மார்க்சீய சிந்தனை உலகில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நூல் “1844 தத்துவ, பொருளாதாரக் கையேடுகள்” என்பது. இதனை மையமாகக் கொண்டு மனிதநேய மார்க்சீயம் என்றும், விஞ்ஞான மார்க்சீயம் என்றும் பல வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தமிழகத் திலும் இதன் எதிரொலி உண்டு.

இந்தப் புத்தகத் தினைப் பற்றி அதிகம் பேசுபவர்கள் இதன் பின் இணைப்பாக எங்கல்ஸ் எழுதியுள்ள ஒரு நீண்ட கட்டுரையைப் பற்றிக் கண்டு கொள்வதே இல்லை. இந்தக் கட்டுரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ‘அரசியல் பொருளாதார விமர்சன வரைவு’ (An outline of the critique of Political Economy) என்பது அந்தக் கட்டுரை. இந்தக் கட்டுரை மார்க்சீயம் பயில்பவர்களுக்கு முக்கியமான ஒன்று.

இன்று நாம் பொருளாதாரம் என்று அழைப் பதை மார்க்ஸ் - எங்கல்ஸ் காலத்தில் அரசியல் பொருளாதாரம் என்று அழைத்தனர். இந்தத் துறையில் ஆடம்ஸ்மித், ஜான்ஸ்டுவர்ட் மில், டேவிட் ரிக்கார்டோ போன்ற அறிஞர்கள் மிகப் பெரிய சாதனைகள் செய்தனர். இவர்களது நூல் களில் சொத்து (பணம்) எவ்வாறு உருவாகிறது என்பது பற்றியும் உழைப்பு என்பது பற்றியும் அதிகம் பேசினர். ஆனால் இவர்கள் மார்க்ஸ் கூறும் உபரிமதிப்பு பற்றிப் பேசவில்லை. உழைப் பினை உற்பத்தியின் கருவிகளில் ஒன்றாகவே கருதினர். இந்தக் கருத்தோட்டங்களைத் தான் மார்க்சும் - எங்கல்சும் அருமையாக விமர்சனம் செய்தனர்.

இந்தக் கட்டுரை பற்றிய வரலாற்றின் குறிப் பினையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இது பிரடரிக் எங்கல்சால் முதலில் (1843) எழுதப் பட்ட பொருளாதாரக் கட்டுரை ஆகும். இது மார்க்சின் மீது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது. அவருக்கு இதன் மீது ஈடுபாடு அதிகம். இதன் சுருக்கத்தினை மார்க்ஸ் எழுதினார்.

மார்க்சின் மற்றொரு புகழ்பெற்ற நூலான “அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு” என்பதில் “பொருளாதார வகையினங்களை விமர்சிக்கும் சிறப்பான கட்டுரை” என்று இது பற்றிக் கூறுகிறார். இதில் ஆரம்பகாலத் தவறுகள் இருந்தாலும், பொருளாதாரத்தினைப் பற்றி ஒரு பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தினை இது அளித்தது. இது பற்றி மார்க்ஸ் பல இடங்களில் கூறுகிறார்.

முற்போக்குச் சிந்தனையாளர்களிடையே இதற்குப் பெரிய வரவேற்பு இருந்தது. உதாரண மாக ஜூலியஸ் வால்டாசு என்பவர் எங்கல்ஸ் ஒரு அற்புதத்தினை நிகழ்த்தியுள்ளார் என்று கூறுகிறார்.

இக்கட்டுரையில் இன்று நாம் வழக்கமாகக் கற்கும் ‘பொருளாதாரம்’ என்பதைக் கடும் விமர் சனத்திற்குள்ளாக்குகிறார். அவரது விமர்சனத்தின் சாராம்சமான கருத்து இன்று வரை உள்ள பொருளாதாரம் தனிச் சொத்தினை நியாயப் படுத்துவதாகவே உள்ளது. உதாரணமாக இன்று பொருளாதாரத்தில் மூன்று விதிகள் மாணவர் களுக்குக் கற்றுத் தரப்படுகின்றன. ஒன்று ‘The Law of Increasing Returns’ இரண்டு ‘The Law of Diminishing Returns’ முன்று ‘ The Consumers surplus” இவற்றை விவரிக்க இங்கு இடமில்லை. ஆனால் இந்த மூன்றும் வருமானம் பெறுவது பற்றியது. அதாவது சொத்துடைமையாளர்களுக்கு, வணிகர்களுக்குச் சாதகமானது. இந்தப் பொருளாதாரம் இப்படித் தான் இருக்கும். 

