(அண்மையில் கசியவிடப்பட்ட மக்கள் செலவிடும் அளவு குறித்தது போன்ற ஆய்வுகள், பொருளாதாரம் பேரிடறும் நிலையிலுள்ளதைச் சுட்டுகிறது - ஆர். நாகராஜன்)

பின்னாளில் இந்திய ஒன்றியம் எப்படி வளர்ந்து வந்துள்ளது? மேலும் எந்த அளவுகோல்களின் அடிப்படையில் நாட்டின் செயல்திறன் கணக்கிடப்படுகிறது? இவையெல்லாம் விவாதத்திற்குரிய வினாக்களாக உள்ளன. பத்தாண்டுகளாகப் பெரும் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து, 2011-12-லிருந்து குறிப்பாகத் தேசியச் சனநாயகக் கூட்டணி ஆட்சியில் - அது தலைகீழாகக் கவிழ்ந்து மந்தமான வளர்ச்சியாக உள்ளது. அண்மைக் காலம் வரையில் இன்றைய அரசு நிகரளவில் தனி மனிதன் செலவிடும் அளவு அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சி முறையைச் சிறப்பாகச் சொல்லிக் கொண்டது. அதே நேரத்தில் முன்னைய பத்தாண்டுக் காலத்தில் முதலீடு நன்னிலையிலான வளர்ச்சியாக இருந்தது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அளவிட 2004-05-ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்டிருந்ததை மாற்றி, 2011-12 ஆண்டை அடிப்படையாகக் கொண்டு 2015 தொடக்கத்தில் ஒன்றிய அரசின் புள்ளி விவரத் துறை மக்களின் வருமானம், செலவு குறித்த தேசிய அறிக்கைத் தொடர்களை வெளியிட்டது. இது அத்துறையின் வழக்கமான பணிதான். இருப்பினும் உள்நாட்டு மொத்த உற்பத்தி (உ.மொ.உ.- GDP) ஆண்டு வளர்ச்சி விழுக்காடு, பழைய தொடரின் அடிப்படையில் இருந்ததைக் காட்டிலும் புதிய தொடரின் அடிப்படையிலானது பெரும் அளவு உயர்ந்திருந்தது தெளிவாகத் தெரிந்தது. பழைய தொடரின் படி 4.8 விழுக்காடு அளவிலான வளர்ச்சி, புதிய தொடரின்படி கணக்கிட்ட போது 6.2 விழுக்காடு அளவுக்குச் சட்டென உயர்ந்தது வியப்பாக இருந்தது. அதேபோன்று பழைய தொடரின் படியான 2013-14-இன் உற்பத்தித் துறையின் வளர்ச்சி - 0.7 விழுக்காடாக இருந்தது புதிய தொடரின்படி கணக்கிட்ட போது 5.3 விழுக்காடு என்ற அளவுக்கு உயர்ந்து விட்டது. ஆனால் பொருளாதார வளர்ச்சிக்குத் தொடர்பான வங்கிகள் வழங்கிய கடன் அளவு, தொழில்களின் திறன் பயன்பாட்டளவு, நிலை முதலீடு வளர்ச்சி யாவும் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் மேற்சொன்ன திருத்தப்பட்டுள்ள வளர்ச்சி மதிப்பீடுகள் உயர்ந்துள்ளன என்பது பரவலாக அய்யத்தை ஏற்படுத்துகிறது.

பணத்தாள் தடைக்குப் பின் ‘பெருக்கம்’

மிகு மதிப்புப் பணத்தாள் மதிப்பிழப்பால் உற்பத்தியும், வேலைகளும் சுருங்கியுள்ளதாகப் பெரும்பாலான தொழில் வல்லுநர்களும், பரவலான கணக்கீடுகளும் சொல்லும் போது, 2016-17-இல் வளர்ச்சி என்பது பெரும் முரணாக உள்ளது. இந்த ஆண்டின் வளர்ச்சி பெரும்பாலான கணிப்பாளர்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஏமாற்றமளிப்பதாக இருப்பினும் உ.மொ.உ. 8.2 விழுக்காடு அளவுக்கு உயர்ந்துள்ளது என அரசுப் புள்ளிவிவரங்கள் வியப்பளிப்பதாக உள்ளது. உ.மொ.உ. யை மதிப்பீடு செய்வது முதலாவதாக உலக அளவில் பின்பற்றப்படும் அளவீடுகள், இரண்டாவதாக மேம்படுத்தப்பட்ட குறைகள் மற்றும் மூன்றாவதாக மிகப் பெருமளவிலான விவரங்கள் அடிப்படையில் என்பதுடன், இந்த மதிப்பீடுகள் மரபு சார்ந்தவை எனச் சொல்லி மய்யப் புள்ளிவிவரத் துறை மேற்சொன்ன அந்தத் திறனாய்வுகளைப் புறந்தள்ளி விட்டது.

