சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலை அதிபர்கள், சீனப் பட்டாசுகளை இறக்குமதி செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும், அத்தொழிலை நம்பி உள்ள இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அரசிடம் ஒவ்வொரு ஆண்டும் கோரிக்கையை வைக்கின்றனர். அதே போல் இவ்வாண்டும் கோரிக்கையை வைத்துள்ளனர்.

இது போல் இந்தியாவில் உள்ள குட்டி முதலாளிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பண்டங்களுக்குப் போட்டியாக, சீனாவில் இருந்து இறக்குமதி ஆவதற்கு எதிராகக் கோரிக்கைகளை வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கெல்லாம் விடை பகர்வது போல, வணிகம் மற்றும் தொழில் துறைக்கான மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 14.10.2016 அன்று அவ்வாறெல்லாம் செய்ய முடியாது என்று தெளிவாக் கூறி விட்டார். குறிப்பிட்ட ஒரு நாட்டுப் பண்டங்களை இறக்குமதி செய்யக் கூடாது என்று சட்டத்தையே விதிமுறை யையே இயற்ற முடியாது என்றும், தேவைப்பட்டால் இறக்கு மதி வரியை அதிகரிக்கலாம் என்றும் அவர் கூறி உள்ளார். அதுவும் ஒரு குறிப்பிட்ட அளவிற்குத்தான் அதிகரிக்க முடியும் என்றும் அவர் தெளிவாக்கினார். அதாவது சீன நாட்டுப் பண்டங்கள், இந்தியாவின் குட்டி முதலாளிகளின் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நசுக்க. முனைவதை இந்திய அரசு தடுக்கும் மனநிலையில் இல்லை என்பதைப் பட்டவர்த்தனமாகக் கூறி உள்ளார்.

இந்திய மக்கள் பாகிஸ்தானையும், சீனாவையும் பகை நாடுகளாகவே நோக்க வேண்டும் என்ற கருத்தியலைக் கொண்ட பா.ஜ.க. அரசு, சீனப் பண்டங்கள் இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க வருவதைத் தடுக்க முடியாது என்று ஏன் அழிச்சாட்டியம் செய்து கொண்டு இருக்கிறது?

உண்மையில் சீனப் பண்டங்களில் பெரும்பாலா னவை மேலை நாட்டுப் பெருமுதலாளிகளின் மூலதனத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றை இந்தியாவில் சந்தைப்படுத்துவதற்கு இடையூறு செய்பவர்கள் மீது அப்பெருமுதலாளிகள் சினங்கொள்வர். பா.ஜ.க.வினர் காங்கிரஸ் கட்சியினரைப் போலவே முதலாளித்துவப் பொருளாதார முறையின் அடிமைகள். ஆகவே அவர்கள் தங்கள் எஜமானர்களான பெரு முதலாளிகளின் சினத்திற்கு ஆளாகக் கூடாது என்று அஞ்சுவது இயற்கையே அல்லவா?

இந்திய அரசு சொந்த நாட்டு உழைக்கும் மக்களின் மீது மட்டும் அல்ல; குட்டி முதலாளிகளின் மீதும் அக்கறை கொள்ள வில்லை. அப்படி இருக்கையில் மக்கள் என்ன செய்ய வேண்டும்?

காஞ்சிபுரத்தில் உள்ள பட்டாசுக் கடைகள் சிலவற்றில் 17.10.2016 அன்று "இங்கு சீனப் பட்டாசுகள் விற்பனை செய்யப்படமாட்டாது" என்ற அறிவிப்புப் பலகையை வைத்து இருக்கிறார்கள். இது மற்ற ஊர்களிலும் தொடரலாம். ஆனால், அரசு பட்டாசு விற்பனைக்கான உரிமம் வழங்கும் போது அத்தகைய நிபந்தனை எதையும் விதிக்கவில்லை. மத்திய அரசு சீனப் பட்டாசுகளுக்குத் தடை விதிக்க முடியாது என்று உறுதியுடன் இருக்கும் போது, மாநில அரசு அதற்கு எதிராக நிபந்தனையை விதிக்க முடியாதுதான்.