 ஏனென்றால் இது பூர்ஷ்வாப் பொருளாதாரம், இது எங்கல்ஸ் காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது இன்றும் இது தொடர்கிறது. இது பற்றிய விமர்சனம் தான் இந்தக் கட்டுரை. இதில் வாணிப முறை என்பதையும், அதனை மறுத்து வந்த தடையிலா வர்த்தகம் என்பதையும் எங்கல்ஸ் விமர்சிக்கிறார். இவர்கள் பேசும் மனிதநேயம் லாபத்தை அடிப்படையாகக் கொண்டது என் கிறார். இதற்கு மாற்று சோஷலிசப் பொருளா தாரம் என்கிறார்.

இக்கட்டுரை ஆங்கிலத்தில் சுமார் 32 பக்கங்கள் உள்ளன. இதன் முன்னுரை மட்டுமே இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டுத் தரப்படுகிறது. இந்த முன்னுரையைத் தொடர்ந்து உழைப்பு, சொத்து தேவை, அளிப்பு போன்ற பொருளாதார வகை யினங்களை எங்கல்ஸ் விமர்சனம் செய்கிறார். அவை கூர்மையாகப் படிக்கப்பட வேண்டியவை ஆகும்.

இதில் உள்ள அடிப்படையான அம்சங்கள் இன்று உள்ள சூழ்நிலைக்கும் பொருந்துவதைக் காண முடியும்.

“வணிகம் விரிவடைந்ததன் இயல்பான விளை வாக அரசியல் பொருளாதாரம் உருவெடுத்தது. அதன் தோற்றத்துடன், விஞ்ஞானத்திற்குப் புறம் பான சிறுவணிகத்திற்குப் பதிலாக அனுமதிபெற்ற கள்ளத்தனம் இடம்பெற்றது. இது பணம் பண்ணும் விஞ்ஞானமாகும்.

இந்த அரசியல் பொருளாதாரம் அல்லது பணம் பண்ணும் விஞ்ஞானம் வணிகர்களது பரஸ்பரப் பொறாமை, பேராசை ஆகியவற்றின் குழந்தை யாகும். இதன் நெற்றியில் மிக மோசமான சுய நலத்தின் குறி உள்ளது. தங்கமும், வெள்ளியும் மட்டுமே சொத்து என்ற ஆரம்பகால நம்பிக்கையே மக்கள் கொண்டிருந்தனர். இந்த ‘விலை உயர்ந்த’ உலோகங்கள் ஏற்றுமதியாவதைத் தடுக்க வேண்டும் என்பதைவிடப் புனிதமானது வேறு எதுவுமில்லை என்று கருதினர்.

இரு கைகளாலும் விலை உயர்ந்த பணப் பையைப் பற்றிக் கொண்டு, அண்டை வீட்டுக்காரர் களை சந்தேகத்துடனும், அவநம்பிக்கையுடனும் பார்க்கும் கஞ்சர்களைப் போன்று நாடுகள் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன. வாணிபத் தொடர்புள்ள நாடுகளிலிருந்து ஒவ்வொரு நாடும் எவ்வளவு பணத்தைப் பெற முடியுமோ அதற்கு எல்லாக் கவர்ச்சிகரமான முறைகளையும் கை யாண்டனர். அங்கு எல்லைக்குள் அடக்கமான முறையில் சந்தோஷமாகக் கொண்டு வந்த எல்லா வற்றையும் வைத்துக் கொள்ள முயன்றன.

