ஆந்திர மாநிலத் தலைநகர் ஹைதராபாத் சிட்டி போலீஸ் கமிஷ்னராக இருந்த - ஏ.கே. கான் என்று சுருக்கமாக அழைக்கப்படும் அப்துல் கையூம் கான் அதிரடியாக மாநிலப் போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டி ருக்கிறார்.

ஏ.கே. கான் 1981ம் வருட ஐ.பி.எஸ். பேட்சைச் சேர்ந்தவர். சுமார் 2 வருடங்களுக்கும் மேலாக ஹைதரா பாத் சிட்டி கமிஷ்னராக செயல் பட்டவர். கடந்த ஏப்ரல் மாதத் துவக்கத் தில் 5 வாரம் டிரைனிங் புரோ கிராமிற்காக சர்தார் வல்ல பாய் பட்டேல் நேஷ்னல் போலீஸ் அகாடமிக்கு சென்ற ஏ.கே. கான் அந்த நிகழ்ச்சி முடிந்து திரும் பிய வேகத்தில் Andra Pradesh State Road Transport Corporation (APSRTC) என்கிற மாநிலப் போக்குவரத்துத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கடந்த 21ம் தேதி APSRTCயின் நிர்வாக இயக்குனராக பொறுப் பேற்றுக் கொண்ட கான், “2011-2012ம் ஆண்டுகளில் APSRTC நஷ்டத்தில் இயங்கியிருக்கிறது. சுமார் 450 கோடிக்கு போக்குவ ரத்து துறையில் நஷ்டம் ஏற்பட் டுள்ளது. இதனை நஷ்டத்திலி ருந்து மீட்டெடுப்பதுதான் எனது முதன்மை பணி. இந்தப் போக்கு வரத்துக் கழகம் அதிகபட்ச சேவையை பயணிகளுக்கு வழங் கும்...” எனத் தெரிவித்திருக்கிறார்.

ஆந்திராவின் APSRTCயைப் பொறுத்தவரை இது உலகின் மிகப் பெரிய போக்குவரத்துக் கழகங்களின் ஒன்று. 1 லட்சத்து 30 ஆயிரம் பணியாளர்களைக் கொண்ட இந்நிறுவனத்திற்கு ஆந்திராவிலும் அண்டை மாநி லங்களிலும் 23 ஆயிரம் பேருந்து கள் இயங் குகின்றன. ஒரு நாளில் 1.3 கோடி மக்கள் இதில் பயணிக் கின்றனர்.

இப்படி மிகப் பெரிய அளவில் இயங்கும் ஆந்திர மாநிலப் போக் குவரத்துத் துறை நஷ்டத்தில் இயங்கி வருவதால் அதனை நஷ்டத்திலிருந்து மீட்டெடுக்க ஏ.கே. கான் போன்ற துடிப்புள்ள நேர்மையான அதிகாரி நியமிக் கப்பட்டிருக்கிறார் என்று மேலோட்டமாக கூறப்பட்டா லும், உண்மையில் யதார்த்த நிலை வேறு என்கின்றனர் ஆந்திர அரசியல் பார்வையாளர் கள்.

ஏ.கே. கான் ஹைதராபாத் சிட்டி கமிஷ்னராக பதவியேற்ற சில மாதங்களிலேயே ஹைதராபாத் நகரம் முழுவதும் காவல்துறையின் கடுமையான கண்காணிப்பின் கீழ் வந்தது. சமூக விரோதச் செயல்கள் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டன.

சட்டம் ஒழுங்கை சீராக வைத்திருப்பதிலும், வகுப்புப் பதட்டங்களை உடனுக்குடன் கட்டுப்ப டுத்துவதிலும் முனைப்பு காட்டியவர் கான்.

அண்மையில் ஹைதராபாத் தில் ஹனுமன் கோவலில் இந்துத் துவா அமைப்பினரான ஹிந்து வாஹினியினர் மாட்டுக்கறி வீசி கலவரத்தை உருவாக்கியபோது அதனை குறுகிய காலத்தில் கட் டுக்குள் கொண்டு வந்ததோடு, மேற்கொண்டு கலவரம் பரவா மல், ஹைதராபாத் நகரத்திலுள்ள வழிபாட்டுத் தலங்களை பாது காக்க சிறப்புப் போலீஸ் படையை நியமித்தும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததில் கானின் பங்கு அளப்பரியது.

