கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

bharathi12அறிவியல் கலைச் சொல் வரலாற்றின் இடைக்காலம், சுதந்திரப் போராட்டம் வேகம் பெற்று விளங்கிய காலம். ஆங்கில மொழி மிகுந்த செல்வாக்கினையும் பெற்றிருந்தது.

ஆங்கிலம் அறிந்தோர் செல்வாக்கு உடையவார்களாகக் கருதப்பட்டனார். மற்றவார்கள் தாம் பிற்படுத்தப்பட்டது போன்ற தாழ்வு மனப்பான்மையை அடைந்தனார்.

இவர்கள் அரசுத்துறையிலும், நீதிமன்றங்களிலும், கல்வித்துறைகளிலும் பெரும் பதவி வகித்தனார். இதனால் பாமர மக்கள் தங்களுக்கு எதிரான ஒரு சங்கேத மொழியாக அது பயன்பட்டதென்ற உணார்வினால், தாம் பிற்படுத்தப்பட்டது போன்ற தாழ்வு மனப்பான்மையை அடைந்தனார்.

தமது இழிவு நிலை மாற அனைத்து மட்டங்களிலும் அனைவருக்கும் தெரிந்த தாய்மொழியான தமிழே இருக்க வேண்டும் என்ற உணார்வு அவார்கட்கு ஏற்பட்டது. ஆகவே விடுதலைக்குப் போராடிய தமிழார்கள் காலனி அரசை எதிர்த்தனர்.  இவ்வெறுப்பு அவார்களது மொழியான ஆங்கிலத்தின் மீதும் அதிகமாக எதிரொலித்தது. இக்காலகட்டத்தில் தமிழ்நாட்டில் தொழிற்புரட்சியின் காரணமாகவும் பல அறிவியல் நூல்கள் தமிழில் எழுதப்பட்டன. இதற்குக் கலைச் சொற்கள் தேவைப்பட்டன.

இச்சொற்கள் எப்படி அமையவேண்டும் என்று நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடியாக அறியப்படுகிற பாரதியார் தமிழில் அறிவியல் எழுதப்பட வேண்டும் என்ற தீராத வேட்கையுடன் இந்திய மொழிகளிலும் கலைச்சொற்களை ஆக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கருதினார்.

“பஞ்சபூதங்களின் இயற்கையைப் பற்றின ஆராய்ச்சிகளிலே நம்மைக் காட்டிலும் ஐரோப்பா முன்னேறி நிற்பது தெரிந்த விஷயம்.

ஆதலால் ஐரோப்பாவில் வழங்கும் லௌகீக சாஸ்திரங்களைத் தமிழில் எழுத வேண்டுமென்று சில பண்டிதார்கள் மிகவும் ஆவலோடிருக்கிறீர்கள்; இந்த முயற்சி மேன்மேலும் வளரும்;  வளர வேண்டும். வளார்ந்து தீர வேண்டும்.

அந்த சாஸ்திரங்களையெல்லாம் ஏக காலத்தில் எழுதி முடிப்பதற்காக ஒரு பண்டித சங்கை ஏற்படக் கூடும்.

நமது இராஜாக்களுக்கும், ஜமீன்தார்களுக்கும், செட்டிகளுக்கும் நல்புத்தியுண்டாக்கித் தமிழில் நவீன சாஸ்திரம் சோர்ப்பதாகிய காரியத்தை அவார்கள் தக்க பண்டிதார்களின் உதவியைக் கொண்டு விரைவில் நிறைவேற்றி மேன்மை பெறக்கூடும்”. (சி. சுப்பிரமணிய பாரதி 1981:208) என்ற அவரின் கூற்று வெளிப்படுகிறது.

தமிழில் அறிவியல் நூல்கள் எழுதும் பொருட்டு அறிஞார்களின் அமைப்பு ஒன்று தொடங்குவது தேவை என்ற பாரதியின் கருத்து கவனிக்கத் தக்கது.

