பார்ப்பான் உயிர் கடவுள் பொம்மையிலும், கல்லிலும் தான் இருக்கிறது. அவை ஒழிந்தால் பார்ப் பானைப் பிராமணன் என்றோ, சாமி என்றோ, மேல் சாதியான் என்றோ எவனும் மதிக்கமாட்டான்.

பூணூல் இல்லாத பார்ப்பனர் காங்கிரஸ்காரர்கள்

periyar 322இப்போதே பார்ப்பனர் தங்களுக்குக் கூண்டோடு அழிவுக்காலம் வந்துவிட்டது என்று கருதி, எந்தப் பாத கத்தைச் செய்தாவது - அதாவது யாரைக் கொன்றா வது, மக்களை எல்லாம் காலிப்பயல்களாகச் செய்தா வது தங்களைக் காப்பாற்றிக் கொள்ளத் தீர்மானித்து, இக்காரியத்தில் (ஒவ்வொரு பார்ப்பானும்) தங்களா லான கைங்கரியத்தைச் செய்து பார்த்துவிடத் துணிந்து விட்டார்கள்.

இதற்கு ஆதாரம் இந்நாட்டில் எங்குப் பார்த்தாலும் நடந்துவரும் அயோக்கியத்தனங்களும் காலித்தனங் களுமே போதுமானவையாகும். இந்த நிலைக்குப் பூணூல் இல்லாத பார்ப்பனர்களாகிய காங்கிரஸ்காரர் களும் பெரும் காரணஸ்தர்களாகவும் பொறுப்பாளர் களாகவும் இருக்கிறார்(கள்).

தொழிலாளர் என்ற கூச்சல் பார்ப்பனக் கூட்டு முயற்சியே!

பார்ப்பனர்களுக்கு அவர்களது பார்ப்பனத் தன்மை இறங்கிக் கொண்டு வருகின்றது. காங்கிரஸ்காரர்களுக்கு இந்த நாட்டில் அவர்கள் ஆதிக்க வாழ்வு இறங்கியே விட்டது. ஆகையால் இருசாராரும் சேர்ந்து தங்களால் செய்யக்கூடிய எல்லாப் பாதகச் செயல்களையும் செய்து பார்த்துவிடுவது என்று துணிந்து விட்டிருக்கிறார்கள். இப்போது வேலை நிறுத்தம், தொழிலாளர் என்று கூச்சல் போடுவதெல்லாம் பார்ப்பனக் கூட்டு முயற்சிதான்.

இன்னும் பல பெரிய கேடுகள் ஏற்படலாம். இன்றைய திராவிட முன்னேற்ற (பகுத்தறிவு)க் கழகத்தைக் கவிழ்க் கும் வரை (அதை அவ்வளவு எளிதில் செய்ய முடியாது) ஓயாமல் பல கேடுகளைச் செய்துதான் வருவார்கள். மக்கள் சகித்துக் கொண்டுதான் தீரவேண்டும். ஏன் என்றால், பார்ப்பான் ஒழிவதும், காங்கிரஸ் ஒழிவதும் இலேசான காரியம் அல்ல.

பெரிய சதி முடிச்சுடன் திரிகிறார்கள்

எளிதில் பிரிய முடியாதபடி அவை, ஒன்றுக்கொன்று ஆதரவில் பெரிய முடிச்சுப் போட்டுக் கொண்டிருக் கின்றன.

இரண்டும் தங்கள் ஆதிக்கக் கட்டடத்தைக் கடவுள், மதம், கோவில், உருவம், இவை சம்பந்தமான கட்டுக் கதைகள் ஆகிய அஸ்திவாரத்தின் மீதே கட்டிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் ஒழிக்கப்பட வேண்டுமென்றால் மக்களுக் குப் பகுத்தறிவு ஏற்பட்டுப் பகுத்தறிவுக்கு மாறான எதையும் ஒழித்துக் கட்டுவது என்ற துணிவு தமிழர் களுக்கு ஏற்பட்டால்தான் முடியும்.

காந்தி சொன்னதன் முழுப் பொருள் என்ன?

இதை மனத்தில் வைத்துத்தான் காந்தியாரும் ‘காங்கிரஸ் ஒழிக்கப்பட வேண்டும்’ என்றும், ஆட்சி - செக்குலர். மதச்சார்பற்ற - பகுத்தறிவு ஆட்சியாக இருக்கவேண்டுமென்றும் சொன்னார். இதனாலேயே அவர் கொல்லப்பட்டுவிட்டபடியால், காங்கிரஸ் கலைக்கப்படாமல், போய்விட்டதோடு, ‘செக்குலர் ஆட்சி’ என்று சட்டம் செய்தும், அது அமுலுக்குக் கொண்டுவர முடியாமலே போய்விட்டது.

இப்போது அதை மதச்சார்பற்ற ஆட்சியாகச் செய்யக் கூடிய தி.மு.க. ஆட்சி நல்வாய்ப்பாக ஏற்பட்டிருந்தும், அதைக் காங்கிரசாரும், பார்ப்பனரும் ஒழிக்கப் பார்க் கின்றார்கள்.

