பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை விழாவிற்கு சென்ற தேவர் சமூகத்தவர்களை பரமக் குடி அருகே உள்ள பாம்பு விழுந்தான் கிராமத்தைச் சேர்ந்த சிலர் கற்களால் தாக்கியதில் டி.வேலங்குடியைச் சேர்ந்த சிவக்குமார் (30) சம்பவ இடத்திலேயே உயிரிழந் தார். அதேபோல் திருப்புவனம் அல்லிநகரத்தைச் சேர்ந்த மலைக்கண்ணன் (23), கீழராங்கியத்தைச் சேர்ந்த வீரமணி (22) ஆகியோர் பொன்னையாபுரம் பகுதியில் ஒரு கும்பலால் தாக்கப்பட்டதில் பலியாயினர். இதைத் தொடர்ந்து பரமக்குடி உள்பட மாவட்ட மெங்கும் கலவரம் பரவியது. இந்த கலவரத் தின் தொடர்ச்சியாக இராமநாதபுரம் முஸ்லிம்களின் வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இராமநாதபுரம் சக்கரைக் கோட்டை கன்மாய் பகுதியில் அரசின் சட்ட திட்டங்களை மீறி ஓட்டுக்காக, ஆர்.எஸ் மடையைச் சேர்ந்த தேவர் சமுதாய மக்கள் வரவழைக்கப்பட்டு நீர் நிலைகளை ஆக்கிரமித்து வீடுகளை கட்டியுள்ளனர். அங்கு ஓட்டுக் காக அந்த சாதி அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் அவர்களுக்கு மின்சார வசதிகளை செய்து கொடுத்து நகர் பகுதியில் அதை இணைத்துள்ள னர்.

இப்பகுதி இராமநாதபுரம் கீழக்கரை ரோட்டில் உள்ள ரயில்வே கேட் அருகில் பசும்பொன் என்ற பெயரில் அமைந்துள்ளது. இதற்கு எதிர்ப்புறம் உள்ள அரசு நிலத்தை தலித் சமுதாய மக்கள் ஆக்கிர மித்துள்ளனர். இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மூவர் ஹெல்மேட் அணியாமல் தேவர் குரு பூஜைக்கு பைக்கில் குடிபோதையில் சென்றுள்ளனர். வழியில் அவர்களின் பைக் விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகினர்.

இவர்களின் பிரே தத்தை வாங்கிக் கொண்டு திரும்பிய வன்முறை கும்பல் தேவையில்லாமல் அமைதியாக இருந்த இராமநாதபுரம் நகர் பகுதியில் கலவரத்தை உண்டாக்க திட்டமிட் டது. முகவை பேருந்து நிலைய பகுதியில் கடை களை அடைக்கச் சொல்லி மிரட்டிய மேற்படி வன்மு றைக் கும்பல், யாரும் எதிர்பாராத வகையில் இஸ்லாமியர்கள் வசிக் கும் பகுதியான சின்னக்கடை பகு திக்குள் புகுந்து கடைகள் மற்றும் அருகே கூடி நின்ற மக்கள் மீது தாக்குதல் நடத்த துவங்கியது.

அதே நேரம் பேருந்துக்காக, இராமநா தபுரம் அரண்மனைப் பகுதி அரவிந்த ராஜ் மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் நின் றிருந்த இஸ்லாமிய பெண்கள் மீதும், ஆண்கள் மீதும் தாக்கு தல் நடத்தத் துவங்கியது.

ஒரு கும்பல் இராம நாதபுரத்தில் முக்கிய வணிக நிறுவனங்கள் அனைத்தும் இஸ்லாமி யர்களுக்குச் சொந்தமா னவை. இவற்றை குறி வைத்து ஒரு கும்பல் தாக்குதலை துவக்கியது. இந்த கொலைவெறித் தாக் குதலில் கீழக்கரை எஸ்.வி.எம். குடும்பத் தாருக்கு சொந்தமான இராமநாதபுரம் சர்ச் பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க் முழுவதும் அடித்து நொறுக்கி தரைமட்டமாக்கப்பட்டது.

