம் அவன் கொண்டாடினால்தான் வாழ்கையில் மோட்சம் அடைய முடியும்; இல்லை என்றால் நரகத்திற்கு சென்று நாசமாய்ப் போவான் என்று மிரட்டி அவனை வட்டிக்கு கடன் வாங்கியாவது கோயிலுக்கு வர வைக்கின்றது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக கோயிலுக்குப் போயும் தன் பரம்பரை பிச்சைக்காரத்தனமாகவே இருப்பதைப் பற்றியும், மணியாட்டும் பார்ப்பனின் மகன்கள் அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் செட்டில் ஆகி, கோடி கோடியாய் சம்பளம் பெறும்போது, தன்வீட்டுக் குழந்தைகள் ஒரு வேலை சோற்றுக்கே வழியற்று நோஞ்சானாய், சவலைகளாய் வாழ்வதைப் பற்றியும் பார்ப்பனியத்திடம் தன் மூளையைத் தொலைத்த தமிழன் யோசிப்பதே கிடையாது.
அப்படி தமிழனின் மண்டையில் இருக்கும் மூளையை எள்ளி நகையாடும் திருவிழாக்களில் மகாசிவராத்திரியும் ஒன்று. மாசிமாதம் தேய்பிறையில் 14 ஆம் நாளன்று இரவு மகா சிவராத்திரி கொண்டாடப்படுகின்றது. இதற்கென சொல்லப்படும் கதை என்ன என்று பார்ப்போம். "ஒரு சமயம் உலகம் முழுவதும் பிரளயத்தால் அழிக்கப்பட்டது. அப்போது தனது கணவர் சிவபெருமானை பூஜித்த பார்வதிதேவி அவரிடம் பின்வருமாறு பிரார்த்தித்தாள், ”ஜீவாத்மாக்கள், ஒரு மெழுகு உருண்டையில் மாட்டிக்கொண்டிருக்கும் தங்கத்துகள் போன்று , அண்டவெளியில் பிரளயத்தின் நீண்டகால இரவுப் பொழுதில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருகின்றன. அவர்கள் மீண்டும் இயக்கம் பெறும்போது, நான் தற்போது தங்களை வழிபடுவது போன்று வழிபட்டால், உங்களது நல்லாசிகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்”. பார்வதி தேவியின் பிரார்த்தனையை சிவன் ஏற்றார். பார்வதி தேவியால் குறிக்கப்பட்ட இந்த நாள், சிவபெருமானால் பிரளயம் ஏற்பட்ட அந்த நீண்ட இரவு, சாதாரண மக்களாகிய நாம் ஈஸ்வரனைப் பூஜிக்கும் மகாசிவராத்திரி எனும் பெயர்கொண்ட திருநாளாகும்”.(தென்னிந்திய திருவிழாக்கள்- பி.வி.ஜெகதீச அய்யர்).
சின்னக் குழந்தைகள் மண்ணில் வீடு செய்து இடித்து இடித்து விளையாடுவதைப் போன்று வேலைவெட்டி எதுவும் இல்லாமல் இருந்த சிவன் பிரளயத்தை ஏற்படுத்தி அனைவரையும் காரணமே இல்லாமல் சாகடிப்பதையும், பின்னால் பார்வதி பிரார்த்தித்தவுடன் மீண்டும் உலகை உண்டாக்குவதையும் ஒரு எண்டர்டைமென்டாக செய்துள்ளார். செய்ததோடு மட்டும் அல்லாமல், இந்தத் திருவிளையாடல்களை எல்லாம் வருங்கால பக்தகோடிகள் தெரிந்துகொள்ள வேண்டுமே என்ற நல்லெண்ணத்தில், பக்கத்திலேயே ஒரு படித்த பார்ப்பானை வைத்து தனது திருவிளையாடல்களை அதாவது சில்லரைத்தனமான சேட்டைகளை எல்லாம் ஆவணப்படுத்தியும் இருக்கின்றார் என்பதையும் மூளையுள்ள தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தச் சிவராத்திரி நிகழ்வு பற்றிய மேலும் இரண்டு புராணக் கதைகளும் சொல்லப்படுகின்றது. ஒரு சமயம் ஒரு வேடன் தன் குடும்பத்தினரின் உணவுக்குத் தேவைபடும் மாமிசத்தைக் கொண்டுவர வேட்டைக்குச் சென்றான்.