maruthi 3502015 நவம்பர் 27 அன்று, மாருதி சுசூகி தொழிலாளர் சங்கத்தின் தற்காலிக குழு, குர்கானில் தொழிலாளர்களுடைய நீதி உரிமைக்கான கருத்தரங்கை நடத்தியது. இது, மாருதி சுசூகி தொழிலாளர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவாக இந்தியா வெங்கிலுமிருந்து தொழிற் சங்கச் செயல் வீரர்களை ஈர்த்திருந்தது.

மாருதி தொழிலாளர்களுடைய போராட்டத்தை நசுக்கும் முயற்சியில் அரசாங்கம் மூன்றாண்டுகளுக்கு முன்னர் 150 தொழிலாளர்களை பொய் வழக்குகளின் கீழ் சிறையிலடைத்தது.

கூடவே ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அவர்களுடைய வேலையிலிருந்து தூக்கியெறியப்பட்டனர்.

ஒரு நீண்ட போராட்டத்திற்குப் பின்னர், 36 தொழிலாளர்கள் நீங்கலாக மற்றவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

போராட்டப் பாதையில் இறங்குவது பற்றி அச்சத்தை எல்லாத் தொழிலாளர்களுக்கும் உருவாக்கும் நோக்கத்தோடு சிறையிலுள்ள இந்த எல்லாத் தொழிலாளர்களுக்கும் ஆயுள் தண்டனை வழங்க அரசாங்கம் முயன்று வருகிறது.

மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுதலை செய்வதற்காக நாடெங்கிலும் ஒரு இயக்கம் நடைபெற்று வருகிறது. மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுதலை செய்வதற்காக நடைபெறும் இந்த இயக்கத்தை இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.

maruthi 1 350வேலையிலிருந்து தூக்கியெறியப்பட்ட மற்றும் சிறையிலடைக்கப்பட்டுள்ள மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு நீதி கேட்டு, அரியானா ஜிந்த் மாவட்டத்தில் நவம்பர் 15, 2015 அன்று ஒரு ஆர்பாட்டம் நடைபெற்றது.

அதில் ஷிரம் ஜீவி சங்கஷ் மோர்ச்சா, ஜன் சங்கர்ஷ் மன்ச் அரியானா, எம்என்ஆர்இஜிஏ மஸ்தூர் யூனியன், நிர்மான் கார்யா மஸ்தூர் மிஸ்திரி யூனியன் ஆகிய தொழிற் சங்கங்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான செயல்வீரர்கள் பங்கேற்றனர்.

ஆர்பாட்டத்தைத் தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி, நேரு பூங்காவில் ஒரு போர்க் குணமிக்க பொதுக் கூட்டமும் நடைபெற்றது.

Pin It