“பாசறை முரசு'' முதல் இதழ் 2010 ஆம் ஆண்டு மே திங்கள் முதல் நாள் பெரியாரியர் ஓவியா அவர்கள் வெளியிட குத்தூசி குருசாமி – குஞ்சிதம் இணையரின் மகள் டாக்டர் இரசியா பெற்றுக் கொண்டார்.

இரண்டு ஆண்டுகள் முடிந்து மூன்றாம் ஆண்டில் பாசறை முரசு கால் பதிக்கிறது. முதல் மூன்று இதழ்கள் தனிச்சுற்றொடராகவே வெளிவந்தது. நான்காவது இதழ் அரசுப் பதிவிதழாக வெளிவந்தது.

அதிகமான உறுபினர்கள் இல்லை. இலவசமாக இதழ் பெறுபவர்களே அதிகம். நண்பர்களின் ஆதரவு இருக்கும் என்று கருதினோம். இல்லை என்பதே இன்றைய நிலை. எந்தக் கடையிலும் இலவசமாக எந்தப் பொருளும் வாங்க எவரும் விரும்புவதில்லை. ஆனால் இதழ் மட்டும் இலவசமாகவே வரட்டும் என்றே பெரும்பாலோர் கருதுகின்றனர்.

எனவேதான் சமூகப் பணியாற்ற விரும்ப தொடங்கப்படும் சிற்றிதழ்கள் விரைவில் காணாமல் போய்விடுகின்றன. வணிக ரீதியில் தொடங்கப்படும் இதழ்கள் மட்டும் வெற்றிபெறுகின்றன. இவைகளுக்குக் கை கொடுப்பது கவர்ச்சிகரமான காம உணர்வைத் தூண்டும் நடிகைகள் படங்களும் மூடநம்பிக்கைகளை வரைக்கும் ஜாதகம், சோதிடம், வாஸ்து மற்றும் பரிகாரங்கள் போன்ற செய்திகளே.

இருந்தாலும் சமூக அக்கறைக் கொண்ட சிலர் தாமாகவே முன்வந்து நன்கொடை வழங்கி இதழ் பெறுகின்றனர். ஒரு சிலர் தம்மை புரவலர்களாக இணைந்த நம்மை ஊக்குவிக்கின்றனர். அப்படிப்பட்ட அன்புள்ளங்களுக்கு நன்றி கூறி இதழின் பணியை தொடர்கிறோம்.

வளர்ந்த கொண்டிருக்கிற “பாசறை முரசு''க்கு கை கொடுத்து உதவுங்கள். நன்கொடை வழங்குங்கள் முடிந்தால் விளம்பரம் கொடுங்கள் அல்லது விளம்பரம் பெற்றிட உதவுங்கள்.

உங்கள் பாராட்டுகளே எங்களை ஊக்குவிக்கும்.

– ஆசிரியர் குழு

Pin It