லெனினுடைய பொருள் முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும் என்ற படைப்பை பயில்வது பற்றிய குறிப்புகள் 

மார்க்சியத்தை தீவிரமாக வாசித்து பயின்று நன்றாக உட்கிரகிப்பீர்என்ற தலைவர் மாவோவின் போதனையை கடைப்பிடித்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரின் பல படைப்புகளையும் தலைவர் மாவோவின் படைப்புகளை யும் திட்டமிடப்பட்ட வழியில் பயில்வதற்கு எனது முயற்சிகளை அதிகரித்தேன்.

முன்பு சாதாரண தொழிலாளியாக இருந்தேன். இப்பொழு தோ முன்னணி பொறுப்புகள் சிலவற்றை கொண்டிருக்கிறேன்.

அண்மையில் நான் லெனினுடைய பொருள் முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும் என்ற படைப்பைப் படித்தேன். அது புரட்சிகர கோட்பாட்டை பயில்வதற்கும் அனுபவ வாதத்தை வெற்றிகொள்வதற்கும் இரண்டு வழிகளுக்கு இடையிலான போராட்டம் பற்றிய எனது பிரக்ஞையை மேம்படுத்துவதற்கும் என் முயற்சிகளை இரட்டிப்பாக்குவதற்கு மிகவும் அவசியமானது ஆகும். அதை எப்போதை யும்விட மிகவும் ஆழமாக உணர்ந்திருக்கிறேன். நான் இந்த வழியில் மட்டுமே உணர்வுபூர்வ அறிவுத்தெளிவுடைய புரட்சியாளனாக மாற முடியும்; தலைவர் மாவோவின் பாட்டாளி வர்க்க புரட்சிகர வழியின் வழிகாட்டுதலின் கீழ் உறுதியாக முன்னேற முடியும்.

அனுபவம் பற்றிய எதிரெதிரான இரண்டு அனுபவங்கள்

தலைவர் மாவோ சுட்டிக் காட்டியிருப்பதாவது:

“அகநிலைக்கும் புறநிலைக்கும் இடையிலான முறிந்த தன்மையை கருத்துமுதல்வாதமும் எந்திர பொருள்முதல் வாதமும் சந்தர்ப்பவாதமும் சாகசவாதமும் உடையவை; நடைமுறையிலிருந்து அறிவு பிரிந்த தன்மையையும் உடையவை.” (நடைமுறை பற்றி)

ரஷ்யாவில் போக்டனோவும் அவரைப் போன்ற மற்ற ஏமாற்றுக்காரர்களும் திருட்டுத்தனமாக கட்சிக்குள் உட்பு குந்த அத்தகைய சந்தர்ப்பவாதிகள் ஆவர். லெனின் “பொருள்முதல் வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்ற தனது படைப்பில் இவர்களின் தன்மையை கூர்மையாக அம்பலப்படுத்துவதன் மீது தனது முயற்சிகளை ஒன்றுகுவித்தார். இந்த அயோக்கியர்கள் புரட்சிகர நடைமுறையை எதிர்த்தனர். அனுபவம் குறித்த பொருள் முதல்வாத கோட்பாட்டை மறுதலித்து உரைத்தனர். அதே சமயத்தில் புரட்சிகர கோட்பாடுகளை எதிர்க்க வும் செய்தனர்; இயங்கியல் பொருள் முதல்வாதத்தை “புதிர்” எனவும் “வறட்டுச் சூத்திரம்” எனவும் கயமைத்தனமாக அவதூறு செய்து பொருள்முதல்வாதத்தின் இடத்தில் கருத்து முதல்வாதத்தையும் மார்க்சியத்தின் இடத்தில் திருத்தல்வாதத்தையும் வைக்க தங்கள் மூளைகளை கசக்கினர்.

இந்த வகையில் அவர்கள் தனியாக இல்லை. லியுஷாவோ சியும் இதர அரசியல் ஏமாற்றுக்காரர்களும் அதையே அச்சுஅசலாகச் செய்தனர். அவர்கள் “மேதைமை” என்று அழைக்கப்படுகிற கோட்பாட்டை கொம்பூதுவதற்கு மிகையாக செயல்படும் அதே சமயத்தில் மனிதனின் திறமை நடைமுறையிலிருந்து தோன்றுகிறது என்ற பொருள்முதல்வாத கருத்துநிலையை எதிர்த்தனர். அதே சமயத்தில் மார்க்சியம் - லெனினியம் காலாவதியானது என அதை மூர்க்கமாகத் தாக்கினர். மக்கள்திரள்களை கண்காணா இடத்திற்கு வழி நடத்துவதற்கும் ஏமாற்றுவதற்கும் புரட்சிகர மக்கள் திரள்களை புரட்சிகர கோட்பாடுகளிலிருந்து பிரிப்பதற்கு அற்பமாக எத்தனித்தனர். இவையனைத்தும் காட்டுவது என்னவெனில் நாம் கருத்துமுதல்வாதத்திற்கும் இயங்காவியலுக்கும் ஆளாவதை தடுப்பதற்காக சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக போராட்டங்களை தொடுத்தாக வேண்டும். அதே சமயத்தில் நாம் நடைமுறைக்கு முதல் இடம் கொடுக்கும் கருத்துநிலையை உயர்த்திப் பிடித்து கருத்துமுதல்வாத காரண காரியவாதத்தை எதிர்த்தாக வேண்டும். அதே நேரத்தில் புரட்சிகர கோட்பாடுகளின் வழிகாட்டும் பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளித்து அனுபவவாதத்திற்கு எதிராக விழிப்புடன் இருந்து அதை வெற்றி கொண்டாக வேண்டும்.

