அமைப்பாக்கும் போது, மக்கள் திரள் அமைப்புக்கும் கட்சி அமைப்புக்கும் இடையிலான தெளிவான வேறுபாட்டை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அவை இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவையாக இருப்பினும், இவ்விரண்டிற் கும் கறாரான வேலை தன்மைகள் உண்டு. கட்சி அiப்பு, மக்களின் எல்லாத் தரப்பினரின் போராட்டங்களிலும் பங்கெடுக்கிறது. ஆனால் மக்கள்திரள் அமைப்போ, தனது சொந்தக் கோரிக்கைகளுக்கான தனது சொந்தப் போராட்டங்களில் மட்டுமே பங்கெடுத்துக் கொள் கிறது; அவை போதிய அளவு உணர்வு பெற்றிருக்கும் போது, இதர தரப்பினரின் போராட்டங்களையும் ஆதரிக்கும். எனவே மக்கள்திரள் அமைப்பு, ஒரு தரப்பு மக்களை அவர்களுடைய பொதுக் கோரிக்கைகளை மையமாக வைத்து கிளர்ந்தெழச் செய்கிறது. ஆனால் கட்சி அமைப்போ, எல்லாத் தரப்பு மக்களையும் அவர்களது பொதுவான கோரிக்கைகளை மையமாக வைத்துக் கிளர்ந்தெழச் செய்கிறது.

ஒரு மக்கள்திரள் அமைப்பிற்கு வலிந்து மார்க்சிய சாயம் அடிக்க முயல்வதும், அவ்வாறு செய்வதும் அதனைத் தனிமைப்படுத்திவிடும். ஏனெனில் ஒரு மக்கள்திரள் அமைப்பில் பல்வேறு சித்தாந்தப் பிடிப்பு உடையவர்கள், ஆனால் அதே வேளையில் பொதுவான நோக்கத்தை உடையவர்கள் இருப்பர். இருப்பினும், சாத்தியமானவரை கட்சி அதற்குத் தலைமை தாங்க முயற்சிக்க வேண்டும், தலைமையளிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதற்கான சாத்தியமில்லாதிருந்தால், இதர கட்சிகளின் தலைமை யிலுள்ள மக்கள் திரள் அமைப்புகளில் வேலை செய்து bhகண்டிருக்கிற கம்யூனிஸ்டுகள், ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டு மக்களுக்கு விளங்கக் கூடிய மொழியில், பாட்டாளிவர்க்கக் கட்சியின் வழியில் நின்று பிரச்சாரம் செய்ய வேண்டும்.

- கதீப் அன்சாரி (கோபட் காண்டி)

(மக்களிடையே நமது பணிகள்)

 

நெகிழ்வற்ற ஒரு பக்க அணுகுமுறையைக் கொண்டால் “எல்லா வேலைகளுமே கிராமப் புறங்களில்தான் - விவசாயிகளே பிரதான சக்தி” என்பதாகவும் அல்லது “எல்லா வேலைகளுமே தொழில்துறை பாட்டாளிகளிடம்தான் - முன்னணி சக்தி அதுதான்” என்பதாகவும் தவறான முடிவுகளுக்குக் கொண்டு செல்லலாம். இதுபோன்ற ஒரு பக்கப் பார்வையும் நெகிழ்வற்ற போக்கும் மிகவும் ஊறு விளைவிக்கும்.

மேலும் இது, ஒரு பகுதியிலுள்ள மக்களிடையே உள்ள புரட்சிகர உணர்வு, அமைப்பு ஆகியவற்றின் வளர்ச்சி நிலையை உள்ளிட்ட அந்தப் பகுதியின் மற்ற எல்லா அம்சங்களையும் புறக்கணித்துவிட்டு, ஒரு பகுதிக்குப் பொருத்தமானதை நாடு முழுவதற்கும் பொருத்தமானது என்று வலியுறுத்தும்படி தோழர்களை இட்டுச் செல்லும். ஆனால், உடனடியான நடைமுறையைக் கணக்கிலெடுத்து நோக்கும்போது ஒரு பகுதிக்கு மிகவும் பொருத்தமாயிருப்பது, மற்ற பகுதிக்கும் பொருத்தமாயிருக்க வேண்டும் என்று அவசியமில்லை.

      - கதீப் அன்சாரி (கோபட் காண்டி)

(மக்களிடையே நமது பணிகள்)

 

யதார்த்த நோக்கில், மக்கள் அனைவரின் உணர்வு மட்டமும் சீராக ஒன்றுபோல் இருக்கும் என்று கருதுவது சரியானது அல்ல. மாவோ கூறியுள்ளதாவது:

“குறிப்பிட்ட எந்த இடத்துப் பொது மக்கள் மத்தியிலும் ஒப்பீட்டு வகையில் ஊக்கமானவர்கள், நடுநிலையாளர்கள், ஒப்பீட்டு வகையில் பின்தங்கியவர்கள் என்ற மூன்று பகுதியினர் இருப்பர். எனவே, தலைவர்கள் சிறிய தொகையினராக உள்ள ஊக்கமானவர்களைத் தலைமை யைச் சூழ ஐக்கியப்படுத்தி, அவர்களை முதுகெலும்பா கக் கொண்டு, நடுநிலையாளர்களின் தரத்தை உயர்த்தி, பின்தங்கியவர்களை வென்றெடுப்பதில் தேர்ச்சி பெற வேண்டும்.”

நடைமுறையில் நிகழக் கூடியது என்னவெனில், தோழர்கள் முன்னேறிய சக்திகளின் மீது மட்டும் கவனத்தைச் செலுத்துவதும், மற்றவர்களைப் பற்றி மறந்து விடுவதுமாகும். இது சரியல்ல. மற்றவர்களை உணரவைப்பதுதான் மிகவும் கடினமானதும் சிக்கலா னதுமாகும்.

  - கதீப் அன்சாரி (கோபட் காண்டி)

(மக்களிடையே நமது பணிகள்)

Pin It