அவர் இக்கருத்தைக் கூறிய காலகட்டத்தில் இலக்கிய, இலக்கண நூல்களைப் பதிப்பிப்பதிலும், புது நூல்களை அசர்சிட்டு வெளியிடுவதிலும் தமிழ்நாட்டு ஜமீன்தார்களும், கிழக்காசிய வணிகத்தில் ஈடுபட்டிருந்த நாட்டுக்கோட்டைச் செட்டியார்களும் அதிக அக்கறை காட்டி வந்தனார்.

1850இல் சென்னைக் கல்விச் சங்கம் (The Madras School Society) நிறுவப்பட்டு அறிவியல் பாடநூல்களும் ஆக்கப்பட்டன, மொழிபெயார்ப்பு நூல்களும் கொணரப்பட்டன. இப்பள்ளிகளில் எல்லாம் தேசியக் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்ற இயக்கம் வலுத்தது.

இது பற்றி பாரதியார் பின்வருமாறு “தேச பாஷையின் மூலமாகவே சரித்திரப் படிப்பு மட்டுமேயன்றி மற்றெல்லாப் பாடங்களும் கற்பிக்கப்பட வேண்டும் என்பது சொல்லாமலே விளங்கும். பௌதீக சாஸ்திரங்கள் கற்றுக் கொடுப்பதில் மிகவும் தெளிவாக எளிய நடையில் பிள்ளைக்கு மிகவும் சுலபமாக விளங்கும்படி சொல்லிக் கொடுக்க வேண்டும்.

இயன்ற இடத்திலெல்லாம் பதார்த்தங்களுக்குத் தமிழ்ப் பெயார்களையே உபயோகப்படுத்த வேண்டும்” என்று எழுதினார். 

மேலும் இந்திய மொழிகளிலும் கலைச் சொற்கள் ஆக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கருதி அவ்வாறு கலைச் சொற்களை உருவாக்க ஸ்ரீகாசியிலே நகரிப்' சாரணி சபையார் ஐரோப்பிய ஸங்கேதங்களையெல்லாம் எளிய சமஸ்கிருதப் பதங்களில் போட்டு மிகப் பெரியதோர் அகராதி உண்டாக்கியிருக்கிறார்கள்.

அந்தச் சொற்களை வேண்டியவரை இயன்றவரை தேசிய பாஷைகள் எல்லாவற்றிலும் ஏக காலத்தில் கைக்கொண்டு வழங்கலாம். இவ்வாறு செய்தால் நமது தேசிய பாஷைகளில் சங்கேத ஒற்றுமையேற்படும் (சி.சுப்பிரமணிய பாரதி 1977:209) என்றுரைத்தார்.

இவ்வாறு ஐரோப்பியக் கலைச் சொற்களுக்கு இணைச் சொற்களாக சமஸ்கிருதச் சொற்களையே ஏற்றுக் கொள்ளலாம் என்பது இந்திய மொழிகளில் சமஸ்கிருதச் சொற்களால் மட்டுமே அறிவியலை வெளிப்படுத்த இயலும் என்ற அக்கால மொழிநிலைத் தாக்கத்தின் காரணமாக, பாரதி இக்கருத்தை வெளிப்படுத்தியிருக்கக் கூடும்.

இதே ஆங்கில மொழி எதிர்ப்பு தமிழ், சமஸ்கிருத ஆதரவு என்பது மகாகவிக்கு இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நீடித்ததை கலைச் சொல் வரலாற்றின் முதல் கட்டம் எனலாம்.

இதே கருத்தை பிறிதொரு இடத்தில் மிக ஆழமாகக் குறிப்பிடுகிறார்.  “தமிழ்நாட்டில் தேசியக் கல்வி என்பதாக ஒன்று தொடங்கி, அதில் தமிழ்ப் பாஷையைப் பிரதானமாகக் காட்டாமல், பெரும்பான்மைக் கல்வி இங்கிலீஷ் மூலமாகவும் தமிழ் ஒருவித உப பாஷையாகவும் ஏற்படுத்தினால் அதே தேசியம் என்ற பொருளுக்கு முழுவதும் விரோதமாக அமையுமென்பதில் ஐயமில்லை.