செக்குலருக்குப் பார்ப்பனர் கூறும் விபரீத வியாக்கி யானம்

செக்குலர்-மதச்சார்பற்ற என்ற சொல்லுக்கு இவ்விருசாராரும் என்ன வியாக்கியானம் கூறு கிறார்கள் என்றால், “ஒரு பெண் கன்னியாய் இருக்க வேண்டுமென்றால், அதற்கு ஆண் சம் பந்தமே இருக்கக்கூடாது என்பது பொருள் அல்ல; எல்லா ஆண்களையும் சமமாகக் கருதிக் கூப்பிட்டவனிடமெல்லாம் கலவி செய்ய வேண்டும் என்பதுதான் கன்னி என்பதற்குப் பொருள்” என்பதுபோல் பொருள் சொல்கிறார்கள். “எல்லா மதங்களையும் சமமாகப் பார்க்கவேண்டும்” என்கின்ற கொள்கை மத விஷயத்தில் காலம் காணாததற்கு முன்பு இருந்தே இருந்து வருகிற போது, அதைப் புதிதாக வலியுறுத்த வேண்டிய அவசியம் ஏன் வரும்?

செக்குலர் எதற்குப் பொருந்தும்?

‘செக்குலர்’ என்ற சொல்லை ஆங்கிலச் சொல்லாகத்தான் சட்டத்தில் புகுத்தினார்களே ஒழிய, வேறு மொழிச் சொல்லாகப் புகுத்தவில் லை. ஆங்கிலச் சொல்லுக்கு வியாக்கியானம் அந்தச் சொல்லை உற்பத்திச் செய்தவர்கள் சொல்லுவதைப் பொறுத்ததே ஒழிய, அதன் கருத்துக்கு விரோதிகளான பார்ப்பனர்களும், காங்கிரஸ்காரர்களும் சொல்லுவது பொருத்த மாக முடியுமா?

அந்தச் சொல்லும்கூட அரசாங்கக் காரியத்திற்குத் தான் பொருந்தும் என்று இன்றைய ஆட்சியாளர்கள் சொல்லுகிறார்களே ஒழிய, அது எல்லா மக்களுக்கும் வலியுறுத்தும் பொருள் என்று சொல்லவில்லையே!

அப்படி இருக்க இதில் பார்ப்பனருக்கும், காங்கிர சாருக்கும் ஏன் ஆத்திரம் வரவேண்டும்?

ஏன் என்றால், தங்கள் வாழ்வு அதில் தான் இருக்கிறது. அதில்தான் மக்களுடைய முட்டாள்தனத் தில் கிளைத்து எழுந்த கடவுள், மதம், கோவில், அதில் உள்ள கற்சிலைகள், அவற்றின் பொம்மைகள், சித்திரங் கள், படங்கள், தட்டிகள் முதலியவைகள் இருக்கின்றன. அதனால்தான் அவர்களுக்கு ஆத்திரம் வருகின்றது.

தமிழர்கள் கடமை என்ன?

எதை எதையோ சொல்லி, எதை எதையோ செய்து எப்படியோ போகட்டும்; நமக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை; அதற்குப் பெரும் கூட்டம் தயாராய் இருக்கிறது. ஆனால் பார்ப்பனரும், காங்கிரஸ்காரர்களும் (காங்கிர சிலும் தனித்தன்மையுள்ள ஒரு கூட்டம் இருக்கிறது. ஆனால் அவர்கள் வெளிப்படையாய் வரப் பயப்படு கிறார்கள்) அல்லாத பொது மக்கள் (தமிழர்கள்) கடமை என்ன?

நம் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் ஊரில் பொதுக்கூட்டம் போட்டு, அரசாங்கக் காரியங் களை ஆதரித்துப் பாராட்டித் தீர்மானங்கள் போட்டு, அத்தீர்மானங்களை முதலமைச்சருக்கும், மத இலாகா அமைச்சருக்கும் அனுப்பிய வண்ணம் இருக்க வேண்டியது அவசியம்.

பார்ப்பனப் பிரச்சாரத்தைப் பார்த்தாவது நமக்குப் புத்தி வர வேண்டாமா?

பார்ப்பனர்கள் தினந்தோறும் தங்கள் பத்திரிகைகளில் யார் யாரோ அநாமதேயங்கள் பேரால் பல கடிதங்கள் வெளியிட்டு வருகிறார்கள். நாம் அப்படிச் செய்யாவிட்டாலும், பொதுக்கூட்டங்கள் போட்டுப் பேசித் தீர்மானங்கள் செய்து அனுப்ப வேண்டாமா?

இப்படிச் செய்வது ஒரு வகையில் பார்ப்பனர் யோக்கியதையையும், காங்கிரசார் யோக்கியதையை யும் பொது மக்கள் தெரிந்து கொள்வதற்கு வசதியாகும்.

சூத்திர வாழ்க்கையில் சுகமா?

பொதுவாக நம் தமிழ் மக்கள், தாங்கள் என்றென் றும் சூத்திரர்களாக, கீழ்ச்சாதிகளாக இருக்க ஆசைப்படு கிறார்களா? இல்லாவிட்டால் அதை மாற்றத் தமிழர்கள் செய்யும் - செய்யப்போகும் காரியம் என்ன என்று கேட் கிறேன். தாங்களாகச் செய்யாவிட்டாலும் ஆட்சியை யாவது ஆதரிக்க வேண்டாமா?

ஒவ்வொரு தமிழனும், தன் வீட்டில் உள்ள கடவுள் - மத சம்பந்தமான படங்களை எடுத்து எறிய வேண்டும்; எடுத்து எறிந்துவிட்டுத் தகவல் கொடுக்க வேண்டும். பொதுக்கூட்டத்தில் காட்டிக் கிழித்து எறிய வேண்டும்.

இவற்றாலும், இப்படிப்பட்ட காரியங்களாலும் தாம் தமிழர் இழிவு நீங்கும்.

- ‘உண்மை’, 14.12.1971

Pin It