நீங்கள் தமிழ்நாட்டில் எவ்வளவோ முன்னணிகளைப் பார்த்திருக்கின்றீர்கள். ஆனால் அதை எல்லாம் பின்னணிக்குத் தள்ளிவிட்டு, தமிழ்நாட்டில் தற்போது முன்னணியில் இருப்பது இந்த ‘பிரியாணி திருடர்கள் முன்னணி’தான். “சார் இப்படி ஒரு கேவலமான பேர் வைச்சி இருக்கின்ற கட்சியை நான் வாழ்நாளில் பார்த்ததும் இல்லை; கேள்விப்பட்டதும் இல்லை” என நீங்கள் நினைக்கலாம். ஆனால் கொஞ்சம் உங்கள் மனதை கல்லாக்கிக் கொண்டு, இந்த உண்மையை நீங்கள் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். பிரியாணியைத் திருடி தின்பதற்கென்றே ஒரு தரித்திரம் பிடித்த இயக்கம் தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. அந்த இயக்கத்தின் பழைய பெயர் இந்து முன்னணி என்று சொல்வார்கள்.

 இப்படி பிரியாணியைத் திருடி தின்பதற்குப் பதில் எங்கேயாவது போய் பிச்சை எடுக்கலாம், இல்லை என்றால் வேறு எதையாவது போய் திங்கலாம் என்று சுயமரியாதை உள்ள நீங்கள் நினைப்பது தெரிகின்றது. ஆனால் சுயமரியாதை என்ற ஒன்றே இல்லாத மானங்கெட்ட மனிதர்களிடம் அதை நாம் எதிர்பார்க்க முடியாது அல்லவா? ஆம் தோழர்களே! சுயமரியாதை என்பது மிக முக்கியம். இப்போது நமக்கு கோபம் வந்து  நம் எதிரியிடம் “உன் வீட்டில் சோறு தின்பதற்குப் பதில் நான் பீயைத் திங்கலாம்” என்று சொல்லிவிட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்... அடுத்து நாம் என்ன செய்வோம், மானமுள்ள மனிதனாக இருந்தால் சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டுமே என்பதற்காக சாப்பிடாமல் வந்து விடுவோம். ஆனால்  சிலருக்குச் சூடு, சுரணை எல்லாம் கொஞ்சம் கம்மியாக இருக்கும். அதுபோன்றவர்கள் சொன்னதை மறந்துவிட்டு போய் தின்றுவிடுவார்கள். இந்த ஜன்மங்களைக் கூட நாம் மன்னித்துவிடலாம். ஆனால் எதிரியிடம் உன் வீட்டில் சோறு தின்ன மாட்டேன் என்று சொல்லிவிட்டு வந்து, அவனது மலத்தைத் தின்றால் எப்படி இருக்கும்?அபச்சாரம் அபச்சாரம் என்கின்றீர்களா அப்படி என்றால் கீழே உள்ளதைப் படித்துவிட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள்.

hindu munnani briyani

“மனித மலத்தை வேண்டுமானாலும் சாப்பிடட்டும்... எங்களுக்கு ஆட்சேபனை கிடையாது. ஆனால் இந்துக்கள் புனிதமாய் நினைக்கும் பசுவைத் தின்றால் அதற்கான எதிர்வினையை சந்தித்தே ஆக வேண்டும்”. இப்படி சொன்ன அந்த மானமுள்ள மனிதன் வேறு யாருமல்ல, வீரத்துறவி ராமகோபலன் தான். ‘உங்கள் பத்திரிக்கையை’ச் சேர்ந்த நிருபர் மாட்டுக்கறி உண்டதாகச் சொல்லி இஸ்லாமியர் ஒருவர் உ.பியில் கொலை செய்யப்பட்டிருக்கிறாரே... அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கான பதில் தான் அது. அப்படி என்றால் ராமகோபாலனைப் பொருத்தவரை மாட்டுக்கறி தின்பதற்குப் பதில் மனித மலத்தைத் திங்கலாம் என்பதுதான். மாட்டுக்கறி தின்பவர்களுக்கு எதிராக இவ்வளவு கேவலமாகப் பேசிய இந்த பார்ப்பன கேடிப்பயல், தான் நடத்தும் கட்சியை எப்படி வைத்திருக்க வேண்டும்?

  கடந்த 22 ஆம் தேதி கோவை மாவட்டத்தில் இந்து முன்னணி செய்தித் தொடர்பாளராக இருந்த சசிக்குமார் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். கொலை செய்தவர்கள் யார் என்று இதுவரை காவல்துறை கண்டுபிடிக்கவில்லை. ஆனால் சுவாதி கொலையை எப்படி பிலால் மாலிக்தான் செய்திருப்பான் என்று சில பார்ப்பன மூளைகள் தங்களுடைய ஞானத்தின் மூலம் கண்டுபிடித்து சொன்னதோ, அதே போல சசிக்குமாரை நிச்சயம் இஸ்லாமிய அமைப்புகள் தான் திட்டமிட்டு கொலை செய்திருக்க வேண்டும் என பார்ப்பன ராமகோபாலன் தன்னுடைய பார்ப்பன ஞானத்தின் மூலம் உணர்ந்து தன்னுடைய கூலிப்படையான குரங்குக் கூட்டத்தை ஏவி கோவை முழுவதும் பெரும் கலவரத்தை தூண்டி விட்டிருக்கின்றான்.