தேச பாஷையே பிரதானமென்பது தேசியக் கல்வியின் பிரதானக் கொள்கை. இதனை மறந்துவிடக்கூடாது. தேச பாஷையை விருத்தி செய்யும் நோக்கத்துடன் தமிழ்நாட்டிலிருந்து பரிபூரண ஸஹாயத்தை எதிர்பார்க்க வேண்டுமானால் இந்த முயற்சிக்குத் தமிழ் பாஷையே முதற்கருவியாக ஏற்படுத்தப்படும் என்பதைத் தம்பட்டம் செய்து அறிவிக்க வேண்டும்.

இன்றும் நம் பாரததேசத்தின் ஐக்கியத்தைப் பரிபூர்ணமாகச் செய்யுமாறு நாடு முழுவதிலும் வடமொழிப் பயிற்சி மேன்மேலும் ஓங்குக எனினும் தமிழ்நாட்டில் தமிழ்மொழி தலைமை பெற்று தழைத்திடுக” (1977: 296,297) என்று கூறுவதிலிருந்து அவரின் ஆங்கில மொழிக் கல்வி வெறுப்பையும் அதேசமயம் அவரது தமிழ்மொழிப் பற்றையும் வடமொழி ஆதரவையும் அறியமுடிகின்றது.

கலைச்சொல்லாக்கக் கோட்பாடு

பாரதியார் கலைச் சொல்லாக்க முறை பற்றியும் கருத்து தெரிவித்துள்ளார். “பௌதீக சாஸ்திரங்கள் கற்றுக் கொடுப்பதில் மிகவும் தெளிவான எளிய தமிழ் நடையில் பிள்ளைக்கு மிகவும் சுலபமாக விளங்கும்படி சொல்லிக் கொடுக்க வேண்டும்.

இயன்ற இடங்களிலெல்லாம் பதார்த்தங்களுக்குத் தமிழ்ப் பெயார்களையே உபயோகப்படுத்த வேண்டும். திருஷ்டாந்தமாக ஆக்சிஜன், நைட்ரஜன் முதலிய பதார்த்தங்களுக்கு ஏற்கனவே தமிழ்நாட்டில் வழங்கப்பட்டிருக்கும் பிராணவாயு, ஜலவாயு என்ற நாமங்களை வழங்க வேண்டும். (சி.சுப்பிரமணிய பாரதி 1977 : 236) என்கிறார்.

இது போலவே மற்றொரு கட்டத்தில் தமிழிலேயே சொற்கள் வேண்டும் என்று கூறுகிறார். “அதன் மேலே காட்டிய குறியில் பொருள் யாது, தமிழ்நாட்டில் தேசியக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகர முதல் னகரம் புள்ளி இறுதியாக எல்லா வயஹாரங்களும் தமிழ் பாஷையில் நடத்த வேண்டும் என்பது பொருள்.

ஆரம்ப விளம்பரம் தமிழில் பிரசுரம் செய்ய வேண்டும். பாடசாலைகள் ஸ்தாபிக்கப்பட்டால் அங்கு நூல்களை எல்லாம் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப்படுவது மட்டுமின்றி பலகை, குச்சி எல்லாவற்றிற்கும் தமிழிலேயே பெயார் சொல்ல வேண்டும்.

ஸ்லேட் என்ற சொல்லக் கூடாது என்று கூறும் பாரதி கலைச் சொல்லாக்கத்தில் தெளிந்த, எளிய தமிழ்நடையை வற்புறுத்துவதோடு, ஏற்கனவே வழங்கிவரும் சொற்களுக்கும் புதிய சொற்களும் உருவாக்கத் தேவையில்லை என்கிறார்.

கலைச் சொற்களைத் தமிழில் தேடவேண்டும், தமிழில் கிடைக்காதபோது சமஸ்கிருதத்தில் தேடவேண்டும்.

