1987 சூலை 11 அன்று யூகோசுலோவிகியாவில் 500ஆவது கோடி குழந்தை பிறந்தது. இதையொட்டி அய்க்கிய நாடுகள் மன்றம் ஒவ்வோர் ஆண்டும் சூலை 11ஆம் நாளை உலக மக்கள் தொகை நாளாகக் கொண்டாடுமாறு அறிவித்தது.

உலக மக்கள் தெகை

                ஆண்டு            கோடியில்

கி.பி.   1             20

                1000       27

                1500       45

                1800       100

                1927       200

                1960       300

                1975       400

                1987       500

                1999       600

                2011       700

உலக மக்கள் தொகை 20 கோடியிலிருந்து 100 கோடியாக உயருவதற்கு 1800 ஆண்டுகளாயின. ஆனால் அடுத்த 211 ஆண்டுகளில் 700 கோடியாக உயர்ந்துவிட்டது. கொள்ளை நோய்களுக்கும் தொற்று நோய்களுக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதே இதற்கு முதன்மையான காரணம் ஆகும். அடுத்த தாகத் தேச அரசுகள் உருவாகி மக்களுக்குக் குறைந்த அளவிலேனும் வாழ்க்கைக்கான அடிப்படை வசதி களை அளிக்க வேண்டும் என்று எடுத்த நடவடிக்கை கள் காரணமாகும். இதற்கு உலக அளவில் தொழிலா ளர்களின் போராட்டங்களும், அறிவியலறிஞர்களின் அரிய கண்டுபிடிப்புகளும் உந்துவிசையாக இருந்தன.

இப்போது மக்கள் தொகை சீனா 135 கோடி, இந்தியா 121 கோடி, அமெரிக்கா 32 கோடி, இந்தோ னேசியா 24 கோடி, பிரேசில் 20 கோடி.

90 விழுக்காடு நாடுகள் 10 கோடிக்கும் குறை வான மக்கள் தொகை கொண்டவைகளாகும். கடந்த 200 ஆண்டுகளில் மற்ற நாடுகளைச் சுரண்டிக் கொழுத்த அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகளில் வாழ்க்கைத்தரம் உயர்ந்ததால் அந்நாடுகளில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கிட்டத்தட்ட 0% என்ற நிலையில் உள்ளது. எனவே இந்நாடுகள் இந்தியா, சீனா போன்ற மூன்றாம் உலக நாடுகளை மக்கள் தொகையைக் குறையுங்கள்; அப்போதுதான் உங்கள் நாடுகளில் வறுமையை ஒழிக்க முடியும் என்று அறிவுரை கூறுகின்றன. ஆனால் இவ்வாறு கூறுகின்ற இந்த ஏகாதிபத்திய நாடுகள், இப்போது உலகமயம் என்ற பெயரால் பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங் களையும் மலிவான மனித உழைப்பையும் சுரண்டிக் கொண்டிருக்கின்றன.

எனவே இந்த முதலாளித்துவ - ஏகாதிபத்தியச் சுரண்டலை முதலில் ஒழித்தாக வேண்டும். ஒரு சிறு பகுதியினருக்குச் செல்வத்தையும் பெரும் பகுதி மக்களுக்கு ஏழ்மையையும் துன்பத்தையும் அளிப்பதே முதலாளியத்தின் அடிப்படையான செயல்பாடாகும்.

அதனால்தான் உலக அளவில் மேல்தட்டில் உள்ள 20 விழுக்காட்டுப் பேர் 84 விழுக்காடு வருவாய் பெறுகின்றனர். அடிமட்டத்தில் உள்ள 60 விழுக்காட்டுப் பேர் வெறும் 6 விழுக்காடு வருவாய் மட்டுமே பெறுகின்றனர். நடுவில் உள்ள 20 விழுக்காட்டுப் பேர் 10 விழுக்காடு பெறுகின்றனர்.

11.7.12 அன்று தினத்தந்தி நாளேட்டில், உலக மக்கள் தொகை பற்றிய கட்டுரையில், “இந்தியாவைப் பொறுத்த வரையில் அனைத்து முன்னேற்றத்துக்கும் தடையாக இருக்கும் மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. முதலாளியத்தின் குரல் இது. இதையே எல்லா ஊடகங்களும் எப்போதும் எதிரொலிக்கின்றன.

இந்தியாவில் கடந்த ஆண்டு மொத்தத் தானிய உற்பத்தி 25 கோடி டன். இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களுக்கும் முறையாகப் பகிர்ந்தளித்தால், எல்லோரும் மூன்று வேளையும் உண்ண இது போதுமானது. இதேபோன்று கடந்த ஆண்டு உலக அளவில் தானிய உற்பத்தி 242 கோடி டன். இது உலக மக்கள் அனைவருக்கும் உணவளிக்கப் போது மானதாகும். எனவே உற்பத்தியில் 80 விழுக் காடு அளவுக்கு மேல்தட்டில் உள்ள 10 விழுக்காட்டுப் பேர் எடுத்துக் கொள்ளும் கொடுமையை ஒழிக்க வேண்டும்.

கிட்டத்தட்ட சமமாக அனைத்தையும் அனை வருக்கும் பகிர்ந்தளிப்பது ஒன்றே வறுமையை ஒழிப்ப தற்கான வழியாகும். சமதர்மம் என்பது இது தான்.

எனவே இதைச் செயல்படுத்தக் கூடிய குறிக் கோளும் செயல்திட்டமும் கொண்டது சோசலிச ஆட்சி முறையே ஆகும். இனி எதிர்காலத்தில் அந்தந்த நாட்டின் வரலாற்றுச் சூழலுக்கு ஏற்ற தன்மையிலான சோசலிச ஆட்சி முறை ஏற்படுவது தவிர்க்க முடியாத தாகும். இதை விரைவுபடுத்த வேண்டியது உழைக் கும் மக்களின் கடமையாகும்.

Pin It