வர்க்கப் போராட்டத்தில் நடைமுறையிலிருந்தே அனுபவம் வருகிறது என மார்க்சியம் மெய்ப்பித்து நிலைநாட்டுகிறது. அந்த வர்க்கப் போராட்டமானது உற்பத்திக்கும் அறிவியல் பரிசோதனைக்குமானது ஆகும். “அனைத்து உண்மையான அறிவும் நேரடி அனுபவத்திலிருந்தே தோன்றுகிறது” (நடைமுறை பற்றி). இது என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்தே உண்மை யாக உள்ளது. சுன் (Chun) துரப்பண துளைக் கருவி ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இது வானத்திலிருந்து கீழே விழவில்லை. நம் மனங்களிலும் உள்ளார்ந்து இல்லை. அது டஜன் ஆண்டுகளுக்கு மேலாக அனுபவத்தை உடைய நமது ஆராய்ச்சி குழுவின் உறுப்பினர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முன்னேறிய அனுபவத்தை உடையோரின் சற்றேரக்குறைய ஓராயிரம் பரிசோதனைகளின் பலன்ஆகும். வேறு சொற்களில் கூறுவதெனில், துரப்பண எந்திரத்தை இயக்குவோரின் நடைமுறை அனுபவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

அதே போல் என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்தும் அதிகமாக கற்று இருக்கிறேன். நான் ஷாங்காயில் அன்னிய முதலாளிக்கு சொந்தமான தொழிற்சாலை ஒன்றில் பதினோரு வயதிலேயே குழந்தை தொழிலாளியாக ஆனேன். தாங்கமுடியாத துயரத்தோடு உழைத்து பிழைப்புக்காக கஷ்டப்பட்டேன். அன்னிய முதலாளிகள் மற்றும் சுரண்டும் வர்க்கங்களின் கடுமையான ஒடுக்குமுறையின் கஷ்டங்களை ஏராளமாக அனுபவித்தேன். தலைவர் மாவோ மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையினால்தான் பிற்போக்கு கோமிண்டாய் ஆட்சியையும் தீய சுரண்டல் அமைப் பையும் தூக்கியெறிந்தோம். தொழிலாளர்களாகிய நாங்கள் அதுமுதற்கொண்டு எங்களது சொந்த தலைவிதியின் எஜமானர்கள் ஆனோம். இப்பொழுது சோசலிசத்தின் கீழ் மகிழ்வான வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

கட்சியால் பேணப்பட்டு பயிற்றுவிக்கப்பட்ட நான் எனது அரசியல் பிரக்ஞையை விரைவாக உயர்த்தினேன். எனது பாட்டாளி வர்க்க உணர்வுகள் - முதலாளியத்தின் மீதான ஆழமான துவேஷம் மற்றும் சோசலித்திற்கான உணர்ச்சிபூர்வ நேசம்- உடன்பிறந்தவை அல்ல; மாறாக எனது அனுபவத்தின் விளை வே ஆகும். வர்க்கப் போராட்டத்தில் நீடித்த சொந்த நடைமுறையும் உற்பத் திக்கான போராட்டமும் நேரடி அனுப வம் மிகவும் மதிப்பு வாய்ந்தது என உணர்வதற்கு எனக்கு வழிவகை செய்திருக்கிறது. ஏனெனில் அது அறிதிறன் நிகழ்வுப் போக்கில் வரிசை யில் முதலாவது ஆகும். நேரடி அனு பவம் இல்லாமல் நமது அறிவு என்பது வேர்கள் இல்லாத மரங்களைப் போன்றதாக இருக்கும்; ஊற்று இல்லாத நீர் போன்றதாக இருக்கும். புரட்சியாளர்களாகிய நாம் உலகத்தை சரியாக அறிந்து மாற்றியமைப்பதற்கு நடைமுறையையும் அனுபவத்தையும் மதித்தாக வேண்டும்.