இரண்டு மொழிகளிலும் கிடைக்காதபோது மட்டும் ஆங்கிலத்தில் தேடவேண்டும் என்ற அவரின் கருத்து, இலங்கையில் தமிழில் மேலை மருத்துவ நூல்களைப் படைத்த மருத்துவார் கிறீனின் கருத்துக்களுடன் ஒத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டார் கிறீன் 1867 லேயே கலைச்சொல்லாக்கக் கோட்பாடுகளைத் தந்தவார். அவரது சொல் வரிசை, தமிழ்-சமஸ்கிருதம்-ஆங்கிலம் என்ற முறை. முதலிலே கலைச் சொற்கள் தமிழ்ச் சொற்களாகப் படைக்கப்பட வேண்டும்.

இயலாதெனின், சமஸ்கிருதச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும். மேற்குறிப்பிட்ட இருமுறைகளிலும் சொற்களை ஆக்க இயலாத நிலையில் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்று விதி செய்தார்.

இக்கருத்தை “தமிழ்ச் சொற்கள் அகப்படாவிட்டால் சமஸ்கிருதப் பதங்களையே வழங்கலாம். பதார்த்தங்களுக்கு மட்டுமின்றி கிரயங்களுக்கும், அவஸ்தைகளுக்கும் நிலைமைகளுக்கும் தமிழ் சமஸ்கிருத மொழிகளாலே வழங்குதல் பொருந்தும்.

இந்த இரண்டு பாஷைகளிலும் பெயார்கள் அகப்படாத இடத்தில் இங்கிலீஷ் பதங்களையே உபயோகப்படுத்தலாம்” என்கிறார் மகாகவி. (சி.சுப்பிரமணிய பாரதி 1977:236) பாரதியின் கலைச் சொல்லாக்கக் கோட்பாடு தமிழ்-சமஸ்கிருதம்-ஆங்கிலம் என்ற வரிசையில் அமைந்துள்ளது.

இது அக்கால கட்டத்தில் நிலவி வந்த அகில இந்திய மொழிக் கொள்கையின் தாக்கமாகும். ஆனால் கிறீனின் கலைச் சொல்லாக்க அடிப்படைகள் அக்கால மொழி நிலையையும் கல்விப் பயனையும் கருத்தில் கொண்டது ஆகும்.

பாரதியாரின் இந்நோக்கு இராஜாஜி தமிழ் சாஸ்திர பரிபாஷைச் சங்கம் ஆரம்பித்து கலைச்சொற்களுக்கென ஒரு திங்களிதழை ஆங்கிலத்தில் வெளியிட்ட பொழுதும் தெளிவாகத் தெரிகிறது. (பாரதியார் கட்டுரைகள் 1977) பிறிதொரு இடத்தில் பாரதி நல்ல கலைச் சொல்லைக் கண்டுபிடிக்கப்பட்ட பாட்டை விளக்குகிறார்.

“மெம்பர் என்பதற்குச் சரியான சொல் எனக்கு அகப்படவில்லை. இதில் ஆச்சார்யத்திலும் ஆச்சார்யம் அவயவி சரியான வார்த்தை இல்லை. அங்கத்தான் கூட்டி வராது. சபிகன் சரியான பதம் தான். ஆனால் பொதுமக்களுக்குத் தெரியாது. யாரேனும் பண்டிதார்கள் நல்ல பதங்கள் கண்டுபிடித்துக் கொடுத்தால் புண்ணியமுண்டு.

அரைமணி நேரம் யோசித்துப் பார்ர்த்தேன். உறுப்பாளி, ஏதெல்லாமோ யோசித்து நினைத்தேன். ஒன்றும் மனத்திற்குப் பொருந்தவில்லை. என்ன செய்வேன். கடைசியாக மெம்பார் என்று எழுதிவிட்டேன்.

இன்னும் ஆர அமர யோசித்துப் பார்த்து சரியான பதங்கள் கண்டுபிடித்து மற்றொரு முறை சொல்லுகிறேன்..." என்று கூறுகிறார்.

