எத்தனையோ இடைத்தேர்தல்கள் வந்து போயிருக்கின்றன! ஆனால் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தல்கள், இதுவரையில் இல்லாத சில கூறுகளைக் கொண்டவை!
பொதுவாக, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் யாரேனும் எதிர்பாராமல் மறைந்து விட்டால் இடைத்தேர்தல் வரும். இப்போது ஜனநாயகம் இறந்து போய்விட்டதால் இடைத்தேர்தல் வந்திருக்கிறது!
வெற்றி பெற்ற அதே வேட்பாளர், அதே தொகுதியில், தேர்தல் நடந்த நான்கு மாதங்களுக்குள் மறுபடியும் வேறு ஒரு கட்சியின் சார்பில் போட்டியிடும் தேர்தல் இது!
தான் வெற்றி பெற்ற கட்சி ஆளுங்கட்சியாக வரவில்லை என்றவுடன், பதவி விலகி, வேறு ஒரு கட்சிக்குத் தாவி, அந்தக் கட்சியின் சார்பில் மறுபடியும் தேர்தலில் போட்டியிடும் விந்தை இந்த இடைத்தேர்தல்களில் நடைபெறுகிறது!
அதிமுக, தேர்தல் முடிவுக்குப் பிறகு திமுகவுடன் கூட்டணி சேர இருப்பதாகப் பேச்சு அடிபட்டதால்தான், அந்தக் கட்சியிலிருந்து விலகி விட்டோம் என்கிறார்கள்! அப்படியானால் விலகிய பிறகு சுயேசையாக அல்லவா போட்டியிட்டு இருக்க வேண்டும்!
தங்களை எந்தக் கட்சி வெற்றி பெற வைத்துச் சட்டமன்றத்திற்கு அனுப்பியதோ, அந்தக் கட்சியைத் தீய சக்தி என்று கூட இல்லை, தீய்ந்து போன சக்தி என்று வருணித்த ஒருவர் தலைமையிலான கட்சியில் போய் எப்படிச் சேர்ந்தார்கள்?
வரும் இடைத்தேர்தல்களில் த.வெ.க படுதோல்வி அடைந்தால், ஜனநாயகமும் , நியாயமும் இன்னும் இம்மண்ணில் இருக்கின்றன என்று பொருள்!
தப்பித்தவறி அக்கட்சி வெற்றி பெற்று விட்டால், தமிழ்நாட்டில் ஜனநாயகமும், நியாயமும் குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விட்டன என்று பொருள்!
இரண்டில் எது நடைபெறப்போகிறது? தமிழ்நாடு இப்போது என்னவாக இருக்கிறது?
விடை சொல்லும் இடைத்தேர்தல்கள்!
- சுப. வீரபாண்டியன்