அனைத்து கருத்துமுதல்வாதிகளும் அறிவு குறித்த பொருள்முதல்வாத வழியினை எதிர்ப்பதில் அவர்கள் மாறாமல் செய்யக் கூடியது என்னவெனில் அனுபவத்தினுடைய உள்ளடக்கங்களின் புற யதார்த்தத்தை மறுதலிப்பது ஆகும். அவர்கள் தம்மை மறைத்துக்கொண்டு மற்றவர்களை ஏமாற்றுவதற்கு அனுபவம் என்ற பதாகையை தூக்கிப்பிடிக்கும் சூழ்ச்சியையே அடிக்கடி மேற்கொள் கின்றனர். ஆனால் உண்மையில் அவர்கள் அனுபவத்தை கருத்து முதல்வாத நோக்கு நிலையிலிருந்தே வியாக்கியானம் செய்கின்றனர். இதைத்தான் போக்டனோவும் அவரது வகையறாக்களும் அச்சு அசலாகச் செய்தனர். அவர்கள் அனுபவத்தையும் பிரக்ஞையையும் “முழுதொத்த கருத்தாக் கங்கள்” (Identical Concepts) எனவும் “இயற்கைக்கு அப்பாற்பட்டவை” எனவும் புலன் உணர்வுகளின் முழு மொத்தம் எனவும் இன்னபிறவாகவும் பிதற்றினர்.

அனுபவமும் பிரக்ஞையும் நடைமுறையிலிருந்து தோன்றவில்லை எனவும் புறவய உள்ளடக்கங்கள் இல்லாதவை எனவும் அகவயமாகவே வந்தன எனவும் கூறுகின்றனர். ஆகவே அவர்கள் தோற்றத்தில் அனுபவம் பற்றி பேசினர்; ஆனால் யதார்த்தத்தில் அவர்களின் உருத்திருபுகளும் குழப்புதல்களும் அனுபவத்தை ஏதோவொரு கருத்துமுதல் வாத தன்மையதாக மாற்றிவிட்டன. லெனின் “தத்துவத்தில் பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் ஆகிய இரண்டு வழிகளும் ‘அனுபவம்’ என்ற சொல்லின் கீழ் மறைக்கப்படலாம் என்பதில் சந்தேகமே இல்லை” (பொருள் முதல்வாதமும் அனுபவவாத விமர்சனம்) என சுட்டிக்காட்டும் பொழுது அனுபவம் என்ற கருத்தாக்கத் தோடு விளையாடும் அவர்களது சூழ்ச்சியை அறிவுக்கூர் மையுடன் அம்பலப்படுத்தி விமர்சித்தார். அனுபவத்தினுடைய உள்ளடக்கங்களின் புறவய யதார்த்தத்தை பற்றி நிற்பது என்பது அறிவுத்திறன் பற்றிய பொருள்முதல்வாத வழியை உயர்த்திப் பிடிப்பதற்கான முன்தேவையாகும் என இவ்வாறு காணலாம்.

அனுபவத்தை முழுமுதலானதாக ஒருபோதும் கருதாதீர்

நமக்கு நேரடி அனுபவம் இருக்கும் பொழுது அறிதிறன் பற்றிய பொருள் முதல்வாத வழியின்படி நமது பணியை தன்னியக்கமாக செய்ய முடியுமா? இல்லை. பகுதியளவிலான அனுபவத் தை மாற்ற முடியாத சூத்திரமாக பயன்படுத்தி எங்கணும் பொருத்துதல், மாறிவிட்ட, வளர்ந்துவிட்ட புதிய விஷயங்களை பார்ப்பதற்கு பழைய அனுபவத்தை பயன்படுத்துதல் அல்லது நமது பகுதியளவிலான அனுபவத்தை குறைத்து மதிப்பிடுதல் (அ) மிகையாக மதிப்பிடுதல் (அ) மற்றவர் கள் மற்றும் மக்கள் திரள்களின் சரியான அனுபவத்தை மறுக்கவும் செய்தல் - என்ற வகையில் நேரடி அனுபவத்தை முழுமுதலானதாகவும் இறுகிப் போனதாகவும் கருதுவோமானால் அனுபவவாத தவறுகளை இழைத்தவர்கள் ஆவோம். விளைவு என்னவாக இருக்குமென்றால் போக்டனோவும் அவரைப் போன்றோரும் விளம்பரப்படுத்திய கருத்து முதல்வாத அனுபவக் கோட்பாட்டிலிருந்து முழுமையாக இன்னமும் முறித்துக் கொள்ள முடியாதவர்களாக இருப்போம்; மேலும் பிரக்ஞையுடனோ பிரக்ஞை இல்லாமலோ கருத்துமுதல் வாதம் எனும் புதைகுழியில் மூழ்குவோம்.