புதுமையான தளங்களிலும் மின்னணு பொருளாதாரத்திலும் உற்பத்தி, உருவாக்கப்பட்ட வேலைகளையும் (ஓலா மற்றும் பிளிப்கார்ட் போன்றவை மூலம்) பல்வேறு நுண்ணிய முத்திரா மற்றும் உதன் போன்ற சிறப்பான முயற்சிகளின் விளைவுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வழக்கமான முறையான ஆய்வுகள் தவற விட்டன என்று சொல்லி, உயரளவு பொருளாதார வளர்ச்சி மதிப்பீடுகளை அரசு சரிதான் என்கிறது. மேலும் வேலை வாய்ப்புகள் பெருகியுள்ளதிற்குத் தொழிலாளர் வைப்பு நிதி, தொழிலாளர் பாதுகாப்பு போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் உறுப்பினர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதை நம்பத்தக்க அறிகுறிகளாகக் கொள்ள வேண்டும். உற்பத்திப் பெருக்கம் (விரும்பத்தக்கத் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்) மற்றும் பொருளாதாரத்தை முறைப்படுத்தியதன் வழி ஊரக, நகர அமைப்புச்சாரா துறைகளை விட்டுவிட்டு நாட்டின் அமைப்புசார் துறைகளில் வேலை பெற்றுள்ளோர் எனக் கொண்டாலும், அதில் அவர்கள் 15 விழுக்காடுதான் உள்ளது என்பதால் மேற்சொன்ன விவாதம் ஏற்கத்தக்கதாக இல்லை.

தேசிய மாதிரி ஆய்வுத் துறையின் காலத்திற்குமான அய்ந்தாண்டு கால அளவிலான குடும்பங்களின் விவரம் பெறும் ஆய்வு அரசால் கைவிடப்பட்டுள்ள நிலையில் பொருளாதார நிலையை உணர்த்தும் தொழில், குடும்பச் செலவு பற்றிய விவரங்கள் பெற முடியாது. தேசிய மாதிரி ஆய்வுத் துறையின், வேலைகள், வேலையின்மை பற்றிய ஆய்வுகளுக்குப் பதிலாக 2017-18-இல் கால அளவிலான தொழிலாளர்கள் தொடர்பு குறித்த ஆய்வு (பி.எல்.எப்.எஸ்.) நடத்தப்பட்டது. மேலும் அதே ஆண்டில் குடும்பச் செலவு குறித்த ஆய்வும் முன்னெடுக்கப்பட்டது.

சென்ற ஆண்டு முதலில் கசிய விடப்பட்டுப் பின் மே திங்களில் அரசால் வெளியிடப்பட்டுள்ள பி.எஸ்.எப்.எஸ்.இன் முடிவுகள் கலக்கம் தரும் போக்கில் உள்ளன. அவற்றில் முதலாவதாக வேலை செய்யும் திறன் உடையவர்களுள் 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் வேலை இல்லாதோர் 8.35 விழுக்காட்டு அளவுக்கும் அதிகமாகி விட்டது என்பதாகும். இரண்டாவதாக முதன்முறையாக 2012-2017 காலத்தில் எப்போதும் இல்லாத அளவில் வாய்ப்பு அளவு குறைந்து விட்டது. வேலையிலிருந்தோரின் 6.6 மில்லியன் - 15.5 மில்லியன் பேர் அளவில் குறைந்து விட்டனர்.

மக்கள் பெருக்க விழுக்காடு பற்றிய பல ஊகங்களின் அடிப்படையில் மூன்றாவதாக, ஊரக நகர்ப்புறச் சம்பள அளவு தேக்க நிலை அடைந்துவிட்டது என அந்த ஆய்வு காட்டுகிறது. இருப்பினும் பி.எல்.எப்.எஸ். புள்ளிவிவரங்கள், அறிவுசார் புள்ளியலாளர்கள் ஒதுக்கித் தள்ளிவிட்ட கி.யு.எஸ்.இன் முன்னைய புள்ளி விவரங்களுடன் மற்றும் ஒப்பிட முடியாது என வாதிட்டு மேலே சுட்டியுள்ளதை அரசு புறந்தள்ளிவிட்டது. தொழிலாளர் கள் சந்தையில் பரவலாக உள்ள சம்பள அளவு தேக்க நிலை தனிமனித செலவு அளவைக் குறைத்துவிடும் என்பதைப் பொது அறிவு உணர்த்தும். இதைத்தான் கசியவிடப்பட்ட புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தியுள்ளது.