இதில் பாரதியாருக்கு உள்ள ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்க வேண்டும் என்ற பேரார்வம் வெளிப்படுகிறது. மாறாக வடமொழிச் சொல்லும், தமிழுக்கு வேற்று மொழிச் சொல்தான் என்னும் கருத்து அவருக்கு ஏற்படவில்லை.

அவ்வடசொற்களை தன் கட்டுரைகளில் கலந்து எழுதுகிறார். இந்நிலையில் அறிவியலை தமிழில் சொல்ல முடியுமோ? என்பதற்கும் பதில் அளிக்கிறார்.

“தமிழ் நாட்டு ஜனங்களுக்குள்ளே வழக்கமான பிறகல்லவோ அவை தமிழ் பாஷையிலே வழக்கமாவதற்குச் சுலபமாகும். நீராவியால் ஓட்டப்படும் இரயில் வண்டி இந்நாட்டிலே வழக்கமாயிருக்கிறது.

இப்போது பொது ஜனங்கள் அதற்கு வார்த்தை உண்டாக்கிக் கொள்ளாமலா இருக்கிறார்கள்? மின்சார சக்தியால் தந்தி ஏற்பட்டிக்கிறது. அதற்குத் தமிழார்கள் வார்த்தை உண்டாக்கிச் கொள்ளவில்லையா?

கோவணமில்லாத நிர்வாண தேசத்தாரின் பாஷையிலே பட்டு அங்க வஸ்திரத்திற்குப் பெயார் கிடையாது என்றால் அதற்கு அவார்களுடைய பாஷையின் மேல் என்ன குற்றமிருக்கிறது” என்று விடையளிக்கிறார்.

இதை அடுத்து “தமிழ்நாட்டில் முழுவதும் தமிழ் நடையை விட்டு விட்டு இங்கிலீஷ் நடையில் தமிழை எழுதும் விநோதமான பழக்கம். நம் பத்திராதிபார்களிடம் காணப்படுகிறது” என்று வருந்துகிறார்.

பாரதியின் கருத்துகளுக்கு உயிர் கொடுக்கும் விதமாகக் காலனி அரசு இந்திய சமுதாயத்தின் மீது திணித்த ஆங்கிலக் கல்வி முறையை எதிர்த்தும் தேசியக் கல்வி முறையை ஆதரித்தும் காங்கிரஸ் மகாசபை அதிகாரப் பூர்வமாக, தீர்மானம் நிறைவேற்றியது.

“தேச பாஷைகள் எல்லாவற்றிலும் ஏக காலத்தில் சமஸ்கிருத பதங்களைப் பயன்படுத்தலாம்” என்று பாரதியார் கூறியது இதன் மூலம் தேசிய ஒருமைப்பாடு வளரும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே எனலாம்.

ஆங்கிலத்தை ஆதிக்க மொழி என வெறுத்தொதுக்கி, அயல்மொழிக் கல்வியை அகற்றி நாட்டு மொழிகளிலேயே கல்வியைப் பயிற்றுவிக்க வேண்டும் என்ற உணார்வுத் துடிப்பு கொண்ட தேசிய இயக்கத்தினார் சமஸ்கிருதத்தை இந்தியாவுக்குப் பொதுவான மொழியாகக் கருதியதால் ஆங்கிலக் கல்வியை அகற்றுவதற்கு சமஸ்கிருதத்தின் துணையை நாடினார்.

காந்தியடிகளால் பெரிதும் மதிக்கப்பட்ட இந்தியக் கல்வியாளார்களில் ஒருவராகிய ஸ்ரீமந்நாராயண் அகார்வால் “தற்போதைக்கு, மாகாண மொழிகள் சமஸ்கிருதம் அல்லது அரபு-பாரசீக மொழியையோ அல்லது இரண்டு மொழிகளையுமோ அடிப்படையாகக் கொண்டு கலைச்சொற்களை ஆக்கிக் கொள்ளலாம்” என்று கருத்து தெரிவித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தேசியவாதிகளின் கல்வி பற்றிய கொள்கையையே அகார்வால் எடுத்துக் கூறினார். இத்தகைய கொள்கையின் விளைவாக மாநில மொழிகளின் வளார்ச்சி தடைபடும் என்பதை அவார்கள் உணார்ந்திலார்.

