தமிழக அரசே நடவடிக்கை எடு!
பொது மக்களே நடவடிக்கை எடுப்போம்!
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகில் அமைந்துள்ளது முருகன் திருத்தலமான சிவன்மலை! இந்த சிவன்மலைமுருகன் கோவிலையொட்டி (புல எண் 654,655,656/1,657/5,8) புன்செய் ஏக்கர் 16.68 ½ பரப்புள்ள விவசாய நிலத்தை என்.எஸ்.என் நடராஜ் தனது பினாமி மூலம் வாங்கியுள்ளார்.
இந்த நிலம் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்ட ஆயக்கட்டிற்கு உட்பட்ட பாசன விவசாய நிலம் என வருவாய்த்துறை பதிவேடுகளில் உள்ளது (ந.க 6890/15/அ 03.09.2015) வட்டாட்சியர் அலுவலகம் காங்கயம்.
1) பி.ஏ.பி பாசன விவசாய நிலத்தை அரசின் முறையான ஒப்புதல் இன்றி வீட்டுமனையாக மாற்றியது முதல் குற்றம்.
2) வீட்டுமனை என மாற்றி “நெசவாளர் குடியிருப்புத் திட்டம்” எனப் பெயர் வைத்து ரசீது புத்தகங்கள் அடித்து தமிழக அரசின் நெசவாளர் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் பசுமை வீடு கட்டித் தருகிறேன் என பொதுமக்களை ஏமாற்றி மனையிடங்களை ஒரு மனையின் விலை (3 சென்ட்) 1.30 லட்சம் என்று விலைபேசி விற்றுவிட்டனர்.
3) ஆனால் நெசவாளர் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் இது வராது என அதிகாரிகள் அறிவித்து விட்டனர். இப்பொழுது 350 ஏழை உழைப்பாளிக் குடும்பங்கள் கொள்ளைக்கார அதிமுக MLA என்.எஸ்.என் நடராஜனால் ஏமாற்றப்பட்டுள்ளனர், இது இரண்டாவது குற்றம் (பணம் கட்டிய இரசீதுகள் உள்ளன).
4) நெசவாளர் குடியிருப்புத் திட்டத்தை அம்மா நகர் சிவன்மலை என்று மாற்றி அரசை மோசடி செய்ய நிலத்தின் வழிகாட்டு மதிப்பைகுறைத்து போட வைத்து பத்திர பதிவில் பல கோடி ரூபாய் மோசடி செய்து அரசின் வருவாயை தட்டிப் பறித்து மூன்றாவது குற்றம். (மு.மு.எண் 1129/ஆ1/2015 நாள்:15.06.2015) (ந.க.எண் 2518/வ.கா/2015 நாள்:15.04.2015) பதிவுத்துறை கடிதங்கள்.
5) சிவன்மலை கிராமம் 1456 என்பது கனிமவளத்துறைக்கு சொந்தமான நிலம் .இந்த நிலத்திலிருந்து சும்மார் 300 லாரி மண்ணை திருட்டுத்தனமாக அள்ளி தனது நிலத்தில் கொட்டி மேம்பாடு செய்து மனையிடமாக மாற்றியுள்ளனர் இந்த காங்கயம் மக்கள் பிரதிநிதி என்.எஸ்.என் நடராஜ்.
அரசின் சொத்தை பாதுகாக்க வேண்டிய பொதுநல ஊழியர் தனது பதவி அதிகாரத்தை பயண்படுத்தி கணிமவலத்தை கொள்ளையடித்து பல கோடி ரூபாய் ஆதாயம் அடைந்துள்ளனர். இது நான்காவது குற்றம் (ந.க 2424/15/அ2/ நாள்: 15.07.2015 வட்டாச்சியர் அலுவலகம் காங்கயம்).
27.04.15 அன்று சார்பதிவாளர் பரிந்துரைக்கும் மதிப்பு ரூ60/645.
அம்மா நகருக்கு 15.06.15 அன்று துணைபதி துறைத்தலைவர் கோவை மண்டனம் நிர்ணயிக்கும் மதிப்பு சதுரடி ரூ 35/-
- தனது ஊழல் அம்பலமானவுடன் பாதிக்கப்பட்ட மக்கள் வெளியில் உண்மைகளை சொல்ல விடாமல் அச்சுறுத்தி வருகிறார் . உண்மையை வெளிக்கொண்டு வர உதவும் நேர்மையான அரசு அதிகாரிகளை தனது பதவி, பண செல்வாக்கை வைத்து சொல்ல முடியாத இன்னல்களுக்கு ஆளாக்கி , அச்சுறுத்தி உண்மையை மூடிமறைக்க வைக்கிறார், இந்த என்.எஸ்.என் நடராஜ். இது ஐந்தாவது குற்றம்.
ஏற்கனவே சென்னிமலை கும்பாபிஷேக விழாவைப் பயண்படுத்தி பல கோடி ரூபாய்க மோசடி செய்த இந்த என்.எஸ்.என் நடராஜ் மீது வழக்கு நிலுவையில் உள்ளது (WP 40119/2015).
காங்கயத்தை சுற்றிலும் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்களை மோசடி செய்து வாங்கிக் குவித்து புதிய பட்டக்காரராக உருவெடுத்து வருகிறார் இந்த நெய்காரன்பாளையம் ஏழை விவசாயி சாமியப்பகவுண்டர் மகன் என்.எஸ்.என் நடராஜன். பல நூறு கோடி சொத்து சேர்த்துவிட்ட என்.எஸ்.என் நடராஜன் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக கட்சியும், அதிமுக அரசும் தயாராக இல்லை!
இந்த மோசடிப் பேர்வழி என்,எஸ்.என் நடராஜன் மீண்டும் ஓட்டுப் பிச்சை கேட்டு மக்களிடம் வரும் காலம் வெகு தூரத்தில் இல்லை “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்ற தமிழ் நெறிப்படி தண்டனை கொடுக்க தயாராவோம் காங்கயம் தொகுதி வாக்காள பெருமக்களே!
கி.வே.பொன்னையன்,
தற்சார்பு விவசாயிகள் சங்கம்,
அலைபேசி: 9788648605,