தனி மனிதன் மாதம் செலவிடும் அளவு 1972-73-க்குப்பின் இப்போது தான் முதன்முறையாகச் சரிந்துள்ளது. மேலும் அது பணவீக்கத்தைக் கணக்கில் கொண்ட உண்மையான செலவு அளவு 2011-12-இல் ரூ.1501 ஆக இருந்தது. 3.7 விழுக்காடு குறைந்து 2017-2018-இல் ரூ.1446 என்ற அளவுக்குக் குறைந்து விட்டது. ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக தனிமனிதன் செலவிடும் அளவு ஊரகப் பகுதியில் 8.8 விழுக்காடு அளவுக்குக் குறைந்து விட்டது. நகர்ப்புறத்தில் அது பெயரளவில் 2 விழுக்காடு அதிகரித்துள்ளது. இவை நிருவாகத் துறையின் புள்ளி விவரங்களிலிருந்து வேறுபடுகின்றன எனச் சொல்லி இவற்றை அரசு தள்ளுபடி செய்து விட்டது. இவ்வாறாக, பொருளாதாரம் அவல நிலையில் உள்ளது என்று நாடு தழுவிய மாதிரி ஆய்வுகள் தற்போது சமூக ஊடகப் புள்ளி விவரங்கள் ஒரே தன்மையில் சுட்டுகின்றன. வேலை இழப்புகள், சம்பளத் தேக்கம், தனி மனிதன் செலவிடும் அளவு, எப்போதுமில்லாது தேங்கியுள்ளது அல்லது வீழ்ந்துள்ளது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஏழ்மை விழுக்காடு (செலவிடும் அளவை பண மதிப்பில் முழுமையாக மதிப்பிட்டால்) அதிகமாக உயர்ந்திருக்கும். நாட்டின் தற்போதைய பத்தாண்டு காலத்தில் அவலமான பொருளாதாரத்தைத்தான் பெற முடியும் என்பதற்கு இது தேசிய அளவில் சான்றாகும்.

முன் ஆய்வு முறையில் மாற்றங்கள்

உ.மொ.உ. சரிவுற்ற போதும் சென்ற சில ஆண்டுகளில், அதன் மதிப்பீடு நிகரளவில் ஆண்டு வளர்ச்சி 5.6 விழுக்காடு என மதிக்கத்தக்க அளவில் இருந்ததாக அரசு சொல்கிறது. இவ்வாறான வேறுபாடுகள் பெருநிலைப் பொருளாதாரக் (Macro Economics) குறியீடுகளில் தொழிலாளர்கள் சந்தையிலும் தனிக்குடும்பம் செலவிடும் அளவிலும் வீழ்ச்சியுற்ற நிலை மற்றும் மேலே சொன்ன வளர்ச்சி விழுக்காடு எண்கள் இவற்றில் வேறுபாடுகள் உள்ளதால் மேலே சொல்லப்பட்ட அரசின் கூற்று உண்மையில் நம்பும்படி உள்ளதா? என்ற வினா எழுகிறது.

கேள்விக்குள்ளாகும் மதிப்பீட்டுக் குறைகளும் சரிபார்க்கப் படாத புள்ளிவிவரப் பயன்பாடுகளும் உ.மொ.உ.ஐயக் கணக்கிடுவதில் குளறுபடி இருப்பதாகத் தெரிகிறது.

முடிவாக, 2015-லிருந்து இது தனித்தனியான ஆனால் தொடர்புடைய வரைவு முறைகள் ஒன்று மாற்றப்பட்ட தேசியக் கணக்குப் பட்டியல் அதிகப்படியாகக் கணக்கிட்டுள்ள அலுவலக உ.மொ.உ., இரண்டு உ.மொ.உ. வளர்ச்சி விழுக்காடு அளவுக்கும் பல பெருபொருளாதார (Macro Economics) அளவு பல வேறுபாடுகள் உள்ளவற்றுக்கும் இடையில் ஒத்த தன்மை இல்லை எனப் பொருளாதார விளக்க உரைகளில் நிறைந்து கிடக்கின்றன. இருப்பினும் இதுபோன்ற அய்யங்களைப் புறந் தள்ளிவிட்டு திருந்திய உ.மொ.உ. மதிப்பீடு தொடர்களில் அடிப்படையில் பெருமளவு செலவு அதிகமான பொருளாதார வளர்ச்சி மாதிரியான அதிக வளர்ச்சி விழுக்காடு அடைந்துள்ளதாக வெளிப்படுத்தி அரசு அதை வலிந்து கடைப்பிடித்து வருகிறது.

கசியவிடப்பட்ட, மக்களின் செலவிடும் அளவு விவரங்கள் உண்மை எனில், 2011-12 மற்றும் 2017-18 இடையிலான தனி மனித பணவீக்கம் கணக்கில் கொள்ளப்படாது தனிமனித நிகரளவு உண்மையான செலவு அளவுகள் சரிவடைந்துள்ளது. அரசு தரும் வளர்ச்சிக் கதையைக் கேள்விக்குள்ளாக்குகிறது. பி.எல்.எம்.எஸ். புள்ளிவிவரங்கள் தெரிவிப்பது போல் வேலைகள் குறைந்துள்ளதையும், சம்பளம் தேக்கமடைந்துள்ளதையும், அடுத்து செலவு அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே அண்மையில் கசியவிடப்பட்ட புள்ளிவிவரங்கள் கேள்விக்குள்ளாக்கப் படுவதோடு - கேள்விக்குள்ளாக்கப்படும் முறையிலான மாற்றங்களும் உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படியாக மதிப்பிடுவதற்குச் சரிபார்க்கப்படாத விவரங்களையுடைய தரவுகள் அடிப்படையிலானது என்பது உ.மொ.உ. வளர்ச்சி விழுக்காடு அதிகப்படியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது விவாதத்திற்குத் துணை நிற்கின்றது.

(நன்றி : ‘தி இந்து’ (ஆங்கிலம்) 21.11.19)

தமிழில்: இரா.பச்சமலை

Pin It