இந்நிலையில் வணிகர்கள் தாங்களாகவே முன்வந்து, சீனப் பட்டாசுகளை விற்க மறுத்து இருப்பது பாராட்ட வேண்டிய செய்தியே. ஆனால் இந்த நடவடிக்கையில் வணிகர்கள் உறுதியாக இருக்க முடியுமா? சீனப் பட்டாசுகளை விற்பதால் இலாபம் அதிகம் கிடைக்கும் என்றால், வணிகர்கள் இந்தக் கட்டுப்பாட்டை மீற மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? அதுவும் அரசு அதைத் தடுக்காத நிலையில் ..? சீனப் பட்டாசுகளை வாங்கக் கூடாது, விற்கக் கூடாது என்பதை ஒரு இயக்கமாக நடத்தினால், அது ஓரளவு சாத்தியமாகும். ஆனால் இந்திய அரசு பெருமுதலாளிகளின் மிரட்டலுக்கு அஞ்சி அவ்வியக்கத்தை ஒடுக்கவே செய்யும்.

காந்தியார் கதர்த் துணிகளையே பயன்படுத்த வேண்டும், அந்நியத் துணிகளை விலக்க வேண்டும் என்று தன் வலிமை முழுவதையும் செலுத்திப் பேராடினார். ஆனால் அவரால் முழு வெற்றியை அடைய முடியவில்லை. அப்படி இருக்கும் போது ஒரு சிறிய அளவில் தொடங்கி இருக்கும் வணிகர்களின் போராட்டம் வெற்றி அடையும் என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை.

அப்படி என்றால் குட்டி முதலாளிகள் என்னதான் செய்ய வேண்டும்? அவர்களுக்கு இரு வழிகள் உள்ளன. ஒன்று குட்டி முதலாளிகள் ஒற்றுமையாகச் சேர்ந்து பெருமுதலாளி களை எதிர்க்க வேண்டும்; அல்லது உழைக்கும் வர்க்கத்தினருடன் இணைந்து சேஷலிச அமைப்பை ஏற்படுத்த வேண்டும். முதல் வழியைத்தான் மிகப் பெரும்பாலான குட்டி முதலாளிகள் விரும் பக் கூடும். ஆனால் இந்த அணுகுமுறை வெற்றியைத் தருமா?

முதலாளித்துவப் பொருளாதாரப் போக்கு, குட்டி முதலாளி களை வெற்றி பெற விடாது. ரிலையன்ஸ், ஸ்பென்சர் போன்ற பெருமுதலாளிய நிறுவனங்கள் மளிகைக் கடைக்காரர்களின் வாழ்வாதாரத்தை நிலைகுலைய வைத்துக் கெண்டு இருக் கின்றன. காலப்பேக்கில் மளிகைக் கடை முதலாளிகள் பெரு முதலாளிகளின் நிறுவனங்களுக்குத் தரகர்களாகவோ அல்லது பணியாளர்களாகவோ மாறுவதைத் தவிர்க்க முடியாது. அவர்கள் மெதுமெதுவாகத் தெழிலாளி வர்க்கத் திற்குள் தள்ளப்படுவார்கள்.

மாறாக அவர்கள் தங்களை அழிக்க முனையும் பெருமுதலாளிகளுக்கு எதிராக, உழைக்கும் வர்க்கத்துடன் இணைந்து, பேராடி, சேஷலிச அரசை அமைத்தால் முதலில் பெருமுதலாளிகள் ஒழிக்கப்படுவார்கள். பெருமுதலாளிகளை ஒழித்து, சேஷலிச அரசை அமைத்து, அதை வலுப்படுத்தும் மாறுதல் காலகட்டத்தில், குட்டி முதலாளிகள் தங்கள் வழியிலேயே பணியைத் தொடர முடியும். அந்நிலையில் அவர்களுடைய பொருளாதார நிலையும், வாழ்க்கைத் தரமும் இப்போது இருப்பதைவிடச் சிறப்பாகவே இருக்கும். மேலும் புதிய சூழ்நிலைக்குத் தங்களை எவ்விதத் துன்பமும் இல்லாமல் மாற்றிக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும்.

Pin It