இந்தியாவின் முப்படைகளையும் இணைக்கும் உச்சமட்ட அமைப்பின் தலைவராக உள்ளவர் ஜெனரல் பிபின் ராவத். இந்தப் பதவியின் பெயர் Chief of Defence Staff (சி.டி.எஸ்). இது பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்ட புதிய பதவி ஆகும்.

இப்பதவி வகிப்பவரான பிபின் ராவத் மோடியால் மிகுந்த கவனத்தோடு தேர்ந்தெடுக்கப் பட்டவர். இதற்கு முன் இந்திய தரைப்படைத் தலைவராக இருந்தவர். இத்தகைய மிகப் பெரிய பொறுப்பை வகித்துவரும் பிபின் ராவத் அடிக்கடி உதிர்க்கும் கருத்துகள் மிகவும் அதிர்ச்சிகரமானவையாக இருக்கும்.

modi and Bipin Rawatஅவை மோடியின் போக்கு எப்படி இருக்கப் போகிறது என்று நமக்கு ஓரளவு உணர்த்துபவையாகவே உள்ளன. அந்தப் போக்கு ஆபத்தான திசையில் உள்ளது என்பதையும் இவரது கருத்துகள் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

இதற்கு முதலில் ஓர் எடுத்துக் காட்டு—

Thelogicalindian.காம் 29 December 2019-----

“Bipin Rawat had stirred a very serious row in 2018 when he remarked that the All India United Democratic Front (AIUDF) has been growing faster than the BJP in Assam because of the support of Muslims, with Pakistan and China pushing Bangladeshi migrants into the North-east part of the country to destabilise India. The BJP said that the army chief needs to be saluted for his comment.”

அதாவது—

2018இல் இவர் கூறினார்--

“அசாம் மாநிலத்தில் பாஜகவைக் காட்டிலும் வேகமாக அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி வளர்ந்து வரக் காரணம் முஸ்லிம்களே. பாகிஸ்தானும், சீனாவும் பங்களதேசத்திலிருந்து முஸ்லிம் அகதிகளை அசாம் மாநிலத்துக்குள் நுழைத்து அவர்களின் எண்ணிக்கையைப் பெருக்கி வருகிறார்கள்.”

இவ்வாறு அன்றைய தரைப்படைத் தலைவராக இருந்த பிபின் ராவத் கூறியதைப் பாஜகவினர் வரவேற்றனர்.

இவ்வாறு, இந்திய ராணுவத்தின் தலைவர் பாஜகவுக்கு ஆதரவாகவும், இஸ்லாமியர்க்கு எதிராகவும் நேரடியாக அரசியலில் தலையிட்டுள்ளார்.

அத்துடன் இஸ்லாமியரை பாகிஸ்தானுடனும், சீனாவுடனும் இணைத்து அவதூறு செய்துள்ளார். இவர் இந்திய ராணுவத்தின் தலைவரா, அல்லது இந்துத்துவா ராணுவத்தின் தலைவரா? இத்தகைய மனிதரைத்தான் மோடி அடுத்து முப்படைத் தலைவராகவும் ஆக்கியுள்ளார்.

இவர் பற்றித் தெரிந்துகொள்ள மேலும் சில எடுத்துக் காட்டுகள்—

(தகவல்கள்--Hindustantimes. காம் 12 Aug 2020) --- இவர் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்துப் போராடியவர்களைக் கடுமையாகக் கண்டனம் செய்துள்ளார். இப்போராட்டத்துக்குத் தலைமை தாங்கியவர்கள் வன்முறையாளர்கள் என்றும், உடமைகளுக்குத் தீ வைப்பவர்கள் என்றும் ஏசினார்.

அடுத்து,

காஷ்மீரில் போராடுபவர்களை அடக்க வேண்டி ராணுவத்தினர் நடவடிக்கைகள் மேற்கொண்ட போது மேஜர் கோகோய் என்பவர் தனது ஜீப் வாகனத்தின் முகப்பில் ஒரு காஷ்மீர்க்கார அப்பாவியைக் கட்டிவைத்துக் கொண்டு ரோந்து போனார்.

போராட்டக்காரர்கள் எறியும் கற்களுக்கு அந்த அப்பாவி மனிதக் கேடயமாக்கப்பட்டு இரையாகும் நிலையை இவர் உருவாக்கினார்.

போரில் ஈடுபடாத எவரையும் இப்படிப் பயன்படுத்துவது போர்க்குற்றமாகும் அல்லவா? இத்தனைக்கும் அது போர் கூட அல்ல. வெறும் கல்லெறியும் இளைஞர்கள்தான்.