அவன் காட்டில் காலை முதல் இரவு வரை அங்குமிங்கும் வேட்டைக்காக அலைந்தும் எந்த விலங்கும் சிக்கவில்லை. இரவு நேரமும் வந்துவிட்டது. ஒரு கொடிய மிருகம் வேடனைத் துரத்தி வந்தது. அதனிடமிருந்து தப்புவதற்காக அவன் சட்டென்று அருகிலிருந்த ஒரு வில்வமரத்தில் தாவி ஏறி உயரச் சென்றான். அந்த மிருகமும் அவன் எப்படியும் தூங்கிக் கீழே விழுவான் அல்லது களைப்படைந்து கீழே வருவான் என எண்ணி மரத்தடியில் படுத்துவிட்டது. அங்குமிங்கும் சுற்றியலைந்ததால் களைப்புற்றிருந்த வேடன் எப்படியாவது அந்த விலங்கைத் துரத்த எண்ணி வில்வ இலைகளைக் கொத்தாகப் பறித்து அதன்மேல் எறிந்தான். அப்போதுதான் பெய்திருந்த மழை காரணமாக இலைகளில் நீர் இருந்தது. வேடன் எறிந்த இலைகள் அருகிலிருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. அந்த இரவு மகாசிவராத்திரி தினமாக இருந்தது. வேடனும் காலை முதல் எந்த உணவும் உண்ணாமல் பட்டினியாக இருந்தான். மழைநீரில் நனைந்திருந்த வேடன் குளித்ததற்குச் சமமான நிலையில் வேறு இருந்தான். மொத்தத்தில் அவன் அப்படி எண்ணாவிட்டாலும், அவனது செயல் சிவபூஜை செய்ததற்கு ஒப்பானதாகிவிட்டது. இதன் காரணமாக அவன் சிவராத்திரி விரத பலனாகிய சொர்க்கத்தை அடைந்துவிட்டதாகக் கூறப்படுகின்றது. (மேற்படி நூல்).
இந்தக் கதையில் இருந்து பக்தகோடிகள் தெரிந்துகொள்ள இருக்கும் ஒரே செய்தி வேடன் காலையில் இருந்து இரவு வரை எதுவும் உண்ணாமல் இருந்ததாலும், மேலும் மழையில் முழுவதும் நனைந்திருந்தாலும், மாசி மாதம் பனிபொழியும் மாதம் என்பதாலும் வேடன் பசியும், குளிரும் தாங்கமுடியாமல் செத்துப் போய்விட்டான் என்பதுதான். மேலும் அப்படி பட்டினி கிடந்த வேடனுக்கு சோறு போடத் துப்பில்லாத சிவன் குறைந்தபட்சம் அந்த கொடிய விலங்கைக்கூட அங்கிருந்து துரத்த முடியாத கோழை என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பசியும், குளிரும் தாங்காமல் இறந்துபோன அப்பாவி வேடனை வைத்துக்கூட பார்ப்பனர்கள் தங்களுக்கு சாதகமாக கதைகளை எழுதி வைத்திருக்கின்றார்கள். ஒருவன் செத்தால்தான் சொர்க்கத்திற்குப் போக முடியும் என்பதை புரிந்துகொண்டால் அவன் தெரியாமல்செய்த சிவபூஜையால்தான் அவனுக்கு சாவு ஏற்பட்டது என்பதாகவும் தெரிந்துகொள்ளலாம். அதனால் குழந்தைகுட்டிகளோடு சிவராத்திரி விரதம் இருக்கும் பக்தகோடிகள் தாங்கள் மட்டும் அல்லாமல், தங்கள் குடும்பத்தையே செத்து சுடுகாடு போக வேண்டிக் கொள்கின்றார்கள் என்பதுதான் இதன் பொருள். அடுத்து இதைப் பற்றி சொல்லப்படும் இன்னொரு கதையையும் பார்க்கலாம்.
