வடக்கநந்தல் வளர்மதி மருத்துவமனை என் உடல்நிலையை வளப்படுத்தியது

என் வாழ்நாளில் முதன்முறையாக வலப்புறக் குடல் இறக்கத்துக்கு 1992-இல் சென்னையில் இசபெல் தனியார் மருத்துவமனையில் மருத்துவர் நா.மோகன் அவர்களிடம் அறுவை மருத்துவம் செய்துகொண்டேன்.  அதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்தவர், இப்போது மா.பெ.பொ.க. துணைப் பொதுச் செயலாளராக இருக்கின்ற தோழர் சி.பெரியசாமி ஆவார்.

அடுத்து, 2006-ல் சென்னை அரசு தலைமை மருத்துவமனையில், அப்போது தலைவராக இருந்த மருத்துவர் கலாவதி பொன்னிறைவன் அவர்களின் கணவர் திருச்சி. பொன்னிறைவன் பரிந்துரையின் பேரிலும், சென்னை தமிழ்நாடு கல்வித்துறை அலு வலர் அ.மதிவாணன், அன்னாரின் துணைவியார் டெய்சி இராணி இருவரின் அறிமுகத்துடனும் நான் இடப்பக்கம் குடல் இறக்கத்துக்கு அறுவை செய்து கொண்டேன்.

2006 முதல் இன்றுவரை அரசு மருத்துவமனையிலோ, தனியார் மருத்துவமனையிலோ மருத்துவம் செய்துகொள்ள, எப்போதும் அ.மதிவாணன் மற்றும் டெய்சி இராணி இவர்களின் துணைணையே நாடு கிறேன்.

2017 மார்ச்சில், சென்னை அரசு மருத்துவமனை யில், மருத்துவர் சாந்தி அம்மையார் உதவியுடன் 8 நாள் மருத்துவம் பெறவும் அவர்கள் உதவினர். இரவில், கலச.இராமலிங்கம், தமிழேந்தி, எஸ்.அழகன் நிற்க.

27.05.2017 இரவு எழும்பூரில் மலைக்கோட்டை விரைவுத் தொடர்வண்டியில் புறப்பட்டு, இரவு 2.45 மணியளவில் அரியலூரை அடைந்தேன். என்னை அழைத்துப்போக, கட்சித் தோழரும் புத்தக விற்பனை யாளருமான இளவரசன், காலை 3.45க்கு நிலையத் துக்கு வந்தார். நேரே, அரியலூர் பேருந்து நிலையத் துக்குப் போய், இரண்டு பிஸ்கட்டும் தேநீரும் சாப்பிட் டேன். அன்று காலை 4 மணிக்கு உடல்நிலை கெட்டது.

29.05.2017லும் மா.பெ.பொ.க. துணைப் பொதுச் செயலாளர் 28.05.2017லும் தோழர் தி.துரை சித்தார்த் தனின் மகிழுந்தில் முறையே மருதூர் திருமணத்திற் கும், பொன்பரப்பி திருமணத்திற்கும் சென்று, இரண்டு இரவுகள் அரியலூர் தங்கம் மருத்துவமனையில் தங்கி தோழர். மருத்துவர் பெ.இளங்கோவன் அவர் களிடம் மருத்துவம் பெற்றேன்.

சென்னைக்கு 29.05.2017 இரவு தொடர்வண்டி யில் புறப்பட்டு, 30.05.2017 காலை எழும்பூரில் இறங்கி, அம்பத்தூருக்குச் சென்றேன். 30-ஆம் நாள் இரவு அம்பத்தூரில் உடல்நிலை மேலும் கெட்டது. உடனே உடனிருந்த தோழர்களின் வழியாக, பொறிஞர் இரா.சிவப்பிகாசத்துக்குப் பேசினேன்.

அவர், மிகவும் பொறுப்பாக, அயல்நாட்டிலிருந்து அப்போதுதான் வானூர்தி மூலம் மீனம்பாக்கம் வந்த டைந்த தன் மகள் கண் மருத்துவர் வெற்றிச்செல்வி அவர்களை, நேரே அம்பத்தூருக்கு பெரியார்-நாகம்மை அறக்கட்டளைக்கு அனுப்பி வைத்தார். தாம்பரத்துக் குப் போக முடிவு செய்தேன்.

