2009, செப்டம்பர் 10இல் திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், 19 முருகப்பா தெரு, சிந்தனை யாளன் அலுவலகத்தில் பெரியார் சிந்தனைகள் தொகுப்பு அச்சுக்கோப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தது. நானும் அலுவலகத்தில் பெரியார் சிந்தனைகள் முன்பதிவு மற்றும் அலுவலக வேலை களை செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது, வே.ஆனைமுத்து அய்யா கையில் பெரியார் சிந்தனைகள் தொகுப்பிலிருந்து கள்ளத்தனமாக 2 தொகுதிகளின் நகலை கணினியிலிருந்து எடுத்து தஞ்சாவூரில் வெளியிடப்பட்ட புத்தகம் இருந்தது. நானும் உண்மையில் மனவருத்தப்பட்டு, இப்படிப்பட்ட கயவர்கள் உள்ள நிலையில், இனி நம்முடைய பெரியார் சிந்தனைகள் முன் பதிவில் பாதிப்பு ஏற்படும் என்று எண்ணி வே. ஆனைமுத்து அய்யாவிடம் “இப்படி நம் வெளி யீட்டுத் தொகுப்பிலிருந்து இரண்டு தொகுதிகளை கணினியில் கள்ளத்தனமாக நகல் எடுத்து வெளி யிட்டுள்ளனர்; இனி நம் முன் பதிவில் பாதிப்பு ஏற்பட்டுவிடும்” என்று கவலையுடன் கேட்டேன். உடனே அய்யாவும், “உனக்கு வக்கில்லை; நீ அவர்கள் வெளியிடும் முன்பே வேலையை முடித்து வெளியிட்டிருக்க வேண்டும்” என்று கோபமாகக் கூறினார். சிறிது நேரத்தில் அய்யா, “அவர்கள் வெளியிட்டதால் உனக்கென்ன கசக்கிறது; நீ ஏன் வருத்தப்படுகின்றாய்; அவர்கள் மூலம் பெரியாரின் சிந்தனைகள் பலருக்கும் போய் சேருகின்றது; கவலைப்படாதே!” என்று சிரித்துக் கொண்டு பெருந் தன்மையுடன் கூறினார். அய்யா கூறியதைக் கேட்டதும் நான் கவலையிலிருந்து விடுபட்டு, நமக்குப் பாதிப்பிலும் பெரியார் சிந்தனைகள் பரவு வதை பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்ட வே.ஆனைமுத்து அய்யாவின் பெருந்தன்மையை நினைத்து மனநிறைவு அடைந்தேன். அன்று.

Pin It