ஒருமுறை மிகுந்த கெட்ட குணங்களை உடைய ஒரு அந்தண இளைஞன் கொடிய செயல்கள் புரிந்தமைக்காக நாடுகடத்தப்பட்டான். ஒரு நாள் அவன் காலை முதல் இரவு வரை உண்பதற்கு ஒன்றும் கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்தான். சூரிய அஸ்தமனத்திற்குப் பின் அவன் ஒரு சிவன் கோயிலைக் கண்ணுற்று அதனுள் நுழைந்தான். கோயில் அர்ச்சகர் தெய்வத்தின் முன்பு நிவேதனங்களை வைத்திருந்தார். இவன் உட்சென்றபோது அங்கு யாரும் இருக்கவில்லை. யாரும் இல்லை என்பதை உணர்ந்த இளைஞன் நிவேதனங்களை எடுத்து சென்று வெளியில் உண்ணலாம் என நினைத்தான். அங்கிருந்த எண்ணெய் விளக்கு சரியாக எரியாததால் அதன் திரியைக் கிள்ளி சரிபடுத்திக்கொண்டிருந்தபோது அங்குவந்த அர்ச்சகர்கள், அவன் திருட்டைச் செய்வதற்கு முன்பே அவனைப் பிடித்துக் கொன்றுவிட்டனர். அவன் நேரடியாகச் சொர்க்கப்பதவி அடைந்துவிட்டான். ஏனெனில் அவன் பட்டினிகிடந்த அந்நாள் சிவராத்திரி தினம்; அதுமட்டுமன்று, திரியைக் கிள்ளி சரிபடுத்திய செயல் நிவேதனங்களை இறைவனுக்கு படைத்துவிட்டதற்குச் சமமானதாயிற்று. (மேற்படி நூல்)
இந்தக் கதையும் மேற்குறிய கதையைப் போலவே சிவன் ஒரு கையாலாகாத பேர்வழி என்பதையும், பார்ப்பான் சோத்துக்காக கொலையையும் செய்வான் என்பதையுமே காட்டுகின்றது. காலை முதல் இரவுவரை உண்ணாமல் இருந்த ஒருவனுக்கு உண்மையிலேயே உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் சிவனே கொஞ்சம் சாப்பாட்டை எடுத்துக் கொடுத்து, அவன் பசியை தீர்த்திருக்கலாம். ஆனால் எருமை மாட்டின் மீது மழை பெய்தமாதிரி சோற்றுக்காக ஒரு கொலை நடந்ததை வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த சிவன், அநியாயமாக கொல்லப்பட்டவனை தனது சக்தியால் பிழைக்க வைக்காமல் அவனை சொர்க்கத்திற்கு அதாவது சுடுகாட்டிற்கு அனுப்பி வைத்திருக்கின்றார். இதுதான் சிவனின் சக்தியின் யோக்கியதை. சிவபூஜையை நேரடியாக செய்தாலும், மறைமுகமாக செய்தாலும் நீங்கள் சொர்க்கத்திற்கு அதாவது சுடுகாட்டிற்குப் போகப்போவது உறுதி என்பதுதான் மேற்கண்ட இரண்டு கதைகளும் நமக்கு உணர்த்துகின்றன.
இந்த உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் சிவன்தான் படைத்ததாக சைவர்கள் கூறுகின்றார்கள். அந்தவகையில் பார்த்தால் சிவனிடம் வேண்டி உலகை மறுபடியும் படைக்க உதவிய பார்வதி சிவனின் மகளாகத்தான் இருக்க வேண்டும். காரணம் பார்வதியை சிவன் படைக்கவில்லை என்றால் வேறு யார் படைத்தது என்ற கேள்வி வரும். இல்லை, பார்வதியின் அப்பனைத்தான் சிவன் படைத்தார் என்றால், பார்வதி முறைப்படி சிவனின் பேத்தியாக இருக்க வேண்டும். தன்னுடைய மகளையோ, இல்லை பேத்தியையோ மணந்த சிவன் எவ்வளவு பெரிய பொறுக்கி என்பதையும் பெண்பித்தன் என்பதையும் சிவ பக்த கோடிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
இப்படி ஐந்து பைசாவுக்குக் கூட பிரயோசனம் இல்லாத வெட்டிக் கடவுளான பார்ப்பன சிவனை மானமும், சுயமரியாதையும் உள்ள தமிழர்கள் தூக்கி குப்பைத்தொட்டில் போடாமல் அதற்காக விடிய விடிய குழந்தை குட்டிகளோடு போய் பார்ப்பன கோயிலில் காத்துக் கிடப்பதை வெட்கக்கேடாக நினைக்க வேண்டும். வருடா வருடம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் வனங்களை அழித்து காட்டுவிலங்களைக் கொன்று மகாசிவராத்திரி என்ற பெயரில் கூத்தடிக்கும் ரவுடி சாமியார் வாசுதேவையே ஒன்றும் கிழிக்க முடியாத சிவன் உங்களுக்கு என்னத்தை கிழித்துவிடப்போகின்றார்? தமிழில் மந்திரங்கள் சொன்னால் மண்டையைப் போட்டுவிடும் பார்ப்பன சிவனை தமிழர்கள் சூடுசுரணை இல்லாமல் பார்ப்பானின் வைப்பாட்டிமகன் (சூத்திரன்) என்பதை ஏற்றுக்கொண்டு அதற்காக விரதமும் இருப்பது வெட்கம்கெட்ட இழிந்த செயலாகும். மானமும் சுயமரியாதையும் உள்ள தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.
- செ.கார்கி