லத்தீன் அமெரிக்கா விலும் வெனிசுவேலாவிலும் தற்பொழுது நிகழ்ந்துவரும் வியத்தகு மாற்றங்கள் பற்றிய செய்திகளை இந்தியாவி லுள்ள களப்பணியாளர்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்பு மிகவும் குறைவு. இத்தகைய செய்திகள் தமிழ் போன்ற இந்திய மொழிகளில் பதிவா வதும் அரிதாகவே உள்ளது. இச்சூழலில் தோழர் ரான் ரைடனவர் எழுதியுள்ள “வெனிசுவேலாவின் ஓசைகள்” என்ற நூலை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளது.

amarantha_450இந்தியாவும், வெனிசு வேலாவும் பூமிப்பந்தின் இரு வேறு திசைகளில் இருப் பினும் இந்தியாவிலுள்ள முற் போக்காளர்களும் சமூகப் பணியாளர்களும் வெனிசு வேலாவில் நிகழும் மாற்றங் களைப்பற்றித் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

வளரும் நாடான வெனிசுவேலா, 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந் தெடுக்கும் தேர்தல் ஜன நாயகத்தைக் கொண்டிருக் கிறது. இந்தியாவைப் போலவே வெனிசுவேலாவும் பல பத்தாண்டுகளாக மேற்குலக ஏகாதிபத்தியத்தின் நிழலில், அதிலும் குறிப்பாக, வட அமெரிக்க ஏகாதிபத்தியத் தின் கீழ் இருந்த நாடாகும்.

வெனிசுவேலாவும் இந்தியாவைப் போலச் சிறுபான்மை மேல்தட்டு வர்க்கத் தையும் பெரும்பான்மை கீழ்த்தட்டு வர்க்கத் தையும் கொண்டது. இந்தியாவைப் போலவே இங்கும் இரண்டு வர்க்கங்களுக்கிடையே அகன்ற இடைவெளி உள்ளது.

ஆனால் இந்தியாவிலுள்ள மக்களைப் போலன்றி வெனிசுவேலாவின் மக்கள் தங்களை ஒடுக்கும் சுரண்டல் பிரிவினையை எதிர்த்து மாபெரும் போராட்டத்தில் இறங்கி யுள்ளார்கள். தமது நாட்டை ‘21 ஆம் நூற்றாண்டிற்கான சோசலிசம்’ என்னும் இலக்கை நோக்கி முன்னகர்த்த முயன்று வருகிறார்கள். இது ஒரு சிக்கலான போராட்டமாகும்.

ஆனால் பல முரண்பாடுகளைத் தன்ன கத்தே கொண்ட இந்தப் போராட்டத்தில் இந்தியாவிற்குத் தேவையான பல பாடங் களும் சிறப்பான முன்னுதாரணங்களும் உள்ளன. ரானின் இந்த நூல் வளர்ந்து வரும் இந்தப் போராட்டம் தரும் குதூகலம், அதன் முன்னுள்ள தடைக் கற்கள், அதன் பலவீனங்கள் ஆகியவற்றைப் பற்றிய அறிதலை அளிக்கிறது.

ரானின் எழுத்துப் பாணியை வெளிப் படுத்தும் இந்நூல் வெறும் வறட்டுக் கோட் பாட்டு நூலாக இல்லாமல் வெனிசுவேலா விற்கு வருகை தந்த ஒரு வெளிநாட்டவரின் தினசரி பயணக் குறிப்புகளாக அமைந் துள்ளது. ‘வெனிசுவேலாவின் ஓசைகள்’ மிகவும் கடினமான போராட்டத்தில் ஈடு பட்டுள்ள வெனிசுவேலாவின் உழைக்கும் மக்களும் கீழ்மட்டக் களப்பணியாளர்களும் எதிர்கொள்ளும் அனுபவங்களைப் பதிவு செய்கிறது. மேலும் அங்கு நடைபெறும் சமூக - அரசியல் பரிசோதனையை அருகில் இருந்து பார்க்கும் அனுபவத்தைத் தருகிறது ரானின் எழுத்து. சாதாரண விவசாயிகள், தொழிலாளர் கள் முதல் அரசியல் தலை வர்கள் வரை பலரிடம் தான் நடத்திய விவாதங்களையும் உள்ளூர் - உள்நாட்டுச் செய்திகள் மட்டுமின்றி இடையிடையே சர்வதேச நிகழ்வுகளையும் விவரித்திருப் பதால், படிப்பவருக்கு இன் றைய வெனிசுவேலாவைப் பற்றிய சுவாரசியமான செய்தி களைத் தருகிறார் ரான்.