 இந்தக் குரங்குக் கூட்டம் 200க்கும் மேற்பட்ட கடைகளை அடித்து நொறுக்கி, 60க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்து, 20க்கும் மேற்பட்ட ஆட்டோ, கார்களை உடைத்து, ஒரு போலீஸ் ஜீப்பிற்கு தீ வைத்துள்ளது. 5 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. முஸ்லீம்களின் கடைகள் திட்டமிட்டு குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன. செத்துப்போன சசிக்குமார் மீது எவ்வளவு அன்பு இருந்தால் இப்படி செய்திருப்பார்கள் என்று நீங்கள் நினைத்து விடாதீர்கள். இவ்வளவு பெரிய கலவரமும் ஒரு மையத்தை நோக்கி திட்டமிட்ட முறையில் நடத்தி இருக்கின்றார்கள்.

துடியலூரில் பூட்டி இருந்த ஒரு செல்போன் கடைக்குள் புகுந்த இந்து முன்னணி குரங்குக் கூட்டம், அங்கிருந்த செல்போன்கள் அனைத்தையும் திருடிச் சென்றுள்ளது. இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இது கூட பரவாயில்லை... அங்கிருந்த ஆஜ்மீர் பிரியாணி கடைக்குள் நுழைந்து, அங்கிருந்த அண்டா நிறைய பீப் பிரியாணியை அப்படியே தூக்கிச் சென்று சசிகுமார் இறந்த துக்கத்தைத் தாங்காமல் வயிறு புடைக்கத் தின்றுள்ளது. அட, பிச்சைக்கார பசங்களா இப்படி திருடி திங்கறதுக்கு பதில் லத்திய திங்கலாம் என வடிவேலு போல உங்களுக்கும், கேட்கத் தோன்றலாம். நீங்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் ராமகோபாலன் ஏற்கனவே மாட்டுக்கறிக்குப் பதில் மனித மலத்தைத் திங்கலாம் என சொல்லியுள்ளதால் இந்து முன்னணி குரங்குகள் மலத்தைத் தின்றதாகவே  நாம் எடுத்துக்கொள்ளலாம். பசுவைத் தின்றால் எதிர்வினையைச் சந்தித்தே ஆகவேண்டும் என எச்சரிக்கைவிட்ட இந்தக் காலிப்பயல் பீப் பிரியாணியைத் திருடித் தின்ற அவனது கட்சிக்காரர்களை என்ன செய்யப் போகின்றான்? ஒரு வேளை அவன் சொன்னது போலவே மனித மலத்தை திங்கப் போகின்றானா?

    இந்து முன்னணியினர் அதிகம் உள்ள பகுதிகளில்  வாழும் இஸ்லாமியத் தோழர்கள் தங்கள் கடைகளில் வைத்திருக்கும் பீப் பிரியாணியைப் பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். பிச்சைக்காரர்களை விட மிக மோசமானவர்கள் இந்த பிரியாணி திருடர்கள். பிச்சைக்காரன் கூட தனது வயிற்றுக்கு மேல் எதையும் எதிர்பார்க்க மாட்டான். ஆனால் இந்த பிரியாணி திருடர்கள் அண்டாவோடு சேர்த்து பிரியாணியை திருடிக் கொண்டு போகிறவர்கள். ஒரு வேளை இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான் ராமகோபாலன் தனது இயக்கத்துக்கு இந்து முன்னணி என்று பெயர் வைத்தார் என்று நினைக்கின்றேன். ஏனென்றால் இந்து என்ற பாரசீக சொல்லுக்கு திருடன் என்று பொருள். திருடன் என்பது மட்டும் அல்ல வழிப்பறி செய்பவன், அடிமை போன்ற பெயர்களும் உள்ளன. அப்படி என்றால் இந்து முன்னணி என்பது திருடர்கள் முன்னணி, வழிப்பறிகாரர்களின் முன்னணி, அடிமைகளின் முன்னணி என்றெல்லாம் பொருள்வருமா என்று நீங்கள் கேட்கலாம். கோவையில் அவர்கள் நடத்திய கலவரத்தில் திருடுவது, வழிப்பறி செய்வது என அனைத்தையுமே இந்தப் பார்ப்பன அடிமைகள் செய்து அந்த வார்த்தைக்கான உண்மையான அர்த்தத்தை தந்திருக்கின்றார்கள்.

 அதனால் இனி இந்து முன்னணி என்பதை பிரியாணி திருடர்கள் முன்னணி என்றோ, இல்லை செல்போன் திருடர்கள் முன்னணி என்றோ, இல்லை பொதுவாக திருடர்கள் முன்னணி என்றோ நீங்கள் அழைக்க வேண்டும். அப்போதுதான் வீரத்துறவி ராமகோபாலன் அவர்கள் மகிழ்ச்சி அடைவார். ஏனென்றால் அவர் தானே இந்த திருடர் கூட்டத்திற்கு எல்லாம் தலைவர்.

- செ.கார்கி

Pin It