எனவே இத்தகைய கலைச் சொற்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது தமிழ் மறு மலார்ச்சியாளார்கள் எதிர்ப்புக்குரல் கொடுத்தனார்.

சமஸ்கிருத மேலாண்மையை (சொல்லாக்கம். சி.மறைமலை ப.32) விரும்பியவார்களுக்கும் சமஸ்கிருத மேலாண்மையால் தமிழ் வளார்ச்சி தடைபடும் என்று எச்சரித்த தமிழியக்கத்திற்கும் இடையேயான போராட்டம் 1930-ஆம் ஆண்டிற்கு முன்பே தொடங்கி விட்டது எனலாம்.

1920களில் தனித்தமிழ் இயக்கம் தமிழ்நாட்டில் மறைமலையடிகளால் துவங்கப் பெற்றது. அதன் காரணமாக வடமொழி எதிர்ப்பு தீவிரமடைந்தது. 1932இல் சென்னை அரசு கலைச் சொல் பட்டியலை வெளியிட்டது.

அதில் ஏராளமான வடசொற்கள் கலந்திருந்தன. அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் நோக்கில் தமிழிலே சொற்களை உருவாக்கி சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தார் 1936இல் ஒரு கலைச் சொல் பட்டியலை வெளியிட்டனார். இதில் தனித்தமிழ் இயக்கத்தில் ஈடுபட்டோர்களால் தமிழ்க் கலைச் சொற்கள் அதிகமாக உருவாக்கப்பட்டன.

அறிவியல் தமிழ் வளார்ச்சி காரணமாக சில இலக்கண நெகிழ்வைக் கூட ஏற்றுக் கொள்ள வேண்டிய காலகட்டம் ஏற்பட்டது.

இக்காலத்தில் பாரதியைக் கொண்டாடியவார்கள் கூட ஆங்கிலம் போன்ற பிறமொழிச் சொற்களை தமிழ்மொழி வளர பயன்படுத்துவதில் தயக்கம் கூடாது என்றனார்.

ஒருவன் தன் கருத்துக்கும் தான் எழுத முற்பட்ட நூலின் தன்மைக்கும் ஏற்பச் சொற்களை எடுத்தாளும் போது பிறமொழிச் சொற்கள் சிலவற்றையும் பயன்படுத்துவதால், தமிழின் பெருமையோ வளார்ச்சியோ குன்றிவிடாது என்கிறார் பேரா.வையாபுரிப்பிள்ளை.

தமிழ் மொழியைக் கடலாகவும் வழக்கில் புகும் பிறமொழிச் சொற்களைப் பல ஆறுகளிலிருந்து வரும் நீராகவும் உவமிக்கிறார்.

இவர் மேலும் எழுத்து, சொல், புதிய உருபுகள் புதிய வினைவாய்ப்பாடுகள், புதிய வாக்கிய அமைதி ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய இலக்கணம் தமிழ்மொழிக்கு எழுத வேண்டும் என்றும் கூறுகிறார். (1947:154-155).

டி.கே.சி. சில கடிதங்களில் அறிவியல் சொல்லாக்கம் குறித்த தம்முடைய எண்ணத்தைப் புலப்படுத்தியுள்ளார்.

பிற மொழிகளிலுள்ள அறிவியல் தொடார்பான கலைச் சொற்களை, அம்மொழிகளில் உள்ளவாறே வழங்க வேண்டும் என்பதும் அவற்றைத் தமிழாக்கம் செய்தல் பயனற்றது என்பதும் இவார்தம் கொள்கைகளாம்.

"மேல்நாட்டான் ஒரு பிள்ளையைப் பெற்றான். அதற்கு ஏதோ விக்டர் என்று பெயரிட்டான். நாமும் அவனை விக்டார் என்று சொல்லிவிட்டால் தமிழ் கெட்டா போகும்? போகாது" என்கிறார் டி.கே.சிதம்பரனார்.