என் துணைவியார் ஆ.சுசீலா அவர்களுக்கு வயது 82. என் துணைவியாரிடம் சென்றால், அவரால் எனக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்ய முடியாது என்பதாலும், அவரும் நோயாளி என்பதாலும், என் இளைய மகன் ஆனை.கோவேந்தன் அரசு நூலகராக இருப்பதால் இவ்விருவருக்கும் சுமையாக இருக்க விரும்பாமல், என் மூத்த மகன் ஆனை.பன்னீர் செல் வம் வீட்டுக்கு 30.05.2017 இரவு 12.00 மணிக்கு வந்து சேர்ந்தேன். மகன் ஆனை.பன்னீர் செல்வமும், மருமகள் போதம்மாளும், பேத்தி ஆசுபளும் அன்புடன் வரவேற்றனர்.

31.05.2017 காலை ஏ.ஜி. மருத்துவமனைக்குப் போய் மலம் வெளியேறுவதற்காக எனிமா வைத்துக் கொண்டேன். ஓரளவே பயன்பட்டது. எனவே, என் மகனும் மருமகளும் முடிவு செய்து, உடனே குளோபல் ஹெல்த் சிட்டி என்கிற மிகப்பெரிய தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர்.

ஒரு நாள் இரவு முழுவதும் நானே இருபது தடவை நடந்துபோய் மலங்கழிக்க ஏற்பாடு செய்தார்கள். 3.6.2017 வரை அங்கு இருந்தேன். 4.6.2017 முதல் இன்றுவரை, என் மூத்தமகன் வீட்டில் நல்ல உணவும், கவனிப்பும், வேண்டிய மருந்துகளும் பெற்று உடல் நலம் தேறிவருகிறேன்.

இந்நிலையில் 24.09.2017இல் தந்தை பெரியார் 139ஆம் பிறந்தநாள் விழாவை அம்பத்தூர் அறக்கட்ட ளையில் நடத்தினோம். அவ்விழாவுக்குத் தோழர் அ.மதிவாணன் அவர்களும் வந்திருந்தார்.

அவர், “கச்சிராயர்பளையம் மருத்துவர். மகுடமுடி இன்று மாலை 5 மணிக்கு உங்கள் நலனை உசாவிட அறக்கட்டளைக்கு வருகிறார். அவர் வருகிற வரையில் இருங்கள்” என்று அறிவுறுத்தினார்.

மருத்துவர் க.மகுடமுடி சரியாக மாலை 5.30 மணிக்கு பெரியார்-நாகம்மை அறக்கட்டளைக்கு வருகை தந்தார்.

நான், ஏற்கெனவே மகுடமடி அவர்களை மூன்று தடவைகள் சந்தித்துப் பேசியிருக்கிறேன்.

கச்சிராயர்பாளையத்தைச் சேர்ந்த நெய்வேலி ஆறுமுகம் என்கின்ற இளைஞர், என் தலைமையில் திருமணம் செய்து கொண்டவர்; நெய்வேலியில் வாழ் பவர். அவர், திராவிட இயக்கங்களோடு நெருங்கிய தொடர்புடையவர்.

நான் 1984இல், மா.பெ.பொ.க. மாநாடு தொடர்பாக, கள்ளக்குறிச்சிக்கு நன்கொடை திரட்டடப் போகிறேன் என்று அவரிடம் சொன்னேன். உடனே, “நீங்கள் அங்கிருந்து கச்சிராயர்பாளையத்துக்குப் போய், எங்கள் தமையனாரைப் பாருங்கள். அவரும் மாநாட்டுக்கு உதவுவார்” என்று கூறினார். அவருடைய தமைய னார் பெரியசாமி தையல் கடை வைத்திருந்தார். அவருடைய கடைக்குப் பக்கத்தில், 1984லேயே, ஒரு சிறு மருத்துவமனையை நிறுவி க.மகுடமுடி நடத்தி வந்தார். அதுவே அவருடன் முதலாவது சந்திப்பு விழுப்புரம் பனப்பாக்கத்தைச் சேர்ந்தவரும், இப்போது குடும்பத்தோடு தியாகதுருகத்தில் வாழ்பவருமான கவிஞர் புலவர் கு.சீத்தா அவர்கள், தம்முடைய இல் லத்தில் பதித்துள்ள குடும்ப வரலாற்றுக் கல்வெட்டைத் திறந்துவைக்க, 23.11.2014இல் என்னை அழைந் திருந்தார். நான் கல்வெட்டைத் திறந்துவைத்தேன். நானும், மருத்துவர் க.மகுடமுடி அவர்களும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களும் அந்நிகழ்ச்சியில் உரையாற்றினோம். இது இரண்டாவது சந்திப்பு.

