1.
மரண பயம்
என்னை வரவேற்ற
எமன் கண்ணில் திகைப்பு
நான் முன்வந்த காரணத்தை
முக்கண்ணன் அறிந்தால்
மூன்றாம் கண் திறக்குமென்ற மலைப்பு.
மூன்று நாள் பசிதின்ற
உடல் சுமந்து கேட்டேன்
சிவன் என் தோழனென்றால்
நீ யாரென?
சொல்கேட்டு பயந்த எமன் கேட்டான்
நான் உன் நண்பன் /நன்று
ஆயின்
சிவன் உன் தோழனென
முன்பே ஏன் பகிரவில்லை?
2.
உயிரை எரிக்க
நெருப்பு தேடி அலைந்தேன்
சாவின் மணம் நுகர்ந்த
மூக்கு சிரிக்கும்
இடுகாட்டின் முருங்கை மரம்
அழைக்கும் என் தலையணையை.
ஏன் மனிதனுக்கும் உயிருக்கும்
இத்தனை போராட்டம்?
ஒருநாள் கேட்பேன் எமனிடம்
ஏன் என் சாவின் நாளை
எனக்குச் சொல்லவில்லையென.
3.
நாளை என்று வரும்
நான் கொல்ல நினைக்கும்
முதல் மனிதன் நானே!
கொலை எனக்கு
உடன்பாடில்லை.
தற்கொலை கோழைகளின் வழி
வேறு என்ன? என்றேன்
எமன் புகன்றான்.
நான் ஒன்று சொல்வேன்
நாளை வா