அத்துடன் அப்பகுதியில் இருந்த இஸ் லாமியருக்குச் சொந்தமான சூப்பர் மார்க்கெட், சின்னக் கடை யைச் சேர்ந்த முஹம்மது கவுஸ் என்பவருக்கு சொந்தமான சிங்கப்பூர் மொபைல் ஷாப் மற்றும் நாச்சியார் மெடிக் கல் போன்ற வணிக நிறுவனங்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி கொள்ளையடிக்க முயற்சி மேற் கொள்ளப்பட்டது.

அதே நேரம் சின்னக்கடையில் உள்ள இஸ் லாமிய மக்கள் தங்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலால் கொதித் தெழுந்து, தங்கள் மீதும் தங்களின் வணிக நிறுவனங்களின் மீதும் தாக்கு தல் நடத்தி கொள்ளையடிக்க முயன்ற வன்முறையாளர்களை விரட்டியடித்தது டன் பதிலடித் தாக்குதலையும் நடத்தியுள் ளனர்.

மேலும், வன்முறையாளர்களில் சிலரைப் பிடித்து காவல்துறையிடமும் ஒப்படைத்துள்ளனர். வழக்கம்போல காவல்துறை தாமதமாக வந்து தனது கடமையைச் செய்தது.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், பிரச்சினை இரு வேறு சமூகத்திற்குமிடையே... ஆனால் இராமநாதபுரத்தில் உள்ள சங்பரி வார் கும்பல் இதை திட்டமிட்டு மதப் பிரச் சினையாக்க முயன்றது. அதன் மூலம் முஸ்லிம்களின் சொத்துக்களையும், வணிக நிறுவனங்களையும் சூறையாடிக் கொள்ளையடிக்க முயன்றது.

இதுபோன்ற சூழல்களை பயன் படுத்தி சிறுபான்மையினரின் சொத்துக்களை அழிக்கும் முயற்சியில் திட்டமிட்டு செயல்படுகிறது சங்ப ரிவாரம்.

உடனடியாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத், இந்திய தேசிய லீக், எஸ்.டி.பி.ஐ., தமுமுக, இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர் இயக்கம் உள்ளிட்ட சமுதாய இயக்கங்களின் அதிரடி நடவடிக்கையால் நிகழவிருந்த பயங்கரம் தடுத்து நிறுத்தப்பட் டுள்ளது.

இரு தரப்பினர் வசிக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது. நமது இதழ் அச்சேறும் (5-11-2012) தேதி வரை போலீஸ் கடும் பாது காப்பில் ஈடுபட்டுள்ளது.

இக்கலவரத்தில் ஈடுபட்டவர்கள் என்று சின்னக்கடை பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் 8 பேரையும், (இதில் ஒருவர் மைனர்) ஆர்.எஸ். மடையைச் சேர்ந்த தேவர் சமுதாய மக்கள் 5 பேரை யும் காவல் துறை கைது செய் தது.

தொடர்ந்து பிரச்சினை பெரி தாக வெடிக்காமல் பதட் டத்தை தணிக்கும் முயற்சியில் ஈடுபட் டுள்ள மாவட்ட நிர்வாகம், ஆர்.டி. ஓ. தலைமையில் பீஸ் மீட்டிங் போட்டு இரண்டு தரப்பினரும் அமைதி முயற்சிக்கு ஒத்துழைப்பு தருமாறு எழுதி வாங்கியுள் ளது.

தேவர் சமுதாய மக்கள் முஸ்லிம்களு டன் தாயாய், பிள்ளையாய் உறவைப் பேணுபவர்கள். இதற்கு காரணம், பசும் பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாலூட்டியது இஸ்லாமியத் தாய் என்ப தால்! ஆனால் முகவையில் தேவர் சமு தாய இளைஞர்களை தங்களது விஷமப் பிரச்சாரத்தினால் முஸ்லிம்களுக்கு எதி ராக திருப்பும் வேலையை சங் பரிவாரம் தொடர்ந்து செய்து வருகிறது. அதன் வெளிப்பாடுதான் இந்த கலவரம்.

தேவர் சமுதாயம் சங்பரிவாரின் விஷ(ம)ப் பிரச்சாரத்திற்கு பலியாகி விடக் கூடாது என்பதே நமது வேண்டு கோள்.

- அபு முஜாஹித்

Pin It