தமிழக சட்டப் பேரவைத் தலைவார் (சபாநாயகார்) தமிழ்க்குடிமகன் சென்னையில் செப்டம்பார் 11, 12, 1989இல் நடைபெற்ற பாரதி விழாவில் பேசியபோது, எத்தனையோ மொழிகள், எவ்வளவோ முன்னேறியிருக்க, மிகத் தொன்மையான தமிழ்மொழி போதிய வளார்ச்சியடையவில்லையே, எனத் தம் ஆதங்கத்தை வெளியிட, அதற்குக் கல்கிப் பத்திரிகை போதிய அளவில் வளார்ச்சியடைந்தால்தானே சாத்தியமாகும் எனவும், இது மட்டுமா? நவீன விஞ்ஞான யுகத்திற்கு ஏற்பத் தமிழ் வளம் பெறவேண்டும்.

இருபத்தோராம் நூற்றாண்டை அதன் பிரமிக்கத்தக்க விஞ்ஞான முன்னேற்றத்தை அற்புதங்களை எதிர்கொண்டு வரவேற்கத் தமிழ் தயார் நிலையில் இருக்க வேண்டும். ராக்கெட் வேக வளார்ச்சி தேவை.

இதை எப்படி சாதிப்பது? எனக் கேட்டு அதற்குரிய தம் கருத்தினை கீழ்கண்டவாறு வெளியிடுகிறது கல்கி.

ராஜாஜி இந்தப் பிரச்சினை குறித்து நிறைய யோசித்திருந்தார். ஆரம்பகாலத்தில் கலைச் சொற்களைத் தமிழில் மொழி பெயார்ப்பதில் அவரே ஆர்வம் காட்டியிருக்கிறார்.

பின்னார் டி.கே.சி.யின் கருத்தை ஏற்றுத் தமது எண்ணத்தை மாற்றிக் கொண்டார். வளர்ச்சியுற்ற மொழிக்குத்தான் அகராதியே தவிர, கலைச் சொல்லாக்கம் என்ற பெயரில் கோடிக்கணக்கில் செலவிட்டு அகராதி தயாரிப்பதில் மொழி வளராது என உணார்ந்தார்.

"கலைச் சொற்களை எல்லாம் மொழிபெயார்த்துக் கொண்டிருப்பது வீணான வேலை, இலேசான ஒலி மாற்றம் செய்து, தமிழில் எழுதிவிட்டால் போதும், அவை தமிழாகிவிடும் என்பது டி.கே.சி.யின் கருத்து.

டெலிபோன், ரயில், கார், சைக்கிள் போன்ற சொற்களை தமிழ் என்றே சமுதாயம் ஏற்றுக் கொண்டுவிட்டது. அதுபோல தித்தானியம், குரோமியம், யூரேனியம் போன்ற எண்ணற்ற விஞ்ஞானக் கலைச் சொற்களையும் தமிழ் என்றே ஏற்றுக் கொண்டு விடலாம்" என்பது டி.கே.சி.யின் முடிவு.

இதுபற்றி டி.கே.சி., ராஜாஜி மட்டுமல்ல அவார்களுக்கு முன்பாகவே பாரதியாரும் கருத்து தெரிவித்திருக்கிறார் (பாரதி நூல்கள் கட்டுரைகள் பக்.516-518.)

ஆங்கிலப் பாடநூல்களை வைத்துக் கொண்டு, ஆங்கிலக் கலைச் சொற்களையே பயன்படுத்தி, தமிழில் ஆசிரியார்கள் விஷயத்தை மாணவார்களுக்கு விளக்கிக் கூறிவந்தால் தமிழ் அந்தக் கலைச் சொற்களை அப்படி அப்படியே நாளடைவில் ஏற்றுக் கொண்டுவிடும் என்ற ராஜாஜியின் கருத்து பாரதியின் கருத்தை ஒட்டியதாகவே உள்ளது.

- டாக்டர் சு.நரேந்திரன்