இந்த முறையைத் தீவிரமாகப் பின்பற்றப் பட்டிருந்தால், வாணிபம் கொல்லப்பட்டுவிடும். எனவே இந்த முதல் கட்டத்திற்கு அப்பால் மக்கள் சென்றனர். இரும்புப் பெட்டியில் அடைத்து வைக்கப்பட்ட மூலதனம், இறந்துபோன மூலதனம் ஆகும். பழக்கத்தில் உள்ள மூலதனம் தொடர்ந்து அதிகரிக்கும். எனவே அவர்கள் அதிக சமூக உணர் வுள்ளவர்களாக மாறினர். அவர்களிடம் உள்ள பொற்காசு (டக்கட்ஸ்)களை மேலும் காசுகளைப் பெறுவதற்காகத் தூதுப் பறவைகள் போல் அனுப்பினர் ‘ஆ’ என்பவனுக்கு அதிக விலைக்கு விற்க முடியும் என்றால், ‘அ’ என்பவனுக்கு அதிகப் பணம் கொடுப்பதில் தவறில்லை என்று அவர்கள் கருதினர்.

இதன் அடிப்படையில் வர்த்தக முறை (ஆநச உயவேடைந ளுலளவநஅ) தோன்றியது. வியாபாரத்தின் பேராசைத் தன்மை ஓரளவிற்கு இங்கு மறைக்கப் பட்டது. நாடுகள் நெருக்கமாக வந்தன. வாணிப ஒப்பந்தங்கள், நட்புறவு ஒப்பந்தங்கள் ஆகிய வற்றைச் செய்து கொண்டன, ஒன்றுடன் ஒன்று வியாபாரம் செய்தன. அதிக லாபம் பெற வேண்டும் என்பதற்காக, எல்லா வகையிலும் அன்புடனும், பாசத்துடனும் நடந்து கொண்டன. ஆனால் உண்மையில் பழைய பேராசையும், சுயநலமும் இருந்தன.

அவ்வப் பொழுது இவை போராக வெளிப்பட்டன. இந்தப் போர்கள் அக்காலத்தில் வாணிபப் பொறாமை காரணமாகவே இடம் பெற்றன. இவற்றில் கொள்ளையடிப்பதைப் போன்று வாணிபமும் பலசாலியின் கரங்களில் இருந்தது. தந்திரமாகவோ அல்லது பலாத்கார மாகவோ சாதகமான ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ள எந்த ஒழுக்கமுறையும் பின்பற்றப்பட வில்லை.

வாணிப முறையின் முக்கியமான அம்சம் வாணிபச் சமநிலையாகும். தங்கமும், வெள்ளியும் தான் சொத்து என்ற முதுமொழி இன்னும் பின் பற்றப்பட்டது. ஆனால், எந்த ஒப்பந்தம் ஒரு நாட்டிற்கு ரொக்கப் பணத்தினைத் தருமோ அது லாபகரமானது என்று கருதப்பட்டது. இதனை உறுதி செய்ய ஏற்றுமதி, இறக்குமதியோடு ஒப்பிடப் பட்டது.

இறக்குமதியைவிட ஏற்றுமதி அதிகமாக இருந்தால், இதில் உள்ள வேறுபாடு பணமாக நாட்டிற்குள் வந்து விட்டது என்று நம்பப்பட்டது. அந்த அளவிற்கு நாடு பணம் உள்ளதாகக் கருதப் பட்டது. எனவே பொருளாதாரத்தின் வேலை, ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் இறக்குமதியைவிட, ஏற்றுமதி அதிகமாக உள்ளது என்று காட்டு வதாகும். இந்த முட்டாள்தனமான மாயைக்காக ஆயிரக்கணக்கானவர்கள் பலியிடப்பட்டனர். வாணிபத்திலும் புதினப் போர்கள் உண்டு. கொடிய விசாரணையும் உண்டு.

புரட்சிகரமான நூற்றாண்டான பதினெட்டாம் நூற்றாண்டு பொருளாதாரத்தினையும் மாற்றியது. ஆனால் இந்தப் புரட்சி ஒரு பக்கமாகவே இருந்தது. ஆகையினால் எதிர்வுகளே இடம்பெற்றன. பொது வான பொருள்முதல்வாதம் பொதுவான ஆன்மீகத் திற்கும் குடியரசு, முடியாட்சிக்கும், சமுதாய ஒப்பந்தம், தெய்வீக உரிமைக்கும் எதிராக வைக்கப் பட்டன. இதே போன்று பொருளாதாரப் புரட்சி யானது இந்த எதிர்வுகளுக்கு அப்பால் செல்ல வில்லை.

