வளரும் நாடுகளின் விவசாய விளைபொருட்களின் விலை உயரக்கூடாது என்பதில் அமெரிக்க அரசு மிகவும் உறுதியாக உள்ளது.இந்திய அரசும்,1980களில் இருந்து அமெரிக்காவிற்கு விசுவாசமாகவே நடந்து கொண்டுள்ளது.

2016-2017 க்கான  நெல் விலை( பொது) குவிண்டால்   ரூ.1470/=                                                           

தேவிந்தர் சர்மாவின் பரிந்துரை  ரூ 5100/=               

நாம் கேட்கும் விலை       ரூ 6000/=       

நெல்விலையை  சரியான விலையில்  கால்பங்காக ஏன் நிர்ணயிக்கிறது இந்திய அரசு ? அந்த அதிகாரிகளுக்கு தொழில் அறிவு உண்டா ? விவசாயிகளை ஏமாற்றி எடுக்கும் இந்தப்பணம் மத்திய அரசுக்கு  சேர்கிறதா?

ஒரு ஏக்கரில் 20 குவிண்டால் நெல் விளைந்தால் உழவர் இழப்பது ரூ90,600/=  சுமார் 10கோடி ஏக்கர்களில் நெல்பயிரிடும் இந்திய உழவர்கள் ஒருபோக சாகுபடியில் இழப்பது ரூ 9 லட்சம் கோடிகள். முப்போகத்தில் இழப்பது சுமார் 27லட்சம் கோடிகள் .எல்லா பயிர்களிலும் இழப்பது 540 லட்சம் கோடிகள்.       

சுமார் 45 லட்சம் ஏக்கர்களில் நெல் பயிரிடும் தமிழக உழவர்கள்  ஒரு போக சாகுபடியில் இழப்பது ரூ 41,000 கோடிகள். முப்போக சாகுபடியில் இழப்பது ஒரு ஆண்டில் இழப்பது ரூ. 1,23,000 கோடி -கள். கரும்பு,தானியங்கள்,பருப்பு என அனைத்து சாகுபடிகளிலும் இழப்பது ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் கோடிகளுக்கு மேல்.  

பயிர்க்கடன்,கல்விக்கடன், நகைக்கடன்,டிராக்டர் கடன்,போர்வேல் கடன் என்று வட்டி உழவர்களை கொன்றது இந்திய அரசு. உழவர்கள் பெற்ற மொத்த கடன் தொகை எவ்வளவு?இந்த கடன் பெற வேண்டிய அவசியமே இல்லை. விளைபொருட்களுக்கு சரியான விலைகிடைத்தால் உழவர்களால் அரசுக்கு கடன் தரமுடியும்.தொழில்களில் முதலீடு செய்யமுடியும்.

உழவன் உற்பத்தி செய்யும் எல்லா விளைபொருளையும் இப்படித் தான் இந்திய அரசு  விலையை அடித்து நிர்ணயிக்கிறது. சந்தையில் இதைவிட மேலும் குறைத்துவாங்கும் வேலைதான் நடக்கிறது ?  ஏன் இந்த விலைக்குறைப்பு?

வாங்கி சாப்பிடுகிற ஏழைபாழைகள்  உணவின் விலை அதிகமானால் என்ன செய்வார்கள் ? .....ஏன்? தனியார், அரசுத்துறை ஏழைகளுக்கு அகவிலைப்படி கிடைக்கிறது. நெல் விலை உயர்ந்தால்  உழவுத்தொழிலாளியின் ஊதியத்தை மூன்று மடங்கு உயர்த்தமுடியும்.உழவுத்தொழிலாளிக்கும் சிக்கல் இல்லை. முறை சாராத தொழிலாளிகளுக்கு அகவிலைப்படி கொடு.  .

எல்லா விளைபொருள்களுக்கும்  விலையை உயர்த்தினால் 100 லட்சம் கோடி போல வருமே?

"வரும்தான். கொடு."  