2015இல் சிந்தனையாளன் பொங்கல் மலர் வெளியீட்டுக்காக விளம்பரம் திரட்ட, மா.பெ.பொ.க. விழுப்புரம் மாவட்டச் செயலாளர் சென்னக்குணம் ஆ.கு.ஆறுமுகம் அவர்களுடன் வடக்கநந்தல் மருத்துவ மனைக்குப் போனேன். விளம்பரம் பெற்றோம். இது மூன்றாவது சந்திப்பு.

இதயநோய் ஆய்வறிஞர் க.மகுடமுடி 24.09.2017 இல், அறக்கட்டளையில் என் இடதுகை நாடியையும் உடல்நிலையையும் ஆய்வு செய்தார். “நீங்கள் மே திங்களுக்குப் பிறகு உண்ட உணவும் எடுத்துக் கொண்ட மருந்துகளும் குருதியோடு கலக்கவில்லை; உடம்பில் ஒட்டவில்லை. காரணம், வயிற்றில் அழுக்கு இருக் கிறது. மேலும், அழுக்கை நீக்கிவிட்டுப் பல மருந்துகளைக் கலந்து நேரிடையாக ஊசி மூலம் செலுத்தவேண்டும். ஒரு நான்கைந்து நாள்களுக்கு எங்கள் மருத்துவ மனையில் வந்து தங்குங்கள்” என்று அறிவுறுத்தி னார். உடனிருந்த தோழர்களுடன், பெரியார்-நாகம்மை நூலகத்தையும் அறக்கட்டளை கட்டடங் களையும் சுற்றிப் பார்த்தார்; விடைபெற்றுச் சென்று விட்டார்.

அதன்படி, 02-10-2017 காலை வே.ஆனைமுத்து, அ.மதிவாணன், அவருடைய துணைவியார் டெய்சி இராணி, ஆ.முத்தமிழ்ச்செல்வன், கு.தொல்காப்பியன் ஆகியோர் ஒரு குழுவாகப் புறப்பட்டு, மதியம் வளர்மதி மருத்துவமனையை அடைந்தோம்.

முதலில், இயந்திரம் மூலம் வயிற்றில் நீரைச் செலுத்தி அழுக்கை வெளியேற்றினார்கள். அத்துடன், குடலில் ஓசோனைச் (டீணடிநே) செலுத்தித் தூய்மைப் படுத்தினார்கள். நாள்தோறும் இரண்டு வேளைகளிலும் ஊசி மூலம் மருந்து ஏற்றினார்கள். ஏழு மருந்துகள் கலந்த ஊசியை, 26-10-2017 வெள்ளிக்கிழமை காலை ஊசி மூலம் ஏற்றினார்கள். அடுத்த நாளில், உடலுக்குப் புதுத்தெம்பு வந்தது.

மீண்டும் 20-11-2017இல் வாருங்கள் என்று அறிவுறுத்தி விடைதந்தார். அங்குள்ள மருத்துவர்கள் எம்.நளினி, எம்.மனோபாலா, மருத்துவ உதவியா ளர்கள், பெ.இளங்கோ, அருள்வடிவு ஆகியோர் மிகவும் பரிவுடன் என்னை நடத்தினர்

அங்கு, என்னுடன் தங்கியிருந்தவருக்கும் சேர்த்து அன்புடன் மூன்று வேளைகளிலும் நல்ல வீட்டு உணவை அளித்தனர். அங்கு, தங்கியிருந்தபோது, மகுடமடியுடைய தமையனார் க.நடராசன், தம்பி விலங்கியல் மருத்துவர் க.இரத்தினவேலு, எடுத்த வாய் நத்தம் மூத்த ஆசிரியர் த.பெரியசாமி, தியாக துருகம் புலவர். கு.சீத்தா, துரைமுருகன், திராவிட இயக்கத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் கள்ளக் குறிச்சி தி.க. தோழர் செயராமன் ஆகியோர் என்னைச் சந்தித்து அளவளாவினர். வாழ்த்துத் தெரிவித்தனர். திருக்கோவிலூர் தணிகை கலைமணி, பா.கார்த்தி கேயன் இருவரும் வந்து பார்த்தனர்.

