கவுதம புத்தர் சித்தார்த்தர்
கண்ட நெறியே பவுத்தநெறி
பவுத்தம் என்பது மதமல்ல
பக்திநெறி அதன் வழியல்ல
பகுத்த றிந்தே பார்த்திடுவீர்
எதையும் ஆய்ந்தே ஏற்றிடுவீர்
வகுத்த புராணம் சாத்திரம்பொய்
வருண சாதிப் பேதம்பொய்
உயிர்க் கொலைகள் கூடாது
பிறவியில் மேல்கீழ் கிடையாது
முயற்சிகள் தோல்வி அடையாது
மூடத்தனம் கரை சேர்க்காது
என்பவை புத்தர் பொன்மொழிகள்
எவர்க்கும் ஏற்ற நல்வழிகள்
பொன்மொழிகள் கைக்கொண்டிடுவோம்
புத்தர் கொள்கை போற்றிடுவோம்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
சிந்தனையாளன் - ஜனவரி 2013
சிறுவர் பாடல் - கவுதம புத்தர்
- விவரங்கள்
- தமிழேந்தி
- பிரிவு: சிந்தனையாளன் - ஜனவரி 2013