இந்தக் கொடுஞ்செயலுக்குப் பரவலாக எதிர்ப்பு எழுந்தது. ஆனால், ஜெனரல் ராவத் என்ன செய்தார், தெரியுமா?

அனைவர்க்கும் அதிர்ச்சியூட்டும் விதத்தில் கோகோய் என்ற அந்த அதிகாரிக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

அந்த கோகோய் தொடர்ச்சியாகக் கலவரங்களை வெற்றிகரமாக ஒடுக்கிவந்துள்ளார் என்பதற்காக இந்தச் சான்றிதழாம்!

இதையும் விட அதிர்ச்சி தரும் இன்னொரு செய்தி

இதோ—

“In 2017, Rawat’s comments against stone pelters in Kashmir triggered a row. “In fact, I wish these people, instead of throwing stones at us, were firing weapons at us. Then I would have been happy. Then I could do what I (want to do), “ he said.

2017இல், காஷ்மீரில் நவீன ஆயுதங்கள் தரித்த இந்திய ராணுவத்தினர்க்கு எதிர்ப்பு தெரிவித்து வெறும் கற்களை எறிந்து போராடும் மக்களைப் பற்றி இவர் கூறியது—

“இந்தக் காஷ்மீரிகள் எங்கள் (ராணுவத்தினர்) மீது கற்களை எறிவதற்கு பதில் துப்பாக்கிகளால் சுடவேண்டும் என்பது என் விருப்பம். அவ்வாறு செய்தால் நான் மகிழ்வேன். அப்படி நடந்தால்தான் நான் செய்ய விரும்புவதைச் செய்ய முடியும்.”

அதாவது, “இந்தப் போராட்டக் காரர்கள் துப்பாக்கிகளை மட்டும் பயன்படுத்தியிருந்தால் நான் என் விருப்பம்போல் சுட்டுத் தள்ளி துவம்சம் பண்ணியிருப்பேன்.”

“அடடா, கல்லை எறிவதோடு நிறுத்திக் கொள்கிறார்களே இந்தக் காஷ்மீர் இளைஞர்கள், என் வலிமையைக் காட்ட ஒரு வாய்ப்பு தரக்கூடாதா?” இவ்வாறு ஏங்குகிறார் இந்த மாபெரும் ராணுவத்தின் தலைவர்.

அடுத்து—

“He also said, “Adversaries must be afraid of you and at the same time your people must be afraid of you. We are a friendly army, but when we are called to restore law and order, people have to be afraid of us, “ he said.

அதாவது—

ஜெனரல் ராவத் கூறினார்— 'எதிரிகள் மட்டுமல்ல, மக்களும் ராணுவத்திடம் அச்சம் கொள்ளவேண்டும். நம் ராணுவம் மக்களிடம் நேசம் கொண்டதுதான். ஆனால் சட்டம், ஒழுங்கை மீட்டெடுக்கும் நடவடிக்கையின் போது மக்கள் ராணுவத்திடம் அஞ்சத்தான் வேண்டும்."

நண்பர்களே,

உள்நாட்டில் பல காரணங்களால் சட்டம், ஒழுங்கு குலையும் போது இப்படிப்பட்ட வழிகாட்டுதலை ராணுவத் தலைமையே தருகிறதென்றால் என்ன விளைவுகள் ஏற்படும்?

“மக்களை எப்படி வேண்டுமானாலும் ஒடுக்குங்கள், எந்த அக்கிரமங்களையும் செய்யுங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், “ என்று முன்கூட்டியே உத்தரவாதம் தரும் அறிவிப்பல்லவா இது?

மோடி நியமித்துள்ள முப்படைத் தலைமை ஆலோசகர் கொண்டிருக்கும் மனப்பான்மை இது என்றால் மோடியின் மனப்பான்மையும் இதுவே என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

இந்த ஜெனரல் தேசத்தின் பாதுகாப்பு குறித்து (2017ல்) வெளியிட்டுள்ள நிலைப்பாடு என்ன தெரியுமா?

தகவல்—news18.காம் 10 June 2017—

“India Ready for 'Two-and-a-half Front War', Says Army Chief Bipin Rawat

“India is ready for a ‘two-and-a-half front war’, Army Chief General Bipin Rawat has said referring to Pakistan, China and the internal conflicts, ANI reported.”

அதாவது-- “இந்தியா இரண்டரை முனைகளில் வரக்கூடிய தாக்குதல்களை எதிர்கொள்ள முழு தயாரிப்போடு உள்ளது.”