ஏற்கெனவே, மருத்துவர் 6.10.2017 அன்று அறி வுறுத்தியபடி, 24-11-2017 அன்று காலை வே.ஆனை முத்து, அ.மதிவாணன், அவருடைய துணைவியார் டெய்சி இராணி ஆகியோர் நேரே, வடக்கநந்தலுக்குப் பகல் 2.00 மணிக்குப் போய்ச் சேர்ந்தோம்.  எனக்குத் துணையாக இருக்க வேண்டி விழுப்புரம் மாவட்ட மா.பெ.பொ.க. செயலாளர் சென்னைக்குணம் ஆ.கு.ஆறு முகம் ஏற்கெனவே அங்கு வந்துவிட்டார்.

24.11.2017 முதல் 03.12.2017 ஞாயிறு வரை 10 நாள்கள், அன்றாடம், இரண்டு வேளைகளிலும் எனக்கு ஊசி மூலம் மருந்து ஏற்றினார்கள். ஏற்கெனவே, அளித்ததுபோல், எனக்கும் தோழர் ஆறுமுகத்துக்கும் அங்கே வயிறு புடைக்க உணவு படைத்தனர். 3-12-2017 அன்று சேலம் மாவட்ட மா.பெ.பொ.க. செய லாளர் செ.ஆனையப்பன், ஓய்வு பெற்ற பொறியாளர் தாதம்பட்டி கு.வெங்கடேசன் இருவரும் வருகை தந்து நலன் உசாவி விடை பெற்றனர்.

கள்ளக்குறிச்சி வட்டம், எடுத்தவாய்நத்தம் பெருநிலக் கிழார் கண்ணுசாமி-பொன்னம்மாள் இணையர்க்கு மகன்கள் மூவர்; ஆசைக்கு ஒரு மகள்; அவர் பெயர் தான் வளர்மதி.

நான் வடக்கநந்தலில் இருந்து புதுச்சேரிக்குச் செல்லும் விருப்பத்தை என் மகனிடம் தெரிவித்து, அவருடைய மகிழுந்தை அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். அதற்கு மாற்றாக, உளுந்தூர் பேட்டை களமருதூர் மருத்துவர் தோழர். சா.மா.அன்பு மணி அவருடைய மகிழுந்தை இரவலாகத் தரும்படி கேட்டுக் கொண்டேன். அவர், திராவிடர் கழகத் தோழர் முத்து என்பவர் மூலம் தன்னுடைய மகிழுந்தை வடக்கநந்தலுக்கு அனுப்பி வைத்தார். 02.12.2017 அன்றுதான், தன்னுடைய முதுகுத்தண்டு அறுவை யை முடித்துக்கொண்டு வீட்டு வந்த அன்புமணியை, 03-12-2017 மாலை 6.00 மணிக்குச் சென்று கண்டு பேசிவிட்டு, இரவு 9.00 மணிக்குப் புதுவையை அடைந்தோம்.

புதுவையில், என் இரு மகன்கள், இரு மகள்கள் நலன் அறிந்ததுடன், 10 நாள்கள் ஓய்வாக-நலமாக இருந்தேன்; 4 நாள்கள் நடைப்பயிற்சி சென்றேன். 16.12-2017 சனிக்கிழமை இரவு அம்பத்தூர் அறக் கட்டளையை அடைந்து 17, 18 அங்கேயே தங்கியிருந் தேன். இயக்கப் பணிகளைப் பார்த்தேன்.

இவ்வளவு உதவிகளையும் செய்த மருத்துவர் க.மகுடமடி அவர்களுக்கும், அவருடைய துணைவியர் இருவருக்கும், அவருடைய தாயார் பொன்னம்மாள் அவர்களுக்கும், மருத்துவ உதவியாளர் பெ.இளங்கோ, செவிலியர் அருள்வடிவு மற்றும்  மருத்துவமனைப் பணியாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை இதன் வழியாகத் தெரிவித்துக் கொள் கிறேன்.

வளர்க மருத்துவர் மகுடமடி

Pin It