நல்ல கல்வி, மருத்துவம், குடிநீர், தூய்மையான சுற்றுச்சூழல், உணவுப் பொருட்கள் போன்ற அடிப்படையான தேவைகளைக் கொடுக்கும் அரசை அனைவரும் பாராட்டலாம்.

தலைக்கவசம் அணிவது இருசக்கர வாகனம் ஓட்டிகள் அனைவருக்கும் நன்மைதரும், இதை நன்கு உணர்ந்த நீதித்துறை வாகன ஓட்டிகளைக் காப்பாற்ற நல்லதொரு நடவடிக்கை எடுத்தது, அரசும் செயல்படுத்தியது பாராட்டுக்குரியது.

விவசாயத்தையே நம்பி இருந்த நாட்டில், அனைத்து நீர்நிலைகளையும் காப்பாற்ற நட வடிக்கை எடுக்காத அரசை, பால் உற்பத்தி மிகுதி யாகிவிட்டது என்று கூறி பாலை வாங்க மறுக்கும் அரசை, பால்வளத்துறையில் அரசியல்வாதிகள் கூட்டுச் சேர்ந்து ஊழல் செய்த அரசை, எப்படிப் பாராட்டுவது.

மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு, மது உயிரைக் குடிக்கும் ஆட்கொல்லி மருந்து, இதைத் தெரிந்திருந்தே வருவாய்க்காக மதுக்கடையை நடத்து கின்றோம் என்று கூறி மது விற்பனையை மேம் படுத்தி கொண்டிருக்கும் அரசை எப்படிப் பாராட்ட முடியும்?

கூத்தாடித்தனமான அறிக்கைகளை வெளியிட்டு விட்டு, மக்களுக்கு நன்மை செய்யும் அரசியலில் முதல் மாநிலம் நாம் தான் என்று கூறுவதும். அரசு ஏழை-எளிய மக்களுக்கும் சமச்சீர் கல்வியை தருவோம் என்று கூறியவர்கள் ஏற்கெனவே மாநகராட்சியில் மூடிய இருநூறுக்குப் மேற்பட்டப் பள்ளிகளை திறக்காமல் மேலும் 1200 அரசுப் பள்ளிகளை மூடத் திட்டமிடுவது, தமிழ்வழிக் கல்வியை - இலவசக் கல்வியை ஒழித்து, தனியார் கல்வி நிறுவனங்கள் கொள்ளையடிக்க வழி வகுப்பதேயாகும். நன்மை செய்வதாக நடிப்பதும், அனைத்துத் துறைகளிலும் கையூட்டைத் தடுக்காமல் ஆட்சி செய்வதும் பாராட்டுக்கு உரியதல்ல.

வெகுமக்களை நீண்டகாலம் ஏமாற்ற முடியாது. மக்கள் கொடுக்கும் தீர்ப்பு இனி அதிரடியாகத்தான் இருக்கும். பாராட்டுக்கு தேர்வு வைத்தால் உங்கள் மதிப்பெண்ணை நீங்களே பார்க்கலாம். தயா ராகுங்கள்! 

Pin It