எல்லா இடங்களிலும் இந்த அடிப்படை இருந்தது. மனிதன் வீழ்ச்சியடைந்தது பற்றி தத்துவத்தில் உள்ள வெறுப்பினை இந்தப் பொருள் முதல்வாதம் தாக்கவில்லை. மனிதனுக்கு மேலாக உள்ள கடவுளுக்குப் பதிலாக இது இயற்கையை முன்னிறுத்தியது. அரசியலும் அரசாங்கத்திற்கான அடித்தளங்களை ஆராய வேண்டும் என்று கனவு கண்டனர். தனிச் சொத்தின் நியாயத்தினைக் கேள்விக் குள்ளாக்க வேண்டும் என்பது பொருளாதாரத்தில் இடம்பெறவில்லை.

எனவே புதிய பொருளா தாரம் பாதிதான் முன்னேறியிருந்தது. அதன் அடித்தளத்தினையே அது காட்டிக் கொடுக்கவும், உதறித்தள்ளவும் வேண்டியிருந்தது. வெளி அலங் காரத்திலும், மறைத்துப் பேசுவதிலும் ஈடுபட வேண்டியிருந்தது. அது சிக்கிக் கொண்டுள்ள முரண்பாடுகளிலிருந்து மூடி மறைக்க இதனைச் செய்ய வேண்டியிருந்தது. இதன் அடிப்படைக் காரணமாக அல்லாமல் அந்த நூற்றாண்டின் மனிதாபிமானச் சூழ்நிலை மூலம் சில முடிவு களுக்கு அது வரவேண்டியிருந்தது.

இவ்விதமாகப் பொருளாதாரம் தயாள குணமுள்ளதாக மாறியது. உற்பத்தியாளர்களை விட்டுவிட்டு அது நுகர் வோரை ஆதரித்தது. வாணிப முறையின் இரத்தம் தோய்ந்த பயங்கரத்தினை அது வெறுத்தது. நாடு களுக்கும், தனிநபர்களுக்கும் இடையே நட்புறவை வளர்ப்பது வாணிபம் என்று கூறியது. ஆனால் எல்லாமே வியப்பிற்குரியதாகவும், கம்பீரமாகவும் இருந்தன. ஆனால், அந்த அடித்தளங்கள் விரைவில் புத்துயிர் பெற்றன. இந்தப் போலியான தயாள குணத்திற்கு மாற்றாக, மால்துசிய மக்கள் தொகைக் கொள்கை வெளியிடப்பட்டது. என்றுமே இல்லாத ஒரு அநாகரீகமான, அருவருப்பான கொள்கை இது.

உலக நட்புறவு, தயாள குணம் ஆகியன பற்றிய அழகிய சொற்களை இக்கொள்கை அழித்தொழித்தது. அந்த அடிப்படைகள் ஆலை முறையையும் தற்கால அடிமை முறையையும் கொண்டு வந்தது. இது பண்டைய அடைமுறைக்கு, மனித விரோதத் திற்கும், கொடுமைக்கும் சளைத்ததல்ல. தற்காலப் பொருளாதாரம் (ஆடம்ஸ்மித்தின் “உலக நாடு களின் சொத்து”1 என்பதை அடிப்படையாகக் கொண்ட தடையிலா வர்த்தகம்) அதே வஞ்சகத் தையும், முரண்பாட்டையும், ஒழுக்கஹீனத்தையும், வெளிப்படுத்தியது. இவை இன்று மனிதகுலத்தின் எல்லா இடங்களிலும் பரவியுள்ளன.

