காரல் மார்க்சை அறிவாயா?
 கண்ணின் மணியே அறிவாயா?
நீரும் நிலனும் உள்ளவரை
 நினைந்திட வேண்டிய மாமனிதர்!
படிப்பு படிப்பு படிப்புஎனப்
 படிப்பில் தோய்ந்த அறிவாளி
வெடித்துச் சீறும் தோட்டாவின்
 விசைபோல் இயங்கிய போராளி
மனைவி ஜென்னி மார்க்சோடு
 மாளா வறுமையைச் சந்தித்தார்
மலைபோல் துயர்கள் வந்தாலும்
 மக்களைப் பற்றியே சிந்தித்தார்
காலம் முழுதும் உழைப்போர்தம்
 கண்ணீர்க் கதையை ஆராய்ந்தார்
மூலதனம் நூல் வழியாக
 முழுவிடுதலைக்கும் விடைகண்டார்
முதலா ளியத்தின் முதுகொடித்துச்
 சுரண்ட லுக்கு விடைகொடுத்தார்
தொழிலா ளர்தம் அரசமைக்கத்
 துணையாம் கருத்தியல் படைத்தளித்தார்
உலகில் யார்க்கும் வாய்க்காத
 உயிர்த்தோழர்தான் எங்கல்சாம்
உலகம் உள்ள மட்டுக்கும்
 உயிர்வாழும் இவர் தத்துவமாம்!
Pin It