கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

http://www.vinavu.com/2015/10/05/lottery-mafia-santiago-martin/

மே பதினேழு இயக்கத் தோழர்கள் குறித்த அவதூறுகளை செய்தியாக்கி கட்டுரையை வடிவமைத்து ம.க.இ.க வெளியிட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. ஒரு புரட்சிகர இயக்கத்தின் எந்த ஒரு சனநாயகத் தன்மையுமற்று, அவதூறுகளை ஆதாரங்களாக ஒரு செய்தியைக் கட்டமைப்பதும், தினமலர் போன்ற மூன்றாம் தர பத்திரிக்கைகளின் செய்தித்தன்மையும் வேறுவேறானதல்ல. தினமலரினைப் போலல்லாமல் ஒரு சனநாயக புரட்சிகர செயலுக்கான இயக்கமாக ம.க.இ.க தலைமைக்குழு கருதுமானால், மே பதினேழு இயக்கத்தின் மீது வைத்த அவதூறுக்கான ஆதாரத்தினை வெளியிடுவது அதன் கடமையாகிறது. ம.க.இ.கவின் தோழர்களே! உங்களின் புரட்சிகர நேர்மையை வெளிப்படுத்துங்கள்.

- மே பதினேழு இயக்கம்