உழைக்கும் மக்களின் போராட்டத்திற்கான உறுதி யான ஆதரவு, வட அமெ ரிக்க ஏகாதிபத்தியத்திற்குத் தீவிரமான எதிர்ப்பு, பாலின வேறுபாடுகளை அகற்றும் பெண்களின் போராட்டத் திற்கான ஆதரவு, விவசாயத் தில் அவருக்குள்ள இயல் பான ஆர்வம், அதில் அவரு டைய நேரடி பங்கேற்பு, உண்மையான ஜனநாயகத் தின் மீதான அவரது அர்ப் பணிப்புணர்வு என ரானின் தனிப்பட்ட நம்பிக்கைகளும், ஆர்வங்களும் கூட இந் நூலில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளன.

இந்தப் பின்னணியில் வெனிசுவேலாவில் தற்போது நடைமுறையிலுள்ள புரட்சி கர மாற்றத்தின் முக்கிய கூறான ‘பங்கேற்பு ஜன நாயக’த்தின் வளர்ச்சி குறித்து ரான் விமர்சித்துள்ளார்.

இந்தியாவைப்போலவே வெனிசுவேலாவும் பல பத் தாண்டுகளாக முதலாளித்துவ ஜனநாயகத்தில் ‘மகிழ்ந்து’ திளைத்திருந்தது. மேலும், இந்தியாவைப் போலவே ஆளும் வர்க்கத்தினால் சொந்த நலன்களுக்காகச் சிதைக்கப் பட்டு, உருமாற்றப்பட்ட தேர்தல் ஜனநாயகமே பொலி வாரியப் புரட்சி நடைபெறும் வரையில் அங்கு ஆட்சியில் இருந்து வந்தது.

இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது இருபதாம் நூற்றாண்டில் சோவியத் யூனியன், சீனா, வியட்நாம், கூபா போன்ற நாடுகளில் ஏற்பட்ட புரட்சி களைப் போலன்றி, வெனிசு வேலாவில் புரட்சிகர மாற்றத் தை ஏற்படுத்துவது என்பது முற்றிலும் வேறுவகையான சவாலாக உள்ளது. ஏனென் றால், மேற்கூறிய நாடுகளில் புரட்சிக்கு முன்பு “தேர்தல் ஜனநாயகம்” இல்லை; அவை சர்வாதிகாரிகளால் ஆட்சி செய்யப்பட்டு வந்தன.

ஆனால் வெனிசுவேலா விலோ, பல ஆண்டுகளாக ஏதோவொரு வகையில் செயல்பட்டு வந்த ‘தேர்தல் ஜனநாயகம்’ நடைமுறையில் இருந்தது. அந்த ஜனநாயக வெளியைப் பயன்படுத்திப் புரட்சிகர நடைமுறையைக் கட்டியெழுப்ப வேண்டும்.

