வானம்
சுடரொளி கொண்டிருந்த நடுச்சாமம்
சொல்லமுடியாத நிலாக் காலம்
விளக்கவொன்றாத அமைதி
நிலவிய நல்ல நேரம்
தூக்கம் பிடிக்காது
வெறியில் வந்து நின்றிருந்த இனிய பொழுது
தக்ஷ்ணாமூர்த்தி
தேடிக்கொண்டு வந்து விசாரித்தார்
சாந்தமும் பக்குவமும்
வேண்டிக் கேட்டேன்
வழங்கினேன் என்றார்
அருமையாய்
பிறகு
கொஞ்ச நேரம் சென்று காளி தோன்றினாள்
சிறிது துடியும் உக்கிரமும்
தந்து விட்டுப் போனாள் பாசமாய்
பிரமிள் கவிதைகள்
படித்துக் கொண்டிருநத பிரம்ம முகூர்த்தம்
சுக்ராசாரியார்
வந்திருந்தார் வழக்கம் போல
பகிர்ந்து கொண்டேன்
நிகழ்ந்தவற்றையெல்லாம்
போதும் போதும் கவியெழுத என்று
பூரித்துப் போனார் சந்தோஷத்தில்
ஆசையாய்க் கேட்டேன்
நீங்கள் என்ன தரம் போகிறீர்கள்
ஏன் சொடை தானே
உன் கவிதைகள் என்றார் இளமுறுவலோடு
நீர்த்துப் போனாற் போல
தெரிகிறதே என கவலைப்பட்டேன் அவளிடம்
சுக்கிலம் போலத்தான்
கவித்துவமும்
சும்மா விரயம் பண்ணக்கூடாது
என்று அறிவுறுத்தினார் சிறியதாய்
காலில் விழுந்து நமஸ்கரித்தேன்
தோள் பிடித்துத் தோக்கியெழுப்பி ஆசிர்வதித்தார் கனிவாய்
நான் தான் நீ
கவிஞறென்றாலே சுராம்சம்தான்