ஆடம்ஸ்மித்தின் முறை ஒரு முன்னேற்ற மில்லையா? ஆம். உண்மையில் அவசியமான முன் னேற்றம் தான். அதன் ஏகபோகங்கள், வாணிபத் திற்கு அதனால் ஏற்பட்ட இடைஞ்சல் ஆகியவற்றை அகற்ற வர்த்தக முறையைத் தூக்கியெறிய வேண்டி யிருந்தது. இதன் மூலம் தனிச்சொத்தின் விளைவு களை வெளிக்கொரண முடியும். இந்தக் குறுகிய, வட்டார, தேசீய நலன்கள் பின்னுக்குச் சென்றால் தான், நமது காலத்தின் போராட்டம் உலகப் பொதுவான மானுடப் போராட்டமாக மாறும்.

 தனிச்சொத்து பற்றிய கொள்கை வெறும் நடை முறை சார்ந்த புறவய ஆய்வினை விட்டு வெளியே வர வேண்டியிருந்தது. இது இன்னும் விஞ்ஞானத் தன்மையுள்ளதாக மாற வேண்டியிருந்தது. இதன் மூலம் விளைவுகளுக்கு அது பொறுப்பாக மாற முடியும்.

உலகப் பொதுவான மானுட வட்டத்திற்கு அது செல்ல முடியும். பழைய பொருளாதாரத்தில் இருந்த ஒழுக்கக் குறையை ஒரு உயர்ந்த கட்டத் திற்கு அதனை மறுப்பதன் மூலம் வஞ்சகமாக எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. (இந்த முயற்சியின் ஒரு அவசியமான விளைவு) இவை அனைத்தும் எடுத்துக்கொண்ட விஷயத்திலேயே உள்ளன.

தடையிலா வர்த்தகத்தினை நியாயப்படுத்தியது. அதனை சாதனை ஆகியன தனிச்சொத்துப் பொருளா தாரத்தின் எல்லைக்கு அப்பால் செல்லும் வாய்ப் பினை அளித்தது. அதே சமயத்தில் தடையிலா வர்த்தகம் கொள்கை ரீதியாகவும் நடைமுறை யிலும் பலனற்றதாகிப் போனதை நாம் எடுத்துக் காட்ட வேண்டியிருந்தது.

நமது காலத்திற்கு அண்மையில் உள்ள பொருளாதார அறிஞர்களை நாம் காணக் காண, நமது விமர்சனமும் கறாராக இருக்கவேண்டி யிருக்கிறது. மால்தசும், ஸ்மித்தும் சில பகுதிகளை மட்டுமே கண்டனர்.

 ஆனால் தற்காலப் பொருளா தார அறிஞர்களுக்கு முழுமையான அமைப்பு அவர்கள் முன்னே உள்ளது. விளைவுகள் அனைத்தும் நன்கு தெரியும். முரண்பாடுகள் வெளிச்சத்திற்கு வந்துவிட்டன. ஆனால் அவர்கள் அடிப்படை களை ஆராய முன்வரவில்லை.

முழு அமைப்பினையும் ஏற்றுக் கொண்டார்கள். தற்காலத்தினை நெருங்க நெருங்க நமது பொருளாதார அறிஞர்கள் நியாயத்தி லிருந்து விலகி விலகிச் செல்கிறார்கள். காலம் முன்னேறும் பொழுது, பின் தங்கிவிடாமல் இருக்க புற அலங்காரங்கள் அதிகரிக்கின்றன. அதனால் ஆடம்ஸ்மித்தைவிட ரிக்கார்டோ பெருங்குற்றவாளி யாகவும், ரிக்கார்டோவைவிட, மன்குலாக்கும், மில்லும் இன்னும் பெரிய குற்றவாளிகளாகவும் காணப்படுகின்றனர்.

வர்த்தக முறையைத் தற்காலப் பொருளாதாரம் மதிப்பீடு செய்ய முடியாது. ஏனென்றால் அது ஒரு பக்கச் சார்பு உள்ளதாகவும், இந்த அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டதாகவும் உள்ளது. இந்த இரு அமைப்புகளுக்கு எதிராகவும், இவற்றின் பொது வான விதிகளை விமரிசிப்பதாகவும் உலகப் பொது வாக, மனிதநேய அடிப்படையில் உள்ளதென்று தான் இவற்றினைச் சரியாக மதிப்பிட முடியும். தடையிலா வர்த்தகத்தினை ஆதரிப்பவர்கள், வர்த்தக முறையை ஆதரிப்பவர்களைவிட பலமான ஏகபோக வாதிகள் ஆவர் என்பது தெரிய வரும்2 தற்காலப் பொருளாதார அறிஞர்களது போலியான மனித நேயமானது, அவர்கள் முன்னோர்கள் அறியாத காட்டுமிராண்டித் தனத்தை மூடி மறைக்கிறது என்று தெரிய வரும்.

