கடந்த 26ம் தேதி மும்பையில் நடந்த பாஜகவின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட் டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சி யைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்து மோடி பேசியது காங்கிரஸ் கட்சியை சூடேற்றி விட்டது. மோடியை பதிலுக்குத் தாக்கத் தொடங்கி விட்டது காங்கிரஸ்.

“கூட்டாட்சி முறையில் காங் கிரஸ் அரசு அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தி விட்டது. ஒரு நிமிடம் கூட இந்த அரசு நீடிக்கக் கூடாது...” என்று மோடி காங்கிரஸ் கட்சியைப் போட்டுத் தாக்க...

“காங்கிரஸ் கட்சியின் மீது புழுதி வாரி இறைப்பதற்கு முன்னர், தனது அரசாங்கத்தின் லட்சணம் எப்படி இருக்கிறது என்பதை தனது அரசின் ரிப் போர்ட் கார்டைப் பார்த்தே மோடி தெரிந்து கொள்ளட் டும்...”என நெத்தியடி பதிலைத் தந்திருக் கும் குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அர்ஜூன் மோத்வாடியா,

“குஜராத் மாநிலத்தில் 45 சதவிகித குழந்தைகள் சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டள்ள னர். குழந்தை இறப்பு விகிதம் குஜராத்தில் அதிகமாக உள்ளது. பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் 50 குழந்தைகள் மரமணடைகின்றன. Infant Mortality Rate கணக்குப்படி குஜராத் அரசு 7வது இடத்தில் இருக்கிறது.

இந்த லட்சணத்தில் மத்திய காங்கிரஸ் அரசை விமர்சிக்கப் புறப்பட்டுவிட்டார் மோடி...” என்றும் தெரிவித்துள்ளார்.

பாஜக செயற்குழுவில் பேசிய மோடி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை சாமியார் நிர்மல் பாபாவுடன் ஒப்பிட்டுப் பேசிய தைக் குறித்து கருத்து சொன்ன அர்ஜூன் மோத்வாய்,

மோடி மோசடியாளர்களைப் பற்றி மட்டுமே யோசிக்க முடி யும். ஏனெனில் சர்ச்சைக்குரிய மோச வழக்குகளில் சிக்கிய சாமியார் அஷராம், நித்யா னந்தா போன்றவர்களுக்கு புகலிடம் தருபவர் மோடி...” என பதிலளித்துள்ளார்.

“மத்திய அரசு விவசாய நலன் களுக்கு விரோதமாக செயல்படு கிறது...” என்று செயற்குழுவில் மோடி பேச... இதற்கு பதிலளித் துள்ள அர்ஜூன், “கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு ஒரு அணையைக் கூட கட்டிய தில்லை. மின் இணைப்பு தொடர்பான விவசாயிகளின் விண்ணப்பங்கள் மாநில அர சால் அங்கீகரிக்கப்படாமல் இருக்கின்றன. முதலில் மோடி இதை கவனிக்கட்டும்...” என்று "நறுக்' பதிலைத் தந்திருக்கிறார்.

மத்திய காங்கிரஸ் அரசின் பெட்ரோல் விலை உயர்வை மோடி விமர்சனம் செய்ய... “எங்களை விமர் சிக்கும் மோடி பெட் ரோல், டீசல் மீதான வாட் வரி என்கிற பெயரில் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 25 ரூபாய் என வசூலிக்கிறார். பெட்ரோல் மீதான வாட் வரியைக் குறைக் கச் சொல்லி பலமுறை நாங்கள் மோடி அர சைக் கேட்டுக் கொண்ட பின்பும் அதைக் கண்டு கொள்ளாத மோடி அரசு மாநில மக்களின் சுமையை அதிகப்படுத் தியுள்ளது.

இயற்கை எரிவாயு விலையை 35 தடவை உயர்த்தியிருக்கிறார் மோடி. இது சில தொழிற்சாலை அதி பர்கள் லாபமடைவதற் காக செய்திருக்கிறார். இதன் விளைவாக 15 ரூபாய் பெறு மான முள்ள பொருட்கள் 55 ரூபாயாக உயரும் நிலை உள் ளது” என மோடி அரசின் லட்ச ணத்தை வெளிப்படுத்தியுள்ளார் அர்ஜூன்.

ஊழலைப் பொறுத்தவரை மோடியின் ஆட்சியில் மட்டும் 17 ஊழல்கள் நடந்துள்ளன. மக்கள் பணம் 1 லட்சம் கோடி சுருட் டப்பட்டுள்ளது. அதோடு 45 ஆயிரம் கோடி ரூபாய் அள வில் குளறுபடி நடந்துள்ளது என் பதை சி.ஏ.ஜி எனும் பொதுக் கணக்குத்துறை கண்ட றிந்துள்ளது என்றும் போட்டுத் தாக்கியிருக்கும் அர்ஜூன் மோத் வாய்,

“தனது சுய ஆதாயங்களுக் காக மோடி கொடுங்கேலனாக நடந்து கொள்கிறார். தனது இமேஜை பெரிதாக்கி காட்டுவ தற்காக மற்றவர்களை அழிக்கத் தயங்காதவர் மோடி. அவரு டைய சீனியர்களான கேசுபாய் பட்டேல், சுரேஷ் மேத்தா, டாக் டர் ஏ.கே. பட்டேல், சாஷிராம் ராணா, சஞ்சய் ஜோஷி ஆகிய குஜராத் மாநில பாஜக தலைவர் களின் அரசியல் வளர்ச்சியை இல்லாமல் ஆக்கியவர் மோடி.

அவ்வளவு ஏன். தனது அரசி யல் ஆசான் அத்வானியின் முது கில் குத்த முயற்சிக்கிறார் மோடி. மோடிக்கு மக்கள் முக்கியமல்ல. அதிகாரம்தான் மோடிக்கு வேண்டியது...” என்றெல்லாம் சர மாரியாகத் தாக்குதல் தொடுத்தி ருக்கிறார் அர்ஜூன் மோத்வாய்.

வாயைக் கொடுத்து நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கி றார் மோடி. மோடி வைத்த குற் றச்சாட்டு மேலோட்டமானவை. அர்ஜூனோ ஆதார அம்புகளை வீசி மோடியை நிலை குலைய வைத்திருக்கிறார்.

- ஹிதாயா

Pin It