அதன் மூலம் உழைக் கும் மக்களை மையமாகக் கொண்ட ஜனநாயகத்தை அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகிய அனைத்துத் தளங்களிலும் பரவலாக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் முதல் தேசிய அமைப்புகள் வரை பெரு மளவிற்கு அதனை விரிவு படுத்த வேண்டும். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் செயல்பட்டுவரும் மக்கள் மன்றங்களிலும் (Community Councils) தொழிலாளர் களால் நிர்வகிக்கப்படும் தொழிற்சாலைகளிலும் பல்லாயிரக்கணக்கான கூட் டுறவு உற்பத்தி நிலையங்களிலும் ‘பங்கேற்பு ஜனநாயக’த்தில் பல்வேறு பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

5-6 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலில் வாக்களித்து தங்கள் ஜனநாயகக் கடமை யை முடித்துக் கொள்ளாமல், சாதாரண மக்கள் தங்கள் வாழ்வின் பல்வேறு அம்சங் களை முடிவு செய்யும் பொறுப்பைத் தாங்களே ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

முதலாளிகளின் தீர்ப்பை மௌனமாக ஏற்றுக்கொள்வதை விடுத்து, கூட்டாக முடிவுகள் எடுக்கிறார்கள். எனவேதான் இதுபோன்ற முன்முயற்சிகள் ‘தலைமை யேற்பு ஜனநாயகம்’(Protagonist Democracy) என்று அழைக்கப்படுகிறது. 21 ஆம் நூற்றா ண்டின் தொடக்கத்தில் அதிக ஜனநாயகத் தன்மை கொண்ட புதியதோர் சோசலி சத்தை இந்தியாவிற்கென உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நாம், வெனிசு வேலாவின் அனுபவங்களிலிருந்து கற்பதற்கு நிறைய இருக்கிறது.

ரான் பொலிவாரியப் புரட்சியின் ஆதர வாளராக இருந்தாலும் விமர்சனமின்றிக் கண்மூடித்தனமாக ஆதரிப்பவர் அல்லர். சிறு சிறு நிகழ்வுகள், அனுபவங்கள் ஊடாக பொலிவாரியப் புரட்சியின் முரண்பாட்டை அவர் விளக்குகிறார். பல விழைவுகள் செயல் வடிவம் பெறாமல் விருப்பங்களாக வே நீடிப்பதை - அதாவது, சொல்லுக்கும் செயலுக்கு மான இடைவெளியை அவர் சுட்டிக் காட்டுகிறார்.

முதலாளித்துவ சமூகத்திற்கே உரித்தான சிதைவுகளும் பிரிவுகளும் வெனிசுவேலா சமூகத்தில் இன்னமும் நீடிக்கின்றன. பல்வகைக் குற்றங்களும் ஊழலும் நுகர்வுப் பண் பாடும் விரவிக்கிடக்கும் இந்நாட்டில், நீக்கமற நிறைந் திருக்கும் அதிகார வர்க்கமே புரட்சிகர மாற்றங்களுக்குப் பெருந்தடையாக இருப்பதை ரான் சுட்டிக் காட்டுகிறார். வெனிசுவேலா புரட்சிகர நடைமுறையில் காணப்படும் இந்த முரண்களைப் பார்க் கையில், முற்போக்கு முகா மிற்குள் தோன்றிய பல்வேறு புரட்சிகர சிந்தனையோட் டங்கள் முகாமிற்கு வெளியே உள்ள அதிகார வர்க்கத்திற்கு மட்டுமின்றி, உள்ளிருக்கும் ஆளும் சோசலிச கட்சிக்கும் சவாலாக உருவெடுத்திருப் பதில் ஆச்சரியமேதுமில்லை. அவை கடந்த பத்தாண்டு களில் உருவாகி வலுப்பெற்று வரும் வசதி படைத்த புதிய வர்க்கத்தை (இது ‘பொலி பூர்சுவா’ என்று அழைக்கப் படுகிறது) விமர்சிப்பதோடு, புரட்சி மேலும் முற்போக் கானதாக மாற வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. வெனிசுவேலா இன்று மா பெரும் வர்க்கப் போராட் டத்தின் விளிம்பில் உள்ளது. தமது சமூகத்தை அதிக

