சுற்றுலா செல்வது என்பது அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான மற்றும் மறக்க முடியாத அனுபவம் என்பதை நாம் அறிவோம். நம்மில் பலர் சுற்றுலா சென்றவர்களும் உண்டு. ஆனால், எத்தனைப்பேர் பயணக்கட்டுரைகள் எழுதி இருப்போம்? விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே எழுதினர். அப்படி எழுதப்பட்ட பயணக்கட்டுரைகள் பிறருக்குப் பயன்படுவதாக அமைந்ததா என்றால், இல்லை. என்றே சொல்லாம். ஏனென்றால் அந்தக் கட்டுரைகள் அவர்களுக்கு உதவியவர்களைப் பற்றியே பெரும்பாலும் எழுதி நன்றியைப் பயணக்கட்டுரைகள் மூலம் தெரிவித்துக் கொள்வர். அதனால் வாசிப்பவர்களுக்கு என்ன பயன்?

ஆனால் பாவலர் எழுஞாயிறு அவர்களின் இந்தப் பயண கட்டுரை நூல் வாசிப்பவர்கள் அந்த இடங்களுக்கு நேரில் சென்று பார்ப்பது போன்ற உணர்வையும், அதோடு குடும்பத்தை அழைத்துக்கொண்டு சுற்றுலா செல்லவேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டுவதõக அமைந்துள்ளது.

நம்மால் சுற்றுலா போகமுடியவில்லை என்றாலும் சுற்றுலா போனவர்களுடைய அனுபவத்தை நாம் பெற்றுக் கொள்ளலாம் என்பதற்கு இந்நூல் நமக்குப் பெரிதும் பயன்படும்.

முப்பாலிகை பதிப்பகம்

64/10, காளியப்பர் குடியிருப்பு

பெரமனூர், சேலம் – 636 007

நூல் விலை ரூ.100/

Pin It