சித்ரா பவுர்ணமியையொட்டி மாமல்லபுரத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் வருடந்தோறும் இளைஞர் பெருவிழா மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் பாமக சார்பில் கடந்த 25ம் தேதி இளைஞர் பெருவிழா மாநாடு ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. இதில் பங்கேற்க நாகை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து புதுச்சேரி வழியாக மாமல்லபுரத்திற்கு புறப்பட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் மரக்காணத்தில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இக்கலவரத்தில் அரசுப் பேருந்துகள் உட்பட 5க்கும் மேற்பட்ட தனியார் வாகனங்கள் தீ வைக்கப்பட்டுள்ளன. பயணிகள் பலர் காய மடைந்துள்ளனர். மரக்காணம் காலனியிலுள்ள தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவர்களின் வீடுகளுக்கும் வன்முறையாளர்கள் தீ வைத்துள்ளனர்.

ஒவ்வொரு முறையும் சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு மாமல்லபுரத்தில் பாமக மாநாடு நடத்தும்போதெல்லாம் மரக்காணம் பகுதியில் பதட்ட நிலை உருவாகும். அவ்வழியாக மாமல்லபுரத்திற்கு பயணிக்கும் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்கின்றனர் மரக்காணம் பகுதி மக்கள். இந்த முறை மரக்காணத்தையும் தாண்டி அருகாமையிலுள்ள கூனிமேடு என்ற கிராமத்திலும் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதோடு, அங்கிருந்த கடைகளை அடித்து நொறுக்கி, கறிக்கடை ஒன்றையும் தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர்.

சித்ரா பவுர்ணமி விழா என்ற பெயரில் நடத்தப்படும் மாநாட்டில் வன்முறையையும் சாதி வெறியையும் தூண்டும் வகையில் பாமக தலைவர்கள் பேசி வருகின்றனர். இப்படியான பேச்சுகள் அக்கட்சியின் தொண்டர்களிடையே வன்முறையாக வெளிப்படுகிறது.

கடந்த முறை மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் பெரு விழாவில் "வன்னிய பெண்களை கலப்புத் திருமணம் செய்யும் அந்நியர்களின் கையை வெட்டுவோம்' என வன்னியர் சங்கத் தலைவரான காடுவெட்டி குரு பேசியிருந்தார். குருவின் பேச்சுதான் தருமபுரி கலவரத்திற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் அப்போதே சுட்டிக் காட்டினர்.

கடந்த எட்டு மாதங்களாக தமிழகமெங்கும் வன்முறையைத் தூண்டும் வகையில் பாமக தலைவர்கள் பேசி வந்த நிலையில், மாமல்லபுரம் இளைஞர் பெருவிழாவிற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்திருந்தது. ஆனாலும் தடையை மீறி இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினரின் தலித் மற்றும் முஸ்லிம்கள் மீதான வன்முறையை வன்மையாக கண்டிப்பதோடு, இனி வரும் காலங்களில் இதுபோன்ற மாநாடுகளுக்கு அனுமதி அளிக்கும் மாவட்ட நிர்வாகம், வன்முறைகள் நிகழாத வண்ணம், சம்மந்தப்பட்ட பகுதிகளில் குறிப்பாக மரக்காணம் பகுதிகளில் முன்கூட்டியே போலீஸ் படைகளை குவித்து பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும், தமிழக அரசு இது குறித்து காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கு உரிய ஆலோசனைகளையும் உத்தரவுகளையும் வழங்க வேண்டும் என்றும் வன்முறையில் ஈடுபட்ட சமூக விரோதச் சக்திகள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

- முஹம்மது ஷிப்லி, மாநிலச் செயலாளர், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

Comments

7 comments

7
Guest
அய்யா 108 சமூகத்துக்கும் இட ஒதுக்கீடு வாங்கி தந்தவர்.அதில் முஸ்லிம்களும் அடக்கம் என்று முஹம்மது ஷிப்லி, மாநிலச் செயலாளர், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அவர்களுக்கு தெரியாதோ...!
அமுதவன் ரசீத் நாத்திகன்
இட ஒதுக்கீடு என்றால் என்ன என்று புரிந்து பேசவேண்டும் அனாமி அவர்களே. அத்துடன் அராசகம் செய்ததைச் சொன்னால் அம்ம் செய்வோம் என்று ஒத்துக்கொண்டு பதிலளிப்பது தற்கலைக்குச் சமம் என உணர்க. தமிழகத்தின் ராசபக்சே யாக, மோடியாக ஆசையா? பரிதாபம்தான்.
ஆறுமுகம்
//ஒவ்வொரு முறையும் சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு மாமல்லபுரத்தில் பாமக மாநாடு நடத்தும்போதெல்லாம் மரக்காணம் பகுதியில் பதட்ட நிலை உருவாகும்.// வழக்கமாக நடப்பதால் கலவரம் வழக்கமானதா? தடுக்க வேண்டியது யார்? ஒவ்வொரு முறையும் நடக்கும் என்றால் ஏன் தலித்துகள் பாதுகாப்பு கேட்க வில்லை? //(தலித் மற்றும் ) முஸ்லிம்கள் // இது மதம் மாறிய தலித்துகள் தானே அவர்களை தலித்துகளாக அடையாளம் காட்டாமல் பாமக கட்சிக்கு எதிராக இஸ்லாமியர்களை திருப்பிவிடும் செயல்தானே. இன்று தலித்துகள், சமத்துவம் என்ற பெயரில் பிற சமுதாயத்தினரை தொடர்ந்து அடக்குமுறைக்கு ஆளாக்கி வருவதும் அதற்க்கு வன் கொடுமை தடுப்பு சட்ட‌த்தை கொண்டு தங்களை பாதுகாத்துக் கொண்டு பிறரை பொது இடங்களிலும் பணியிடங்களிலும் தாக்குதல் நடத்தி வருவது கண் கூடு. தலித்துகள் தங்களை பிற சமுதாயத்தினரோடு இணைந்து வாழ்வதறக்கு பதில் பிற சமுதாயத்தினரின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்து வருகின்றனர் என்பது கசப்பான உண்மை. இறுப்பினும் வன்முறையை இருதரப்பினரும் நியயப்படுத்த முடியாது.
rajkumar
பா.ம.க வையும் வன்னியர் சங்கத்தையும், மற்றும் பிற ஆதிக்க சாதி சங்கங்களையும் தமிழகத்திலும் இந்தியாவிளும் தடைசெய்யவேண்டும்.
sukumar
PMK chief along with his party workers, today, has been arrested for his party's unlawful activities by the state govt. PMK is no longer a political party but a party for Vannier community run by Ramdass and his family members. Any party who indulge in riots in the name of casts should be banned. The EC should review the recognition of PMK party at once.
A. Jayaparimalavalli
சாதி என்ற பெயரில் வன்முறையை தூண்டும் கருங்காளிகளை சட்டம் பாரபட்சமின்றி தண்டிக்க வேண்டும்.
Guest
அய்யா 108 சமூகத்துக்கும் இட ஒதுக்கீடு வாங்கி தந்தவர்.அதில் முஸ்லிம்களும் அடக்கம் என்று முஹம்மது ஷிப்லி, மாநிலச் செயலாளர், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அவர்களுக்கு தெரியாதோ...!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.