உலகில் உள்ள அனைத்தும் ஒன்றோடொன்று தொடர் புடையது. அதே சமயத்தில் ஒன்று மற்றதிலிருந்து வேறுபட்டதும் ஆகும். நாம் நடைமுறையில் விஷயங்களின் பொதுப் பண்புக்கு மட்டும் கவனத்தை செலுத்துக்கூடாது. ஒவ்வொன்றின் தனிப்பண்புக்கும் கவனத்தை செலுத்த வேண்டும் என்பது மிக முக்கியமானது. அதாவது ஒரு பொருளை மற்ற பொருட்களிலிருந்து வேறுபடுத்துகின்ற குறித்த முரண்பாட்டிற்கு கவனத்தை செலுத்த வேண்டும். அப்பொழுதுதான் அதற்கேற்ப முரண்பாட்டை தீர்ப்பதற்கு தகுந்த செயல் முறைகளை மேற்கொள்ள முடியும். இதுதான் பூட்டை திறப்பதற்கு சரியான சாவியை பயன்படுத்துதல் என்பதாகும். அதே போல் ஒரு மருந்து அனைத்து நோய்களையும் குணமாக்குவதற்கு பயன்படுத்த முடியாது. ஒரு விஷயத்திலிருந்து பெறப்பட்ட அனுபவங்களைப் பொறுத்தவரை, சில அனுபவங்கள் இதர விஷயங்களுக்கும் பிரயோகிக்கலாம்; சில அனுபவங்களை பகுதியளவில் பிரயோகிக்கலாம்; மேலும் சில அனுபவங்களை முழுவதுமாக பிரயோகிக்கப்பட முடியாமல் இருக்கலாம். முரண்பாடுகளின் குறித்த தன்மையை புறம்தள்ளி பழைய அனுபவத்தை எந்திரத்தனமாக பொருத்துவது அனுபவவாதமே ஆகும்.

எடுத்துக்காட்டாக, நான் எஃகில் துளைகளை இட்டதுண்டு. அதனால் அனைத்து வகையான எஃகி னை பதனம் செய்வதன் சிறப்பு இயல்புகளுடன் முழுவதுமாக பரிச்சயத்துடன் இருந்தேன். ஆனால் வார்ப்பு இரும்பு மற்றும் செம்பினுடைய பண்புகள் பற்றி அதிகம் அறியாமல் இருந்தேன். ஒரு தடவை அத்தகைய உலோகங்களை பதனம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டேன்.

நான் அது பற்றி ஆராயப் புகாமலேயே அது ஏறத்தாழ எஃகை ஒத்ததே என நினைத்தேன். இதனால் எஃகு பாகங்களை பதனம் செய்வதைப் போன்றே அதே வழியில் பணியாற்றினேன். விளைவாய், முதல் துரப்பண துளைக் கருவி கண்ணிமைப் பொழுதில் எரிந்து விட்டது. இரண்டாவது துரப்பண துளைக்கருவியோ ஆழமாக துளையிடுவதற்கு முன்பேயே உடைந்து போயிற்று. என்ன காரணம்? ஏனெனில் நான் எஃகை துளையிடுவதில் பெற்ற அனுபவத்துடனேயே ஒரு பக்கமாக இறுகிப் போய் பகுதியளவிலான அனுபவத்தை ஏதோவொரு முழுமுதல் என கருதியதால்தான் ஆகும். நான் வார்ப்பு இரும்பு மற்றும் செம்பினுடைய பிரத்யேக பண்புகளை கவனித்து பண்புரீதியாக வேறுபட்ட முரண்பாடுகளை தீர்ப்பதற்கு வேறுபட்ட வழிமுறைகளை பயன் படுத்தாததால் புற நிலை யிலிருந்து அகநிலையினை முறித்துக்கொண்டு எதிர்பாராத் தடங்கலில் மாட்டிக் கொண்டேன்.

உலகத்தில் ஒவ்வொன்றும் மாறிக்கொண்டிருக்கிறது. அது தன் வளர்ச்சிப் போக்கில் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில்தான் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. ஆகவே நமது சிந்தனையானது புறத்தில் உள்ளவற்றின் குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தை கடக்கக் கூடாது. எதிர்காலத்தில் என்ன செய்ய முடியுமோ அதை நிகழ்காலத்தில் செய்யக் கூடாது. எல்லாவற்றையும் ஒரே வீச்சிலேயே செய்து முடிக்கும் கனவு இருக்கக்கூடாது. எனினும் புறத்தில் உள்ள வை மாறுவதால் நமது சிந்தனையும் அதற்கேற்ப மாறியாக வேண்டும். அதனால் புற எதார்த்தத்தின் வளர்ச்சிக்கு பின்தங்காமல் புதிய சிக்கல்களை தீர்ப்பதற்கு பழைய அனுபவத்தை பயன்படுத்தாமல் இருப்போம். கடந்தகால அனுபவம் சரியானதே என நாம் கூறுகிறோம். ஏனெனில் அது நடைமுறையின் மூலம் பெறப்பட்டதே. ஆனால் நிலைமைகள் மாறியபொழுதும் அதனோடு விடாது ஒட்டிக்கொண்டு இருப்போமானால் அப்பொழுது அத்தகைய அனுபவம் ஏதோ அகவயமானதாக மாறுகிறது.

