தமிழகத்தில் சாதிக் கலவரம் என்றால் அது தென் மாவட் டங்களில்தான் என்ற நிலைமை மாறி வட மாவட்டங்களிலும் இப்போது சாதித் தீ பரவுகிறதோ என்கிற கவலையை ஏற்படுத்தியிருக் கிறது தர்மபுரி கலவரம்.

கலவரம் என்பதை விட சாதி ஆதிக்கத்தின் பெரும்பான்மை ஆணவத்தின் வெளிப்பாடாகத்தான் இந்த வன்முறையைப் பார்க்க முடிகிறது.

வன்னிய சாதிப் பெண்ணை தலித் இளைஞன் காதலித்து அவனோடு ஓடி விட்டதால் பெண்ணைப் பெற்ற தந்தை தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து வன்னியச் சமூகத்தவர்கள் நடத்திய கிராமப் பஞ்சாயத்தில் அப்பெண்ணை தலித்து கள் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்ப ளிக்கப்பட... நான் காதலனுடன்தான் வாழ்வேன் என்று அப்பெண் உறுதி காட்டியதால் கோபம டைந்த வன்னியச் சமூகத்தைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்டவர்கள் நத்தம் என்கிற தலித் கிராமத்திற்குள் புகுந்த கலவரம் நிகழ்த்தியுள்ளனர்.

தலித் மக்களின் 250க்கும் மேற்பட்ட வீடுகளை அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளனர்.

அப்பெண்ணை தலித்துகள் தங்களிடம் ஒப்ப டைக்க வேண்டும் என்ற பஞ்சாயத்து தீர்ப்பை மறுத் தவர் அந்த வன்னியச் சமூகத்துப் பெண்தான். தலித்துகள் இல்லை. பிறகு ஏன் ஒட்டு மொத்த நத் தம் கிராமமும் சூறையாடப்பட்டது? வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன?

சாதிய ஏற்றத்தாழ்வுகள்! மனிதனை சக மனிதனாக ஒப்புக் கொள்ள மறுக்கும் வன்மம் நிறைந்த மனநிலை!

இதே பெண், தலித் இளைஞன் அல்லாத ஆதிக்க அல்லது மேல் சாதி இளைஞனை காதலித்து அவ னுடன் ஓடியிருந்தால் அந்த இளைஞன் சார்ந்த மேல் சாதி கிராமம் சூறையாடலுக்கு உட்பட்டிருக் குமா என்று ஒவ்வொருவரும் தங்கள் மனதிற்குள் கேள்வி எழுப்பிப் பார்த்தால் கிடைக்கும் பதில் "நிச்சயமாக இல்லை' என்பதாகத்தான் இருக்கும்!

ஆக, நடைமுறை பிரச்சினைகள், சட்ட நெறிமு றைகளையும் தாண்டிய ஆதிக்க சாதி மனோபா வமே இதுபோன்ற வன்முறைகளுக்கு காரண மாக அமைகிறது.

சமீபத்தில் மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் பெருவிழாவில் கலந்து கொண்டு பேசிய காடுவெட்டி குரு, வன்னிய இளம்பெண் களை கலப்புத் திருமணம் செய்ய முயற்சிப்பவர்க ளுக்கு எதிராக - வன்முறையைத் தூண்டும் வகை யில் பேசிய பேச்சின் வெளிப்பாடாகத்தான் தர்மபுரி வன்முறையைப் பார்க்க வேண்டியுள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

சாதிப்பற்று என்ற நிலையைக் கடந்து சாதிய வெறி ஊட்டப்படுவதன் விளைவு... வன்முறை, கலவரம், உயிர்ப் பலிகள் என்பதாகத்தான் முடியும்.

பெரும்பான்மை மக்களுக்கு மத்தியில் வாழும் எந்தச் சிறுபான்மை சமூகத்தையும் அவர்களை முதலில் பாதுகாக்கும் தார்மீக பொறுப்பு பெரும் பான்மை மக்களுக்குத்தான் இருக்கிறது. இதற்கு அடுத்த பாதுகாப்புதான் காவல்துறையும், அர சாங்கமும் என்ற ஆரோக்கியமான, மனித நேய சிந்தனையை பெரும்பான்மை சமூகங்கள் கடை பிடிக்க வேண்டும்.

மதம், இனம், குலம், கோத்திரம், சாதி என்று எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் மனித குலம் என்பது ஒரு தாய் வயிற்று மக்கள்தான். ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்துதான் இந்த மனித குலம் பிறப்பெடுத்திருக்கிறது என்ற அடிப்படை உண்மையை விளங்கிக் கொண்டால் கலவரங்க ளும், வன்முறைகளும், உயிர்ப் பலிகளும் நிக ழுமா?

Pin It