விவசாய மக்களின் நண்பன் போலப் பேசிவரும் பிரதமர் மோடியின் பேச்சும், செயலும் அவ்வாறு அமையவில்லை.
விவசாய மக்களின் நலன் கருதி, கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 இல் இருந்து 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
அதை ஒன்றிய அரசும், அதன் பிரதமர் மோடியும் ஏற்கவில்லை. கோவை வேளாண் மாநாட்டுக்கு வந்த அவர் இதுகுறித்து வாயே திறக்கவில்லை.
நெல் கொள்முதலில் ஈரப்பதத் தளர்வு, கனமழையால் ஈரப்பதம் அதிகமாகி உள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் போன்ற தமிழ்நாட்டின் வேண்டுகோள்களை மோடி புறக்கணித்துளார்.
தென்னாட்டின் மான்சிஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை-மதுரை வரையான மெட்ரோ ரயில் திட்டமும் நிராகரிக்கப் பட்டுள்ளது. ஆனால் எந்தவித உறுத்தலும் இன்றி கோவை வந்து சென்றுள்ளார் பிரதமர் மோடி.
அவர் வந்து சென்ற ஈரம் கூடக் காயவில்லை. விவசாய மக்களைக் காய விட்டுவிட்டார்.
"தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை?" என்று முதலமைச்சர் விடுத்துள்ள கேள்விகளாவது, பிரதமருக்குக் கேட்குமா?
- கருஞ்சட்டைத் தமிழர்