பட்ச நீதியும் சமத்துவமும் கொண்ட புதியதோர் சமூக மாக மாற்றுவதற்காகக் கோடிக் கணக்கான உழைக்கும் மக் கள் போராடிக் கொண்டிருக் கிறார்கள். இந்தப் போராட் டத்தின் இறுதி முடிவு என்ன வாக இருக்கும் என்பது விடை தெரியாக் கேள்வி. புதிய உலகிற்காகவும், புதிய வெனிசுவேலாவிற்காகவும் நடந்து வரும் போராட்டத் தில் தம்மை முழுமையாக அர்ப்பணித்துள்ள வெனிசு வேலாவின் எண்ணற்ற சா மானிய மக்களின் உணர்வு களைப் புரிந்துகொண்டு, அவர்களுடனான ஒருமைப் பாட்டை வளர்த்துக்கொள்ள ரான் நம்மை அழைக்கிறார்.

அண்மையில் வெனிசு வேலா சென்று வந்தவன் என்பதால் நானும் ரானின் வருத்தத்தைப் பகிர்ந்து கொள் கிறேன். வெனிசுவேலாவில் மக்கள் நலனுக்கான சிறப் பான பல திட்டங்கள் வகுக்கப் பட்டுள்ளன. இவற்றில் பல இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. மிகுந்த ஆர்வத் துடன் ரான் திட்டமிட்ட மக்கள் மன்றங்களின் அதி கார பூர்வ மக்கள் தொடர் பாளர்களுடனான சந்திப்பு நடைபெறவே இல்லை.

இது அங்குள்ள யதார்த்த நிலையை விளக்குவதற்கான எடுத்துக் காட்டாகும். எனது பயணத்தின் முதல்நாள் அன்று என்னை அங்கு வர வழைத்த நண்பர் இப்படிக் கூறினார்: “நிறைய இடங் களைப் பார்க்கவேண்டும் என்று திட்டமிடாதீர்கள்; வெனிசுவேலாவில் திட்ட மிட்டபடி எதுவும் நடப்ப தில்லை”.

“வெனிசுவேலாவில் புரட்சிகர நடவடிக்கைகள் அனைத்தும் சாவேஸ் என்ற தனி மனிதனை மையமாகக் கொண்டு நடைபெறுபவை தானா?” என்று முற்போக்குக் களப்பணியாளர்களும் கேட்பது வாடிக்கையாகி விட்டது.

இந்தக் கேள்விக்கு நேரடியாகப் பதில் தராமல், கொலம்பியா, ஈக்வதோர், புரட்சிகர கொலம்பிய ஆயுதப்படை ஆகியவற்றைப் பற்றிய அத்தியாயத்தில் சாவேசின் தடு மாற்றங்களையும், ஊசலாட்டங்களையும் ரான் கோடிட்டுக் காட்டுகிறார். முற்போக்கு வட்டாரங்களில் அடிக்கடி சாவேஸ் குறித்து எழும் ஐயம் அவருடைய அரசின் வெளி யுறவுக் கொள்கை பற்றியது. இதைப்பற்றி மேற்சொன்ன ஒரே ஒரு எடுத்துக்காட்டைத் தவிர்த்து வேறெங்கும் ரான் அதிகமாக விளக்கவில்லை. அப்படி அவர் விளக்கி யிருந்தால் வாசகர்களுக்கு மிகுந்த பயனுள்ள தாக இருந்திருக்கும்.

ஆழ்ந்த மனிதாபிமானத்துடன் எழுதப் பட்டிருப்பதுதான் ரானுடைய பயணக் கட்டுரையின் முக்கியமான பலம். சாதாரண மக்களின் ஆர்வங்கள், பிரச்சினைகள், அன்றாட வாழ்வில் அவர்கள் சந்திக்கும் போராட்டங்கள் ஆகியவற்றைப் புரிந்து கொள்வதன் மூலம் வெனிசுவேலாவில் உருப்பெற்று வரும் புரட்சியை ரான் புரிந்து கொள்கிறார்.