ஹைதராபாத் கமிஷ்னராக கான் நியமிக்கப்பட் டதிலிருந்தே ஹிந்துத்துவா அமைப்புகள் தங் களின் அதிருப்தியை தெரிவித்து வந்தனர். அதோடு இந்துத்துவ அமைப்புகளை கான் குறி வைத்து தாக்கி வருகிறார் என குற்றச்சாட்டுகளைக் கூறி கானின் கமிஷ்னர் பதவியை சர்ச்சைக்குள் ளாக்கி வந்தனர்.

இது தவிர ஆந்திர இஸ்லாமிய அரசியல் கட்சியான மஜ்லிúஸ இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி யின் ஏஜெண்ட் ஏ.கே. கான் என்று பிரச்சினைகளை உருவாக் கினர்.

ஆனால் அதே சமயம், ஹைத ராபாத்திலுள்ள... குறிப்பாக ஹைதராபாத் பழைய நகரத்தில் உள்ள முஸ்லிம்களும், இஸ்லா மிய அமைப்புகளும் இரும்புக் கரம் கொண்ட காவல்துறை அதி காரியென ஏ.கே. கானை வர்ணிக் கின்றனர். இதற்கு காரணம், ஹைதராபாத் நகரத்தில் சட்டம் ஒழுங்கை உறுதியாக நிலை நிறுத்தியவர் கான் என்பதுதான்.

கலவர சூழலின்போது ஹைத ராபாத் நகரத்தில் ஊரடங்கு உத் தரவு மற்றும் 144 தடை உத்த ரவை பிறப்பித்தவர் என்ற வகை யில் மனித உரிமை அமைப்புகள் ஏ.கே. கானை அடக்குமுறையாள ராக வர்ணிக்கின்றன.

இந்தப் பின்னணியிலிருந்து தான் ஏ.கே. கானின் இட மாற்றத்தை பார்க்க வேண்டும். சமீப காலமாக ஹைதராபாத்தில் ஹிந் துத்துவா ஆதிக்கம் பெருகியிருக்கிறது. ஆந்திர மாநில காங்கிரஸ் அரசு - வன்முறையைத் தூண்டி வரும் தொகாடியா போன்ற இந்துத்துவா முகங்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்து சிறுபான்மையினருக்கு எதிரான சிந்தனைகளை விதைக்க துணை போகிறது.

இதனை நாம் கூறவில்லை. அண்மையில் ஹைதராபாத் கல வரத்தின் பின்னணியை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த ஹைதராபாத்தைச் சேர்ந்த மனித உரிமைகளுக்கான கண்காணிப் புக் கமிட்டி கூறுகிறது.

மஜ்லிஸ் கட்சியின் ஏஜெண்ட் டாக ஏ.கே. கான் செயல்படுகி றார் என்றும், முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என் றும் ஹிந்துத்துவா அமைப்பினர் சொல்லி வரும் அதே சமயம், ஹைதராபாத் முஸ்லிம்களை ஏ.கே. கான் சட்டம் ஒழுங்கை கடுமைப்படுத்தியிருக்கிறார் என்கிற வகையில் கருத்துரைத்திருப்பது கவனிக்கத்தக்கது.

ஏனெனில் வகுப்புப் பதட்டங்கள் ஏற்படாமல் சமூக விரோதச் செயல்கள் நடைபெறாமல் நகரை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கி றார் கான் என்பதுதான் முஸ்லிம் கள் கானைக் குறித்து பாராட்டு வதற்குக் காரணம்.

இதில் முஸ்லிம்களுக்கு கான் ஆதரவானவர் என்று எடுத்துக் கொள்ள என்ன இருக்கிறது? அவர் முஸ்லிம்களுக்கு ஆதரவா ளர் என்று ஹிந்துத்துவா சொல் வதில் உண்மை இருக்குமானால் - ஹைதராபாத் நகரில் முஸ்லிம் கள் மீலாது விழாக்களை நடத் தும்போது, பிறை கொடி கட்டக் கூடாது, ஆடல் பாடல் கூடாது, பிற அமைப்பினரை தூண்டி விடும் கோஷங்கள் கூடாது. பேனர்கள் ஆங்காங்கே வைக்கக் கூடாது என்று கடுமையான நிபந் தனைகள் விதித்ததோடு, ஜாமியா நிஜாமிய்யாவின் மார்க்க அறி ஞர்களைச் சந்தித்தும் மீலாது விழாவைக் குறித்து சில கட்டுப் பாடுகளை விதிக்குமாறு கடந்த காலங்களில் கான் கேட்டுக் கொண்டாரே... இந்த முயற்சியை அவர் செய்திருக்க வேண்டிய அவசியமில்லை.

