எந்தவொரு நாட்டிலுமே குழந்தைகளும் சிறுவர்களும் இளைஞர்களும் எதிர்கால நம்பிக்கைகள். அவர்கள் நல்ல உளநலத்துடனும் உடல் நலத்துடனும் வளர்க்க அந்நாடு முயலும்; முயல வேண்டும். தமிழ்நாட்டில் பள்ளிச் சிறார்கள் நிலைமை எப்படி இருக்கின்றது என்பதை ஜூன் மாதச் சம்பவம் ஒன்று எடுத்துக்காட்டுகின்றது.

சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவன் சே.சீனிவாசன் ஜூன் 18 அன்று தற்கொலை செய்துகொண்டான். இப்படித் ‘தற்கொலை செய்து கொண்டான்’ என்று சொல்வதை விட நான்கு ஆசிரியர்களால் கொலை செய்யப் பட்டுள்ளான் என்று சொல்வது சரியாக இருக்கும்.

சே.சீனிவாசன் கணித ஆசிரியர் செந்திலைப் பாடங் களைப் புரியும்படி நடத்துமாறு கேட்டதும், இதைப் பற்றித் தலைமையாசிரியரிடம் கடிதம் அளித்ததுமே அவன் செய்த குற்றம். கணித ஆசிரியரும், அவருடைய உறவினர்களான தமிழாசிரியர், இயற்

பியல் ஆசிரியர், வேதியியல் ஆசிரியர் ஆகியோரும் கூட்டாகவும், தனியாகவும் மாணவனை மிரட்டி யுள்ளனர். ‘செய் முறைத் தேர்வில் மதிப்பெண்கள் போட மாட்டோம். உன்னுடைய நடத்தைச் சான் றிதழில் மோசம் என்று எழுதிக் கொடுப்போம். உன் வாழ்வையே அழித்துவிடுவோம்’ என்று வக்கரித்துள்ளனர்.

சே.சீனிவாசன் பத்தாம் வகுப்பில் 409 மதிப் பெண்கள் பெற்றுப் பள்ளியிலேயே முதல் மாண வனாகத் தேரியவன். ஏழ்மையின் காரணமாகவும், தந்தை நோய்வாய்ப்பட்டதன் காரணமாகவும் ஓராண்டு கழித்தே பதினொன்றாம் வகுப்பில் சேர்ந்து உள்ளான் (அவனைக் கொலை செய்த ஆசிரியர்கள் இந்த ஓராண்டுக் காலம் மாணவன் சீனிவாசன் பம்பாய் சென்று மஃபிய கும்பலில் வேலை செய்தான் என்று இதயமே இல்லாமல் பொய் சொல்கின்றனர். கொலைகார ஆசிரியர்களுக்கு ஆதரவாகச் செயல் படும் காவல்துறையும் இதையே வாந்தியெடுக்கிறது).

அவன் எல்லாப் பாடங்களையும் நன்கு படிக்கும் மாணவன். தன் சக மாணவர்களுக்காகவே அந்தக் கணித ஆசிரியரிடம் புரியும்படி நடத்துமாறு கேட்டான். அவர் நான் ‘இப்படித்தான் நடத்துவேன்’ என்று கூறிவிட்டு, வழக்கம் போல கரும்பலகையில் கணக்கு களை நிரப்பிவிட்டு, ‘இதை எழுதிக் கொள்ளுங்கள்’ என்று சென்று விட்டாராம். தான் மட்டும் சிறந்த மாணவனாகப் படிக்கவேண்டும் என்று நினைக் காமல், தன் சக மாணவ நண்பர்களும் சிறக்க வேண்டும் என்று நினைத்த மாணவன் சே.சீனிவாசன். அந்த ஏழைச் சிறுவனை உன்னை வாழவே விட மாட்டோம் என்று ‘எல்லாவல்லமையும் பெற்ற அரசுப் பள்ளி’ ஆசிரியர்கள் மிரட்டியதாலே ‘தான் தற்கொலை செய்துகொண்டதாகக்’ கூறியுள்ளான் சீனிவாசன்.

“இன்னொரு ஜன்மம் என்றிருந்தால் இந்த மனிதப் பிறவியே வேண்டாம்” என்று அந்த மாணவன் எழுதியுள்ளான். மண்ணில் நல்லவண்ணம் வாழக் கற்பிக்க வேண்டிய ஆசிரியர்கள் மனிதப் பிறவியே வேண்டாம் என்று சொல்லவைத்து விட்டனர். சீனிவாசனைக் கொன்ற நான்கு கொலைக் கார ஆசிரியர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

இந்தச் சம்பவத்தில் வரும் சர்வாதிகார ஆசிரியர்கள் (நாங்கள் நடத்துவதுதான் பாடம்; அதைக் கேட்பது தான் மாணவனின் கடமை என்று கூறும் ஆசிரியர்கள், மாணவனை ஒரு பொருட்டாகவே மதிக்காத ஆசிரியர்கள்) போல கிராமப்புறப் பள்ளிகளில் மட்டுமல்ல, நகர்ப்புற பள்ளிகளிலும்கூட பலரைப் பார்க்கலாம். தனியார் பள்ளிகளிலும் இதே நிலைமை தான். தனியார் பள்ளி நிர்வாகங்களால் அவமானப் படுத்தப்பட்டு, தாய்மார்களே தற்கொலைக்குத் தள்ளப்படுகின்றனர். அதிகார மேட்டிமை உள்ளிட்ட எல்லாவகை மத்தியக் காலப் பண்பு நலன்களும் இன்னும் உயிர் வாழ்கின்றன. அதற்கான பொருளாதார அடிப்படைகளும் இருக்கின்றன. நமது கல்வி முறையிலும், கல்வி நிறுவனங்களிலும் மத்தியகால பண்புகள் சற்றுத் தூக்கலாகவே இருக்கின்றன. இவற்றையெல்லாம் தூக்கியெறிய வேண்டும். ஆசிரியர் சங்கங்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பொருளாதார நலன்களுக்கான கோரிக்கைகளுக்கு மட்டுமே போராடாமல், மத்தியக் காலக் கேடு கெட்ட பண்புகளிலிருந்து ஆசிரியர்களை விடு விக்கவும் போராட வேண்டும். ஆசிரியர்களுக்கு ஜனநாயகப் பண்புகளைக் கற்பிக்க ஆசிரியர் சங்கங்களே கடமைப்பட்டவை.

Pin It