ரானின் கருத்துக்களையும் வெனிசு வேலா புரட்சியை விமர்சிக்கும் இடதுசாரி களின் விமர்சனத்தையும் ஒப்பிட்டுப் பார்க் கையில், எனக்கு கதே கூறிய வாசகம் ஒன்று நினைவிற்கு வருகிறது. “கோட்பாடு என்பது சோர்வைத் தருவதாக இருக்கலாம்; ஆனால் வெட்ட வெட்டத் துளிர்க்கும் மரம் போன்ற வாழ்க்கை எப்போதும் பசுமையாகவே விளங்கும்.” புரட்சிகர செயல்பாடுகள் இப்போது எந்த நிலையில் உள்ளன, அவற்றின் முன்புள்ள முக்கிய சவால்கள் எவையெவை, அவற்றைக் களைய இனி செய்ய வேண்டியது என்ன, சமூகத்தில் வர்க்க சக்திகளின் நிலை என்ன, புரட்சியின் முன்புள்ள சவால்களை எதிர்கொள்ள எத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன - போன்ற நமது கேள்வி களுக்குப் பதிலளிக்கக்கூடிய விவாதங்களை இந்நூலில் ரான் முன் வைக்கவில்லை.

ரானின் இந்த நூல், வெனிசுவேலா புரட்சியின் மீதான ஆர்வத்தினால் தங்கள் மனதில் எழும் கேள்விகளுக்கான விடை களைத் தேடிக் கண்டடையும் உந்துதலை வாசகர்களுக்கு அளிக்கும். இச்சிறு நூல் வெனிசுவேலா புரட்சி பற்றிய வாசகர் களின் பசிக்கு ஒரு உற்சாகமளிக்கும் தீனி யாக அமையும். இந்தத் தீனியைக் கொறித்த வாசகர்கள் தங்களது அறிவுப்பசியைத் தீர்த்துக்கொள்ள அவசியமான தகவல்களைப் பெறும் வழி களைக் கண்டடைவார்கள்.

செலவில்லாத தரமான மருத்துவ சேவையை அனைத்து வெனிசுவேலா மக்களுக்கும் - குறிப்பாக ஏழை மக்களுக்கு - அளிக்க வேண்டும் என்ற நோக்கத் துடன் தொடங்கப்பட்ட ‘பார்ரியோ அதெந்த்ரோ திட்டம்’ பொலிவாரியப் புரட்சியின் மிக முக்கிய மான சாதனையாகும்.

இந்தப் பயணத்தில் நான் சாதாரண மக்களுக் கான மருத்துவத் திட்டத் தில் சிறப்பான பல முயற்சி கள் மேற்கொள்ளப்படு வதைக் கண்டேன். செய்ய வேண்டிய பணி இன்னும் நிறையவே உள்ளது.

வெனிசுவேலாவிற்குப் புதிதாக வரும் எந்த ஒரு பயணியின் கண்ணிலும் தவ றாமல் தட்டுப்படும் இந்த சிகிச்சை மையங்களில் தற் போது கூட மருத்துவர்களே பணியாற்றி வருகிறார்கள்.

இந்த சிகிச்சை மையங் களே புரட்சியின் மூலம் உழைக்கும் மக்களுக்குக் கிடைத்த மிக முக்கியமான பலன் எனலாம். சோசலி சத்தை நோக்கிப் பயணிக் கும் எந்த ஒரு சமூகமும் நீண்ட நெடிய சிக்கலான பாதையைக் கடக்க வேண்டி யது தவிர்க்க இயலாதது. வெனிசுவேலாவில் மருத் துவச் சேவையையும், கல்வி யையும் சமூகத்தின் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந் திருப்பது இந்த நீண்ட பயணத்தில் அவர்கள் கடந்து வந்திருக்கும் முதற்கட்ட மாகும்.

தமிழில் : அமரந்த்தா

Pin It