ஆக, கானின் நோக்கம் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த வேண் டும் என்பதில்தான் இருந்திருக்கி றதே தவிர, முஸ்லிம்களுக்கு ஆத ரவாக அவர் செயல்பட்டதில்லை என்பதை அவரது நடவடிக்கை கள் உணர்த்துகின்றன.

ஏ.கே. கான் 5 வார கால டிரைனிங் புரோகிராமிற்காக சென்றிருந்தபோதே - முஸ்லிம் களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நகரத்திலிருந்து உயர் பதவியிலிருக்கும் ஒரு காவல் துறை அதிகாரி மாற்றப்படுவார் என்கிற யூகம் நிலவியதாக ஆந்திரப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள் ளன.

சட்டம் ஒழுங்கை கடுமையாக்கி கட் டுப்பாடுகளை விதித் ததால் தாங்கள் எதிர்பார்த்த அள விற்கு மதப்பதட்டத் தையோ, கலவரத் தையோ உருவாக்க இயல வில்லையே என்கிற ஏமாற்றத் தில் இந்துத்துவா சக்திகள் கான் குறித்து சர்ச்சைகளை உருவாக்கி யுள்ளனர்.

ஆந்திர மாநில காங்கிரஸ் அரசும் இந்த சர்ச்சைகளை கணக் கில் எடுத்துக் கொண்டு இந்துத் துவாவினரை திருப்திபடுத்தும் நோக்கில் ஏ.கே. கானை அதிரடி யாக மாற்றியிருக்கிறது என்று தான் விளங்க முடிகிறது.

இல்லையென்றால் ஒரு நேர்மை யான, அதுவும் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருந்த, மதப் பதட்டம் உருவாக்கும் சூழலைக் கொண்ட ஒரு முக்கிய நகரத்தின் உயர் போலீஸ் அதிகாரியை மாற்ற வேண்டிய அவசியம் என்ன ஆந்திர அரசுக்கு?

ஹைதராபாத்வாசிகள் அமைதியை விரும்புபவர்கள் - ஏ.கே. கான்

ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகத்தின் நிர் வாக இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்ட பின் செய்தியாளர்களை முஷிராபாத் பஸ் பவனில் சந்தித்த ஏ.கே. கான்,

“ஹைதராபாத் வாசிகள் அமைதியை விரும்பக் கூடிய மக்கள். அவர்களுக்கு அமைதியான வாழ்க்கை வேண் டும்...” எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், செய்தியாளர்களிடம் பேசிய கான், “சிட்டி கமிஷ்னராக நான் பணியாற்றிய காலத்தில் ஹைதரா பாத் மக்கள் எனக்கு போதுமான ஒத்துழைப்பைத் தந்தனர். இந்த ஒத்துழைப்பின் விளைவால்தான் எந்த அசம்பாவிதச் சம்பவங்க ளும் நிகழவில்லை.

இந்த நேரத்தில் எனக்கு ஒத்துழைப்பை வழங்கிய ஹைதராபாத் வாசிகள், பத்திரிகை நண்பர்கள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு நான் நன்றியைத் தெரிவித் துக் கொள்கிறேன்...” எனக் கூறியிருக்கிறார்.

கான் கமிஷ்னராக பொறுப்பேற்றுக் கொண்டது நெருக் கடியான காலகட்டத்தில்தான்! கான் சந்தித்த பிரச்சினை கள் அதற்கு முன் எந்த சிட்டி கமிஷ்னரும் சந்திக்காத பிரச்சினைகள் என்று ஹைதராபாத் ஏடுகள் எழுதியுள் ளன. ஹைதராபாத் நகரத்தை அமைதி நகரமாக மாற்ற பெரும் முயற்சி எடுத்திருக்கிறார் கான்.

Pin It