உச்ச நீதிமன்றம் உத்தரவு

குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவராகவும், அவரது அமைச்ச ரவை சகாவுமான அமீத் ஷா, குஜராத் போலீஸாரால் போலி என்கவுண்ட்டர் செய்யப்பட்ட சொராபுதீன் ஷேக், அவரது மனைவி மற்றும் இப்படு கொலைச் சம்பவங்களை நேரில் பார்த்த சாட்சியான துள்சிராம் பிரஜாபதி படுகொலை ஆகிய வழக்குகளில் தொடர்புடையவர்.

இவரை கடந்த ஜூலை 25, 2010ல் மத்திய புலனாய்வுத்துறை கைது செய்தது. இந்த வழக்கில் ஏற்கெனவே குஜராத் முன்னாள் காவல்துறை தலைவர் பி.சி. பாண்டே, ஐ.பி.எஸ். அதிகாரிக ளான மாத்தூர், டி.ஜி.பி. வன்சரா, கீதா ஜவ்ஹரி ஆகியோரும் கைது செய் யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது மத்திய புலனாய்வுத்துறை குற்றப் பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் அமீத் ஷா, குஜ ராத் உயர் நீதிமன்றத்தில் பிணை கேட்டு மனு தாக்கல் செய்து பிணையையும் பெற... சுறுசுறுப் பான மத்திய புலனாய்வுத்து றையோ உடனடியாக உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து, அமீத் ஷாவிற்கு வழங்கப்பட்ட பிணை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கேட் டுக் கொண்டது.

இம்மனுவை கடந்த 6ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகளான ஆஃப்தாஃப் ஆலம், ரஞ்சனா பிர காஷ் தேசாய் ஆகியோர் அடங் கிய பெஞ்ச் உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது.

அதே சமயம், அமீத் ஷாவிற்கு குஜராத் நீதிமன்றம் வழங்கியிருக் கும் பிணை உத்தரவு குறித்து கருத்து சொன்ன நீதிபதிகள், அமீத் ஷாவிற்கு பிணை உத்தரவு வழங்க வேண்டுமானால் அது சில நிபந்த னைகளுக்கு உட்பட்டதாக இருக் கும். ஆனால் சொராப்புதீன் ஷேக் படுகொலை வழக்கு குஜராத் மாநி லத்திற்கு வெளியே மும்பைக்கு மாற்றம் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் இந்த வழக்கு நடைபெற்றால் முதல்வர் மோடியின் தலையீடு மற்றும் சட் டத்தின் ஓட்டைகளைப் பயன்ப டுத்தி அமீத் ஷா தப்பி விட வாய்ப் புள்ளது என்பதால் இந்த வழக்கை மும்பை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று நீதிபதி கள் சொல்லியிருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

சொராப்புத்தீன் ஷேக் கொல் லப்பட்ட 2005ல் அமீத் ஷா மோடியின் அமைச்சரவையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக் கது.

சி.பி.ஐ.யின் மனு மீதான விசார ணையின்போது, “அமீத் ஷாவிற்கு பிணை வழங்கினால் அவர் சொராப்புத்தீன் வழக்கு விசார ணைகள் மற்றும் புலனாய்வு செயற்பாடுகளில் தலையிட மாட் டார் என்பதற்கு என்ன உத்திரவா தம்? என்று நீதிபதி ஆஃப்தாஃப் ஆலம் கேட்டபோது,

அமீத் ஷா சார்பாக நீதிமன்றத் தில் ஆஜரான மூத்த வழக்கறிஞ ரான ராம்ஜத் மலானி, “அமீத் ஷா அப்படி செய்ய மாட்டார் என்று அவர் உத்திரவாதம் அளிப்பார். அதே சமயம், இந்த உத்தரவா தத்தை அவர் காப்பாற்றத் தவறி னால் அதன் பின் அமீத் ஷாவிற் காக நான் ஆஜராக மாட்டேன். மாறாக அவருக்கு தண்டனை பெற்றுத் தருவேன்...'' என தெரிவித் திருக்கிறார்.

விசாரணையின்போது குஜராத் அரசு இவ்வழக்கில் நடந்து கொள் ளும் முறை குறித்துப் பேசிய நீதிப திகள், “இந்த வழக்கில் ஆழமான விசாரணைகள் மேற்கொண்டு வழக்கின் முழுப் பின்னணியை அடைய நீதிமன்றத்திற்கு உதவிகர மாக இருப்பதற்கு பதிலாக விரோத அணுகுமுறையை குஜ ராத் அரசு அடிக்கடி கடைபிடித்து வருகிறது...'' என்றும் குறிப்பிட்டுள் ளனர்.

குஜராத் கலவரத்தின்போது நரோடா பாட்டியாவில் முஸ்லிம் கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சமீபத்தில்தான் தீர்ப்பு வந்தது. முதல்வர் மோடியின் அமைச்சரவை சகாவான மாயா கோத்னானிக்கு 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது நீதிமன்றம். இது மோடியின் அரசியல் பயணத்திலும், அவரது பிரதமருக்கான ஓட்டத்திலும் தடையை ஏற்படுத்தியது.

இருந்தும் எதிர் வரும் பாராளு மன்றத் தேர்தலின்போது மோடியை பிரதமராக்க பாஜக முயற்சித்து வரும் நிலையில் அமீத் ஷாவின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதும், சொராப்புத்தீன் வழக்கை மும் பைக்கு மாற்றச் சொல்லி உச்சநீதி மன்றம் சொல்லியிருப்பதும் மோடி யின் பிரதமர் கனவை தகர்க்கும் நடவடிக்கையாகவே அமைந்துள் ளது.

இந்த வழக்கு மும்பைக்கு மாற் றப்பட்டு நாடாளுமன்றத் தேர்த லுக்கு முன்பாகவே தீர்ப்பும் சொல் லப்பட்டால் அது மோடிக்கு மட் டுமல்ல... பாஜகவின் பாராளுமன் றத் தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணமாக அமையும் என்கின் றனர் அரசியல் பார்வையாளர்கள்.

இந்த வழக்கில் தேவையில்லா மல் கால தாமதத்தை ஏற்படுத்த பாஜக வகையறாக்கள் முயற்சிக் கும். இதை உணர்ந்து மத்தியப் புலனாய்வுத் துறையை கையில் வைத்திருக்கும் மத்திய காங்கிரஸ் அரசு அதன் வேகத்தை கூட்டி இந்த வழக்கில் விரைந்து தீர்ப்பு வருவதற்கான அத்தனை முயற்சிக ளையும் முடுக்கி விட வேண்டும்.

- ஃபைஸல்

Pin It