ஐயோ. பணவீக்கம் சந்திரனைத் தொடுமே. "

" சரி எங்களுக்கு தரவேண்டிய பாக்கியை வங்கியில் போடு.  இல்லை தங்கமாகக் கொடு. உனது கம்பெனிகளில் பங்குகளாகக் கொடு. கொடுக்காமல் மட்டும் இனியும் ஏமாற்றமுடியாது."  

இந்திய அரசே!  நான் 6 லட்சம் ரூபாய்க்கு  டிராக்டர் வாங்குகிறேன்.எதற்கு இன்னும் ஒரு 6 லட்சம் அளவுக்கு வட்டி கட்டவேண்டும்? என் பணத்தைக் கொடுத்து விட்டால் கடனும் வேண்டாம். வட்டியும் வேண்டாமே.உனது வங்கிகள் நாசமாகப் போகட்டுமே.அன்னிய வங்கிகளும் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு வருகிறார்களே.

இந்திய அரசே  6 லட்சம் ரூபாய்க்கு சரியான விலைக்கு நெல் விற்றால் 100 மூட்டை நெல் போதும்.  100 * 6000= 6 லட்சம். இப்போது சுமார் 400 மூட்டை நெல்லை நான் அழவேண்டும்.  இந்த 300 மூட்டை நெல்லை குருக்குவழியில் உனது அமெரிக்க எசமானர்கள் கொள்ளையடிக்கிறார்கள் என்கிறேன். அதனால்தான் அமெரிக்க அரசு வளரும் நாடுகளில் விளைபொருள் விலை குறைத்தே இருக்கவேண்டும் என்று வாதிக்கிறார்கள். ( அமெரிக்க உழவனுக்கு சந்தை விலை கொடுக்கப்படும். ஆனால் பல்வேறு அரச மானியங்களும் தரப்படுகின்றது) பாரத் மாதா என்று வணங்கும் பக்த சிகாமணிகளே ? பாரத கலாசாரம், இந்து கலாச்சாரம் என்று வீராவேசமாக முழங்குகிறீர்கள். இந்திய உழவர்களைச் சேர வேண்டிய  லட்சம்-கோடி ரூபாய்களை அன்னியன் கொள்ளையிட அனுமதிப்பதற்கு நீங்கள் பெறும் கைக்கூலி எவ்வளவு?

எந்த நாயிடமும் ஒரு பைசா லஞ்சம் வாங்காத உழவர்களை வங்கிகள் எவ்வளவு கேவலப்படுத்துகின்றன?  அவர்கள் வருகிறார்கள் .அவர்களிடம் அழுக்கான உடைகள்தான் உள்ளன.அவர்கள் கால்களில் பிய்ந்துபோன செருப்புகள்தான் உள்ளன. உனது பொருளாதார மேதைகள்.வேளாண் நிபுணர்கள் ஆகியோரையும் கூப்பிட்டு வைத்துகொள். கொடுக்கவேண்டிய பாக்கிக்கு பதில் சொல்.

பொருளாதார நிபுணர்களே !

நியாயமாக உழவர்களுக்கு சேரவேண்டிய தொகையை தந்தால், உழவுத் தொழிலாளர்களின் ஊதியம் உயரும். கிராமத்தை சார்ந்து நிற்கும் சிறுதொழில்கள், வணிகம் செழிக்கும் பல்வேறு சேவைகள் செழுமைப்படும். இந்திய மக்கள் தொகையில்  சுமார் 70% மக்களின் வாங்கும் சக்தி பெருகும். தொழில்துறைக்கு உள்நாட்டு சந்தை விரிவடையும். மண்,மலை,காடுகள் ஆகியவைகளை , நாட்டின் வளங்களை,கனிமங்களை  ஏலமிட்டு விற்க ஒரு வேசையைப்போல இந்த நாடு உலகநாடுகளை அணுக வேண்டியதில்லை. உழவர்களின் மூலதனச்சேர்க்கை உழவுத்தொழில் சார்ந்த பல்வேறு தொழில்களை துவங்கும்.

தவறு என்றால் நிபுணர்களாக நின்று திருத்துங்கள்.. இயலாது என்றால் இந்த நாட்டை அன்னிய சக்திகளுக்கு அடகு வைத்து நாசமாக்கியதற்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். 

Pin It