நான் தொழிற்சாலையில் முன்னணி பொறுப்பை மேற் கொண்டதிலிருந்து ஒவ்வொரு நாளும் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகி றேன். இந்த தொழிற் சாலையில் தேர்ச்சிபெற்ற வேலையா ளாகிய நான் அதனுடைய அரசியல் மற்றும் உற்பத்தி நிலைமைகளில் நன்றாக பரிச்சயமானவன் எனவும் எனது கடந்த கால அனுபவத்தினால் எந்தவொரு சிக்கலையும் போதிய அளவுக்கு கையாள முடியும் எனவும் எண்ணினேன். ஆனால் நான் கற்பனை செய்திருந்ததற்கு முர ணாக, கடுமையாக முயற்சித்தாலும் எனது பணியில் சிலவற்றை திருப்திகரமாக செய்வதற்கு தவறினேன். இதற்கு காரணம் என்னவெனில் நான் பழைய வழியிலேயே விஷயங்களைச் செய்வதற்கு பரிச்சயத்துடன் இருப்பதுடன் என்னுடைய சிந்தனையானது யதார்த்தத் திற்கு பின்னால் பின்தங்கி இருப்பதேயாகும். அதே சமயத்தில் நிலைமைகள் ஓயாது மாறிக் கொண்டும் வளர்ந்து கொண்டும் வருவதுடன் கடந்த காலத்திய சிக்கல்களிலிருந்து மாறுபட்ட புதிய சிக்கல்கள் எதிர்பாராமல் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

நான் பின்னர் இந்த சூழலை சீர்ப்படுத்துவதற்கு ஆய்வுகளை மேற்கொண்டு பயிலுவதற்கு கவனத்தைச் செலுத்தி அரசியல் திசைவழி மற்றும் வழியோடு தொடர்புடைய சிக்கல்களுக்கு அதிக நேரத்தையும் ஆற்றலையும் அர்ப்பணிப்பதற்கு செக்குமாட்டுத் தனமான வேலையிலிருந்து என்னை விடுவித்து எனது வேலை முறைகளை மேம்படுத்த முனைந்தேன். இந்த வழியில் எனது பணியில் பெரிய தன்முனைப்பாக்கத்தைப் (initiative) பெற்றேன்.

நடைமுறை செயற்பாட்டின் எல்லையானது தீவிரமாக பரவலாக இருக்கிறது. ஆனால் தனிநபருடைய நடைமுறையின் வீச்செல்லை எப்பொழுதும் வரம்புக் குட்பட்டே இருக்கிறது. நாம் தனிப்பட்ட நடைமுறையிலிருந்து பெறப்பட்ட நேரடி அனுபவத்திற்கு முக்கியத்துவத்தை கொடுக்கும் அதே சமயத்தில் மக்கள் திரள்களின் ஆக்கங்களை சேமித்து போற்றி வைக்க வேண் டும்; ஆய்வுகளை மேற்கொண்டு பயில்வதில் சிறந்து விளங்க வேண்டும்; ஏனைய மக்களின் அனுபவத்திலிருந்து திறந்த மனதோடு கற்கவேண்டும். இவ்வாறு மட்டுமே நமது பணியை சிறப்பாகச் செய்யமுடியும்.

சுன் துரப்பண துளைக் கருவி எவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டு புதிதாக மாற்றியமைக்கப்பட்டது என்பதை நினைவு கூர்கையில் மக்கள்திரள்களின் நடைமுறை என்பது அசலான ஞானக்கடல் என்ற ஆழமான புரிதலுக்கு வந்தேன். துரப்பணத்தில் மக்கள் திரள்களின் கண்டுபிடிப்புகளையும் புதுமைகளையும் மனச்சாட்சியோடு பயின்று ஆய்வு செய்து அவர்களின் வளமான அனுபவங்களிலிருந்து ஊட்டத்தை உட்கொண்ட பின்னரே சுன் துரப்பண துளைக்கருவியால் ஒப்புநோக்கத்தக்க ஐந்து பெரிய மாறுதல்களை மேற்கொள்ள முடிந்தது. யாருக்கும் எல்லாவற்றிற்கும் நேரடி அனுபவத்தை பெற்றிருக்க முடியாது. பெரும்பாலான அறிவு மெய்யாகவே மறைமுக அறிவிலிருந்தே வருகிறது.

