ஒரு பெரிய மனிதர் வீட்டுக்கு ஒரு சாஸ்திரி வந்தார்

பெரிய மனிதர்:       வாருங்கள், சாஸ்திரிகளே, உங்களை வரவழைக்க வேண்டுமென்றிருந்தேன். நீங்களே வந்து விட்டீர்கள்.

சாஸ்திரிகள்:   அப்படியா என்ன விசேஷம்?

பெரிய மனிதர்:       ஒன்றுமில்லை, ஒரு தத்துக்கிளியின் கழுத்தில் ஒரு பையன் கயிறுகட்டி இறுக்கி அதனைக் கொன்றுவிட்டான் இதற்கேதாவது பிராயச்சித்தம் உண்டா?

சாஸ்திரிகள்:   ஆஹா உண்டு. அவன் பெற்றோர் தங்கத்தினால் 108 தத்துக்கிளி செய்து 108 பிராமணர்களுக்கு செலுத்திவிட்டால் அந்தப் பாவம் தீர்ந்துவிடும். இல்லாவிட்டால் அந்தப் பையனை அவன் பெற்றோர் பார்க்கவே கூடாது.

பெரிய மனிதர்:       தத்துக்கிளியின் கழுத்தில் கயிறுகட்டி இறுக்கி கொன்றது தங்களுடைய மகன்தான். அதற்கு

வேண்டியதை சீக்கிரத்தில் செய்துவிட்டு வாருங்கள்.

சாஸ்திரிகள்:   ஓஹோ! பிராமன பையனா? அப்படியானால் இனிமேல் அப்படிச் செய்யாதே என்று சொல்லி விட்டால் போதும்.

– குடியரசு 16.08.1928

***

காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள் 12 பேர். முக்கியமானவர்களாக கருதப்பட்டவர்கள் சாவர்க்கர், நாதூராம் கோட்சே, கோபால் கோட்சே, இவர்களில் நாதுராம் கோட்சே, நாராயன் ஆப்தே ஆகிய இருவருக்கும் தூக்கு தண்டனையும் கோபால் கோட்சேவுக்கு ஆயுள் தண்டனை விதித்து, மீதம் உள்ள 9 பேர் மட்டும் விடுதலை செய்யப்பட்டனர். ஆயுள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே 14 ஆண்டுகளில் விடுதலை பெற்றார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நேரடி தொடர்புடைய தானு, சிவராசன், சுபா ஆகியோர் கொல்லப்பட்டுவிட்டனர். வழக்கை பதிவு செய்து நேரடி தொடர்பில்லாத 26 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவர்கள் அனைவரும் தூக்குதண்டனை விதித்து தடா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றம் 4 பேர்களுக்கு மட்டும் தூக்கு தண்டனை உறுதி செய்தது. ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மீதி 19 பேர்களை விடுவித்தது. இந்த 4 பேர்களில் நளினி தவிர 3 பேரும் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து பிறகு அவர்களை தூக்கிலிட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்துகிறது.

மேற்கண்ட இரண்டு வழக்குகளை வெவ்வேறு அணுகுமுறையில் நிலைநாட்டப்பட்டது ஏன்? இங்கே தான் பெரியார் பேசுகிறார்!

Pin It