தமிழர்களுக்குத் தன்மான உணர்வை ஊட்டிய தந்தை பெரியார் அவர்கள் 94 ஆண்டுகள் 98 நாள் கள் நம்மிடையே வாழ்ந்தார். அவருடைய குடும்ப உறவில், தம் அண்ணன் மருமகன் தாதம்பட்டி ம. இராசு அவர்கள் 95 வயது 6 மாதங்கள் வாழ்ந்து மறைந்தார்.

மானிட வாழ்வு 120 ஆண்டுகள் வரை என்று ஒரு கணக்கை மானுட இயலாளர்கள் சொல்கிறார்கள்.

அதற்கு ஏற்ப, வடக்கு இத்தாலியில் வெர்பனியா என்னும் 2000 மக்கள் வாழும் ஊரில் எம்மா மொரானோ (Emmamorano) என்ற அம்மையார், 29.11.1899இல் பிறந்தவர், 117 ஆண்டுகள் 137 நாள் கள் நல்ல உணர்வோடு வாழ்ந்து, 15.4.2017 சனிக் கிழமை மறைவுற்றார். (The Hindu” 17.4.2017).

திராவிட இயக்கத்தினர் 90 - 95 - 100 அகவை உள்ளவர்கள் நம்மிடையே நலமாகச் சிலர் இருக் கிறார்கள்.

எடுத்துக்காட்டாக, கடலூர் சூரப்பநாய்க்கன் சாவடி யில், திருமேனி என்பவருக்கு வாழ்க்கைப்பட்ட அலமேலு அம்மாள் அவர்கள் தம் இளைய மகன் செங்குட்டுவன் இல்லத்தில், கடலூர் மாவட்டம் குள்ளஞ் சாவடி அடுத்த ஆயிக்குப்பத்தில் 106 அகவையில் கட்டிலில் உட்கார்ந்து, 26.6.2015 அன்று என்னுட னும் தம் மூத்த மகன் பெங்களூரில் வாழும் அன்புக் குரிய தி.மு.க. தோழர் - தன்மான மறவர் தி. கிள்ளி வளவனுடனும் கணீர் கணீர் என்று பேசினார்.

தம் அன்னையார் 108 அகவையில் நலமாக இருப்பதாக, மகிழ்ச்சி பொங்கிட, சென்னையில், நேரில் 13.5.2017 இரவில் அதே தி. கிள்ளிவளவன் என்னிடம் கூறினார். 17.5.2017 பகலில், தி. செங்குட்டுவனின் தொலைப்பேசி வழியாக அம்மையாரின் நலம் உசாவி னேன்.

திராவிட இயக்க மூத்தவர் பேராசிரியர் க. அன்பழகன் 95 முடிந்து 96 அகவையிலும், மூத்த அரசியல் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதி 93 முடிந்து 94 அகவையி லும் நலமாக உள்ளனர்.

நான், 21.6.2017 அன்று 92 முடிந்து 93 அகவையில் நுழைகிறேன்.

நீரிழிவு நோயால் துன்புறும் நான் ஒருநாளில் 8 மணிநேரம் படிக்கிறேன். இரவு 9 முதல் 11 மணி வரை (அல்லது) காலை 4 முதல் 7 மணிவரை கட்டுரை கள் எழுதுகிறேன். இப்படியே 94, 95 அகவை வரை வாழ்ந்து, தந்தை பெரியாரின் விரிவான வர லாற்றை எழுதி முடித்திட வாய்ப்பாக - நீண்ட பயணங்கள் போவதை 21.6.2017 முதல் நிறுத்தி விட்டேன்.

என் பயணப் பணிகளை என் கட்சித் தோழர் கள் மேற்கொள்வார்கள் என மனமார நம்புகிறேன்; அதை நிறைவேற்றிட முன்வரக் கோருகிறேன்.

என் அன்புத் துணைவியார் 81ஆம் அகவையில், உடல் நலிவுடன் நடமாடுகிறார். என் மக்களும் மருமக் களும் எனக்குத் தோன்றத் துணையாக இருக்கின்றனர்.

தத்துவத்தில் தெளிவும், தத்துவ வெற்றிக்கு என் உழைப்பைத் தருவதும் என் கடன் என்பதில் உறுதி யுடன் உள்ளேன். அவை என் உடலையும் உயிரை யும் காப்பாற்றும் எனத் திடமாக நம்புகிறேன்.

மார்க்சியப் பெரியாரிய அம்பேத்கரிய நெறி நின்று, உண்மையான மதச் சார்பற்ற ஒப்புரவுக் குடிஅரசாக - சமதர்மக் கூட்டாட்சியாக இந்தியாவை அமைத்திட நாம் பாடுபடுவோம்.

கைகூப்பி வணங்கி வரவேற்பதையும், வழியனுப்பு வதையும் கைவிடுவோம். அவ்வழக்கம் உயர்வை நிலை நாட்டுகிறது.

ஆணாயினும், பெண்ணாயினும், அகவை வேறு பாடு இன்றிக் கைகுலுக்கி வரவேற்போம்; கை குலுக்கி வழியனுப்புவோம்! மானிட சமத்துவம் நிலை பெற இவை உதவும்.

இருந்த இடத்திலிருந்தே உங்கள் ஒவ்வொருவரு டனும் கைகுலுக்கி, நீங்கள் அனைவரும் நலமுடன் வாழ மனமார விழைகிறேன்.

Pin It