யாராவது ஒருவர் தன்னை மட்டுமே நம்பி மக்கள்திரள்களின் அனுபவத்திற்கு எதிராக தனது தனிப்பட்ட அனுபவத்தை வைப்பாரானால் அவர் கூட அனுபவவாத தவறுகளை இழைப்பார். தலைவர் மாவோ கூறியிருப்பதாவது; “திறந்த மனதுடன் ஏனை யோரின் அனுபவத்திலிருந்து கற்பதும் அவசியமானதே. அனைத்து விஷயங்களிலும் ஒருவரின் சொந்த தனிப்பட்ட அனுபவத்தை வலியுறுத்துவது என்பது அப்பட்டமான ‘குறுகிய அனுபவவாதமே’. அந்த தனிப்பட்ட அனுபவம் இல்லாத நிலையில் ஒருவர் தனது சொந்த கருத்துகளை பிடிவாதமாக பற்றிப் பிடித்து ஏனையோரின் அனுபவத்தை நிராகரிப்பதும் குறுகிய அனுபவவாதமே ஆகும்.” (சீனப் புரட்சிகரப் போரில் மூல உத்திச் சிக்கல்கள்)

ரஷ்யாவில் உள்ள போக் டனோ முதல் சீனாவில் உள்ள லியு ஷாவோசி போன்ற அரசியல் ஏமாற்றுக்காரர்கள் வரை அனைத்து சந்தர்ப்பவாதிகளும் தமது திரிபுவாத அரசியல் வழிகளை முன் தள்ளுவதற்கு எப்பொழுதுமே பொருள்முதல்வாதத்தை எதிர்த்து கருத்துமுதல்வாதத்தை வெறிகொண்டு வாதிட்டனர். அனுபவவாதம் என்பது அகநிலைவாதம் மற்றும் பெயரளவு வாதத்தின் வெளிப்பாடு ஆகும். அது கருத்தியல்ரீதியாக இயங்கியல் பொ ருள் முதல்வாதம் மற்றும் வரலாற்று பொருள்முதல் வாதம் என்ற அடிப் படை கொள்கைகளுக்கு எதிராக பயணம் செய்கிறது. ஏன் அனுபவவாதிகள் இடது அல்லது வலது சந்தர்ப்ப வாதிகளை முரட்டுத் தனமாக அடிக்கடி பின்பற்றுகிறார்கள் என்பதற்கான கருத்தியல் மூலவேர் இதுவே. திரிபு வாதிகள் மார்க்சி யத்தின் கோட்பாட்டு வெற்றியைத் தொடர்ந்து மக்களை ஏமாற்றுவதற்கு வதந்திகளையும் தர்க் கத்தையுமே மேலும் மேலும் மேற்கொள்கிறார்கள்.

லெனின் இவ்வாறு சொன்னதாவது: “மார்க்சிய முகமூடியின் கீழ் மார்க்சியத்தை எப்போதுமே சூட்சுமமாக ஏமாற்றுவது, பொருள்முதல்வாத எதிர்ப்பு நெறிமுறைகளை எப்போதுமே சூட்சுமமாக வைப்பது - இதுதான் பொதுவாக அரசியல் பொருளாதாரத்தில், செயலுத்தி குறித்த சிக்கல்களில், தத்துவத்தில் அதே அளவில் அறிதல் இயலிலும் சமூகவியலிலும் நவீன திரிபுவாதத்தின் அம்சமாக இருக்கிறது.” (பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்). இந்தச் சூழ்நிலைமைகளின்கீழ் அனுபவவாதத்துடன் இருப்போர் புரட்சிகர நடைமுறையில் மார்க்சியத்தின் வழிகாட்டும் பாத்திரத்தை புறம் தள்ளுவதால், புரட்சிகரக் கோட்பாட்டினை பயில்வதில் கவனத்தைச் செலுத்தாததால், எப்போதாவது ஏற்படும் வெற்றிகள் மற்றும் உண்மை குறித்த தெளிவற்ற காட்சித் துணுக்குகளின் மீது மெத்தனமாக இருப்பதால், குறுகிய, கொள்கை இல்லாத “நடைமுறைவாதம்” (Pragmatism) என்பவற்றால் நஞ்சூட்டப்பட்டு இருப்பதால், எதிர்காலம் இல்லாத மூளையற்ற “நடைமுறை மனிதர்களாக” இருப்பதால், உறுதியான சரியான அரசியல் திசைவழி இல்லாமல் இருப்பதால், போலி மார்க்சியவாதிகளாகிய அரசியல் மோசடிக்காரர்களின் இயல்பான கருத்தியல் கைதிகளாக இருக்கிறார்கள்.