பழைய பொருளாதார அறிஞர்களது கருத்துக் குழப்பம் எளிமையானது, முரண்பாடுகளற்றது என்பன இவர்களைத் தாக்கு பவர்களது இரட்டை - நாக்குத் தருக்கத்துடன் ஒப்பிடும் பொழுது தெரிய வரும். மேலும் இந்த இரு குழுவினரும் ஒருவரையொருவர் எப்படித் தாக்கினாலும் அது அவர்கள் மீதே திரும்பும்.

இதனால்தான் வர்த்தக முறையை லிஸ்ட் என்பவர் திரும்பக் கொண்டு வரும் பொழுது தற்கால தாராளமயப் பொருளாதாரவாதிகளால் அதனைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் நமக்கு இந்த விஷயம் சாதாரணமாக உள்ளது. தற்காலப் பொருளாதார வாதிகளின் முரண்பாடு, சந்தேகமான நிலை, இதன் அடிப்படைக்குள் மறுபடியும் செல்லும்.

மதவியவாதை ஒன்று குருட்டு நம்பிக்கைக்குச் செல்ல வேண்டும் அல்லது சுதந்திரமான தத்துவத்தினை நோக்கி முன்னேற வேண்டும் என்பது போல, தடையிலா வர்த்தகம் ஒரு பக்கத்தில் ஏகபோகங்களுக்குப் புத்துயிர் அளிக்க வேண்டும் அல்லது மற்றொரு பக்கத்தில் தனிச்சொத்தினை ஒழிக்க வேண்டும்.

தாராளப் பொருளாதாரம் தோற்றுவிக்க ஆக்கபூர்வமான முன்னேற்றம் தனிச்சொத்து விதிகளை விரிவாக்கியது ஆகும். முழுவதுமாக விரிவாக்கம் செய்யப்படாவிட்டாலும், தெளிவாகக் கூறாவிட்டாலும், இவை அவற்றில் உள்ளன.

 பணம் பண்ணுவதற்கு எது சுருக்கமான வழி எது என்று தீர்மானிப்பதில் (எல்லாப் பொருளாதார விவாதங்களிலும்) தடையிலா வர்த்தக முறையைச் சேர்ந்தவர்கள் பக்கத்தில் உரிமை உள்ளது, அதாவது ஏகபோகவாதிகளுடன் உள்ள முரண்பாடுகளில், (தனிச் சொத்தினை எதிர்ப்பவர்களுடன் அல்ல) இது உள்ளது. ஏனென்றால் இங்கிலாந்து நாட்டின் சோஷசலிச வாதிகள், நடைமுறையிலும், கொள்கை ரீதியாகவும் பொருளாதாரப் பிரச்சினைகளை பொருளாதாரக் கண்ணோட்டத்திலிருந்து சரி யாகவே தீர்க்க முடியும் என்று நிரூபித்துள்ளனர்.

எனவே அரசியல் பொருளாதாரத்தினை விமர்சனம் செய்யும் பொழுது அதன் அடிப்படை யான வகையினங்களை நாம் பரிசோதிக்க வேண்டும். தடையிலா வர்த்தக முறை அறிமுகம் செய்த முரண்பாடுகளைப் பரிசோதிக்க வேண்டும். இந்த இரு பக்கங்களின் முரண்பாடுகளை வெளிக் கொணர வேண்டும்.

1) Adamsmith “An Inquiry into the Nature and caused of the wealth of Nations.

2) இங்குப் பன்னாட்டு மூலதனம் என்பதைப் பொருத்திக் காணவும். (மொழிபெயர்ப்பாளர்)

Pin It