இவற்றில் ஒரு முனை மேற்கில் பாகிஸ்தானை எதிர்கொள்வது. இதுவே முதன்மையானது.

இரண்டாவது முனை வடக்கே சீனாவை எதிர்கொள்வது.

இதற்கடுத்து உள்ள அரை முனை என்பது இந்தியாவின் உள்ளேயிருக்கும் தேசவிரோத சக்திகளை எதிர்கொள்வது.

பாகிஸ்தான் தூண்டுதலின் காரணமாக இந்தியாவுக்குள் சமூக ஊடகங்கள் மூலம் பொய்த் தகவல்கள் பரப்பப்பட்டுப் பல முஸ்லிம் இளைஞர்கள் பயங்கரவாதிகளாக மாற்றப் பட்டு வருகின்றனர்.

எனவே, வெளிப்பகையான பாகிஸ்தான் மற்றும் சீனாவையும், உட்பகையான பயங்கரவாத அமைப்புகளையும் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அவ்வாறு எதிர்கொண்டு வெல்லும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளது என்று மார் தட்டுகிறார் ஜெனரல் ராவத்.

இந்தியப் பெருநாட்டின் பாதுகாப்புக்குப் பொறுப்பான படைத்தலைவர் இந்தியாவின் வலிமை குறித்து மக்களிடம் உத்தரவாதம் அளிப்பது முற்றிலும் சரியான செயல்தான். ஆனால் ஜெனரல் ராவத் அத்தகைய பொறுப்பு மிக்க அதிகாரியா என்பதில் குழப்பம் உள்ளது.

பிரதமராக மோடியும், ஆளும் கட்சியாக பாஜகவும், ஆட்டிவைக்கும் சக்தியாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் இருக்கும் நிலையில் இப்படிப்பட்ட மனப்பாங்கு படைத்த ஒருவர் தரைப்படைக்கு மட்டுமல்ல, முப்படைக்கும் தலைவராக மோடியால் நியமிக்கப் பட்டு செயல்பட்டு வருவது அச்சமளிப்பதாக உள்ளது.

இந்திய மக்களை இவர்கள் போர்ச் சுழலுக்குள் தள்ளிவிடக் கூடாது. அதிலும் இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய மூன்று நாடுகளிடமுமே அணு ஆயுதங்கள் ஏராளம் இருந்து வரும் நிலையில் நிதானமே தலையாய தேவை.

அத்துடன் உள்நாட்டில் பயங்கரவாதத்தை ஒடுக்கும் முயற்சியை அநீதியாக விரிவு படுத்தி ஒட்டுமொத்தமாக இஸ்லாமிய மக்களை ஒடுக்கும் தேசத்துரோகச் செயலையும் இவர்கள் செய்து விடக் கூடாது.

ஆனால் மோடி அரசு இந்த அழிவுப்பாதையில்தான் நடைபோட்டு வருகிறது. ஜெனரல் ராவத் குறிப்பிட்ட இரண்டரை முனைகளில் மோடியரசு முதலாவதாக பாகிஸ்தானோடுள்ள முரண்பாட்டைக் கூர்மைப் படுத்தி வருகிறது.

இரண்டாவதாக சீனாவையும் முழுமையாகப் பகைத்துக் கொள்வதில் அமெரிக்காவைப் பின்பற்றி வருகிறது.

இந்நிலையில் அபாயச் சங்கு ஒலிக்கும் இன்றைய ஆப்கானிஸ்தானில் குறைந்த பட்ச அமைதி நிலவி, கோடிக் கணக்கில் மக்கள் பட்டினியால் சாகாமலிருக்க இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் உதவ வில்லையென்றால் தாலிபான் + அல் கய்தா + பாகிஸ்தான் ஆகிய கூட்டுச் சக்தி மீண்டும் விஸ்வரூபம் எடுத்து, பயங்கரவாதத் தீயை இந்தியா முழுதும் பரப்பும்.

இதற்கான அபாய அறிகுறிகள் தமிழகத்திலும் வெளிப்பட்டு வருகின்றன. இந்த அபாயங்களைக் காட்டி திமுக ஆட்சியை பலவீனப்படுத்தும் உள்நோக்கமும் மத்திய அரசுக்கு உள்ளது என்பதே எனது கணிப்பு. ஆளுநர் ஆர்.என். ரவியின் நியமனம்கூட இந்தத் திட்டத்துக்கேற்பவே நிகழ்ந்துள்ளது.

பேராசிரியர் மருதமுத்து

Pin It