கடமையுணர்ச்சியுடன் பயின்று அனுபவவாதத்தை வெற்றிகொள்ளுதல்

அனுபவவாதத்தை வெற்றிகொள்வதற்கான அடிப்படை வழி என்பது மார்க்சியத்தை கடமையுணர்ச்சியுடன் பயில்வதே, லெனின் ரஷ்யாவில் கட்சிக்குள்ளே கருத்தியல் மற்றும் அரசியல்வழி மீதான போராட்டத்தின் வரலாற்று அனுபவத்தை தொகுத்து மார்க்சிய கோட்பாட்டின் முக்கியத்துவம் மற்றும் அவசியத்தை திரும்பத்திரும்ப விளக்கினார். அவர் ரஷ்யாவில் உள்ள மாக்கியவாதிகளை (Machists) விமர் சிப்பதற்கு மார்க்ஸ் மற்றும் எங்கெல் லின் தலையாய தத்துவப் படைப்பு களிலிருந்து பொங்கி வழிகின்றவாறு அனுபவம் குறித்த கருத்துமுதல்வாதக் கோட்பாட்டிற்கு மரண அடிகளைக் கொடுத்து இதன் வாயிலாக கோட்பாட்டு ரீதியாகவும் நடைமுறையிலும் நமக்கு சிறப்பான எடுத்துக்காட்டாக திகழ்கிறார். நாம் அனுபவவாதத்தை கோட்பாட்டு ரீதியாக விமர்சிப்பதற்கு தத்துவத்தை கட்டாயம் பயில வேண்டும்.

தலைவர் மாவோ கூறியிருப்பதாவது: “நடைமுறை வேலையில் அனுபவம் வாய்ந்தவர்கள் கோட்பாட்டை படிக்க வேண்டும். தீவிரமாகப் படிக்க வேண்டும். அதன் மூலம்தான் அவர்கள் தங்கள் அனுபவத்தை ஒழுங் கமைக்கவும் தொகுக்கவும் கோட்பாட்டு நிலைக்கு அதை உயர்த்தவும் முடியும். இவ்வகையில்தான் அனைத்தும் தழுவிய பேருண்மைக்காக தங்கள் பகுதியளவிலான அனுபவத்தை தவறாகப் பயன்படுத்தமாட்டார்கள். அனுபவவாத தவறு இழைக்கமாட்டார்கள்” (கட்சியின் வேலை முறையினை சீர் செய்க), என்னைப் போன்ற ஒரு தொழிலாளி -ஊழியர் (worker-cadre) கட்சி மீதும் தலைவர் மாவோ மீதும் அதே சமயத்தில் எனது பணியில் உள்ள அனுபவத்தின் மீதும் ஆழமான வர்க்க உணர்ச்சிகளை கொண்டிருப்போர் ஆவர். ஆனால் சாதாரண வர்க்க உணர்ச்சிகள் இரு வழிப் போராட்டத்தில் பிரக்ஞையை இடம் பெயர்க்க முடியாது;தூய நடைமுறை அனுபவம் மார்க்சிய - லெனினியத்தை இடம்பெயர்க்க முடியாது. நான் உலகப் புரட்சி மற்றும் சீனப் புரட்சியின் அனுபவத்தொகுப்பான மார்க்சிய - லெனினிய - மாசேதுங் சிந்தனையை பயில்வதன் முக்கியத்துவத்தை புறம்தள்ளுவேனானால் அனுபவவாத தவறுகளை இழைப்பதை தவிர்க்க முடியாது.

நடைமுறையிலிருந்து பெறப்பட்ட நேரடி அனுபவம் புற உலகின் குறிப்பிட்ட யதார்த்தத்தை பிரதிபலித்தாலும் அது புலன் அறிவு மட்டுமே. அந்தப் பிரதிபலிப்பு என்பது மேலோட்டமானது; பகுதியளவிலானது; முழுமையற்றது. “ஒப்பீட்டளவில் முழுமையான அறிவில்லாமல் நல்ல முறையில் புரட்சிகர வேலை செய்வதென்பது முடியாத ஒன்று” (கட்சியின் வேலைமுறையினை சீர் செய்க, ஒப்பீட்டளவிலான முழுமையற்ற அறிவை ஒப்பிட்டளவிலான முழுமையான அறிவாக மாற்றியமைப்பதற்கு புரட்சிகரக் கோட்பாட்டை கடமையுணர்ச்சி யுடன் பயில்வது அவசியம்; ஒருவரது நேரடி அனுபவத்தை, தனிச் சிறப்பாக, வர்க்கப் போராட்டத்தில் உள்ள அனுபவத்தை, இருவழிப் போராட்ட அனுபவத்தை தொகுப்பதற்கு மார்க்சிய - லெனினிய நோக்குநிலை, பார்வை, வழிமுறை ஆகியவற்றை பயன்படுத்துவது அவசியம். புலனறிவிலிருந்து மறுகட்டுமானம் மூலமாக பகுத்தறிவாக பாய்ச்சல்ரீதியாக மேற்கொள்வதற்கு சக்கையை கைவிட்டு சாரத்தை தேர்ந்தெடுக்க, பொய்மையை ஒழித்துக் கட்டி உண்மையை தக்கவைக்க, ஒன்றிலிருந்து மற்றதற்கு செல்வதற்காக, வெளிப்புறத்திலிருந்து உட்புறத்திற்கு செல்வதற்காக -மார்க்சிய-லெனினிய நோக்குநிலை, பார்வை, வழிமுறை ஆகியவற்றை பயன்படுத்துவது அவசியம்.

