உலகமெங்கும் மக்களை மையப்படுத்துகின்ற அரசியல் நாகரிகத்தை பார்க்கிறோம்.

இந்தியாவில் மட்டும்தான் மாட்டையும், அதன் இறைச்சியையும் வைத்துக்கொண்டுச் செய்யும் அரசியல் அநாகரீகத்தைப் பா£க்கிறோம்.

புதுடில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கேரள அரசுக்குச் சொந்தமான கேரள இல்லம் இருக்கிறது. அங்கு வெளியாட்கள் உட்பட யாரும் உண்ணலாம்.

டில்லியில் இந்து சேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா என்பவர், கேரள இல்ல உணவகத்தில் பசுமாட்டு இறைச்சி பரிமாறப்படுவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தந்திருக்கிறார்.

உடனே டில்லி காவல் துறையிறை, கேரள இல்லத்தினுள் நுழைந்து அரைமணி நேரம் சோதனை நடத்தியிருக்கிறார்கள், பசுமாட்டு இறைச்சி இருக்கிறதா என்று.

கேரள அரசும், அம்மாநில முதல்வர் உம்மன் சான்டியும் இதனை வன்மையாகக் கண்டித்துள்ளார்கள்.

இங்கே இரண்டு செய்திகளைப் பார்க்கவேண்டும். ஒன்று, கேரள இல்லம் என்பது தனியார் உணவு விடுதி அன்று. அது கேரள அரசின் அதிகாரப்பூர்வ இல்லம்.

இதற்குள் மத்திய அரசோ, டில்லி மாநிலக் காவல் துறையோ அவ்வில்ல உள்ளுரை ஆணையர் அனுமதியின்றி நுழையவோ, சோதனையிடவோ முடியாது.

ஆனால், ஆளுநர் கட்டுப்பாட்டிலுள்ள டில்லி காவல்துறை இதைமீறி இருக்கிறது.

இதன் மூலம் மத்திய அரசு மாநில உரிமையின் மீது தலையிட்டு ஆதிக்கம் செய்ய முனைகிறது என்பது வெளிப்படையாகிறது.

இரண்டாவது, ஒரு மனிதர் எந்த உணவை உண்ண வேண்டும், அல்லது உண்ணக்கூடாது என்று அடுத்தவர்கள் மீது நிர்பந்தம் கொடுக்கக் கூடாது. இது தனிமனித உரிமையின் மீது செலுத்தும் ஆதிக்கம்.

ஆதிக்கமென்பது ஆயுதமில்லா வன்முறை, என்றாலும் ஆயுதமும் வர வாய்ப்பு ஏற்படுகிறது.

இந்து வெறியர்கள் பசுமாட்டின் இரத்தத்தை பாலாகப் பிழிந்து குடித்துவிட்டுப் பசுவை சக்கையாக்கி விடுகிறார்கள்.

 அந்தச் சக்கை இறைச்சியைப் பிறர் சாப்பிட்டால் மிரட்டல், கொலை. இதுதான் இன்றைய இந்திய சனநாயகம்...?

மோடியும், மத்திய அமைச்சர்களும் இந்துத்துவ வாதிகளாக இருந்துக்கொள்ளட்டும்.

அதை மக்களிடம் திணிக்க முயலக்கூடாது.

ஏனென்றால், பசுவும் திருப்பி முட்டும்.