இந்த நிகழ்வுப் போக்கில் சரியான நோக்கு நிலை, பார்வை, வழிமுறை ஆகியவை தனிச்சிறப்பாக முக்கியமானவையே. மார்க்சிய நோக்குநிலை, பார்வை, வழிமுறை ஆகியவை இல்லாமல் அறிதிறனில் ஒரு பாய்ச்சல் என்பது அடையப்பட முடியாது. ஒருவர் விஷயங்களை அனுபவவாத கருத்துக் கோணத்திலிருந்து பார்ப்பாரானால் சாரத்திலிருந்து சக்கையை பிரித்தறிய இயலாது இருப்பார். மாறாக பொய்மையையும் உண்மைகளையும் தலைகீழாக்குவார். மேலும் அவரால் அனுபவத்திலிருந்து -வர்க்கப் போராட்டம் மற்றும் இருவழிப் போராட்டத்தின் நேர்மறை மற்றும் எதிர்மறை அனுபவத்திலிருந்து - சரியாக கற்றுக் கொள்ளமுடியாது என்பதில் ஐயமே இல்லை. இயங்கியல் பொருள்முதல்வாதம் மற்றும் வரலாற்றுப் பொருள் முதல் வாதம் என்ற கருத்துக் கோணங்களை படிப்படியாக உட்கிரகிப்பதற்கு கடமையுணர்ச்சியுடன் பயின்றால் விஷயங்களின் சாரத்தை ஆழமான முழுமையான வகையில் அறிந்து கொண்டு புற விஷயங்களின் விதியை உட்கிரகித்துக் கொண்டு பிரக்ஞையை மேம்படுத்தி பணியில் குருட்டுத் தனத்தை தவிர்க்க முடியும்.

லெனின் கூறியதாவது: “நாம் மார்க்சிய கோட்பாட்டுப் பாதையை கடைப்பிடிப்பதன் வாயிலாக புறவய உண்மை க்கு (அதை எப்போதும் வெறுமையாக்காமல்) நெருக்க மாகிக் கொண்டே இருப்போம். ஆனால் வேறு எந்தப் பாதையையும் பின்பற்றுவதன் வாயிலாக எதையுமே அடைய மாட்டோம்; குழப்பத்தையும் பொய்களையும் தவிர” (பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்). வர்க்கப் போராட்டமும் இருவழிப் போராட்டமும் நீண்டகாலம் நிலவும். பழைய முரண்பாடுகள் தீர்க்கப்பட்டபிறகு புதிய முரண்பாடுகள் தோன்றும். ஒரு சண்டையில் வென்ற பிறகு புதிய சண்டைகளில் சண்டையிட வேண்டியிருக்கிறது. புற உலகின் மாறும் இயக்கமானது ஒருபோதும் நிற்காது; நமது நடைமுறையில் உண்மை குறித்த நமது அறிவும் ஒருபோதும் முடிவுறாது. எனவே நாம் வாழ்கின்றவரை புரட்சியை நடத்துவோம்; தொடர்ந்து பயில்வோம். 

நிசிபு

நன்றி : பீகிங் ரிவ்யூ, எண்- 43, அக். 27, 1972

*இது நிசிபு மற்றும் அவர் சார்ந்த குழுவும் துளைக் கருவி வடிவமைப்பு பற்றிய மரபுரீதியான கோட்பாடுகளை தூக்கியெறிந்து கண்டு பிடித்த புதிய வகையிலான துரப்பண துளைக் கருவியை சுட்டுகிறது. இந்த புதிய துளைக்கருவியானது இயக்குதிறத்தை இரண்டிலிருந்து மூன்று மடங்குகளாகவும் ஆயுள் காலத்தை மூன்றிலிருந்து நான்கு மடங்குகளாகவும் அதிகரித்துள்ளது. இவர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த பலனாக சுன் துரப்பண துளைக்கருவி உருவானது. சுன் என்ற சீன சொல் குழு அல்லது மக்கள் திரள்கள் என பொருளாகும்.

மொழியாக்கம் பாஸ்கர்

Pin It