ஆவடிப் பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர் சமூகத்தின் திவ்யா, பிரியா, தர்ஷினி ஆகிய மூன்று மாணவிகளின் பேச்சு சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், அது தமிழக முதல்வரின் கவனத்திற்கும் சென்றது.

அந்த மூன்று மாணவிகளையும் தலைமைச் செயலகத்திற்கு அழைத்துப் பேசினார் முதல்வர்.

அப்போது அந்தக் குழந்தைகள் ஏழ்மையில் இருக்கும் தங்கள் சமூகத்திற்கும், தங்கள் படிப்புக்கும் உதவி செய்ய முதல்வரிடம் வேண்டுகோள் வைத்தனர்.

குழந்தைகள் பேசுகிறார்கள். அவர்களுக்கு எதிரில், நின்று கொண்டு, குழந்தைகளைப் பார்த்தபடி, சற்று தலையும், உடலும் குனிந்தபடி அந்த மூன்று குழந்தைகள் பேசுவதைக் கேட்கும் நான்காவது குழந்தையைப் போல இருந்தாரே, அவரா நம் முதல்வர்!

ஆம்! உலகின் புகழ் பெற்ற இதழ்களால் வியப்போடு பேசப்பட்டவர், ஒன்றிய அரசின் தலைவர்களால் உயர்த்தப்படுபவர், அரசின் நிர்வாகத்தைக் கைப்பிடியில் வைத்துக் கொண்டு நாளுக்கு நாள் மக்களின், நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்து வரும் முதல்வர், “கருணாநிதியை விட ஆபத்தானவர்” என்று சங்கிகளைக் கதற விட்ட அந்தத் தலைவர் இங்குக் குழந்தையைப் போல் பேசுகிறார்!

அந்தக் குழந்தைகளின் வேண்டுகோளை ஏற்கிறார் முதல்வர்.

அடுத்த நாளே அந்த நரிக் குறவர் சமுகம் வாழும் மக்களுடன் இருந்த ஆவடி நாசர் கைபேசி மூலமாக வீடியோவில் பேசுகிறார் முதல்வர். “நான் அங்கே வருகிறேன், சாப்பாடு கொடுப்பீர்களா?” என்ற முதல்வரின் குரலைக் கேட்ட அந்த மக்கள் “நீங்க வாங்க, விருந்தே போடுறோம் “ என்று எல்லையற்ற மகிழ்ச்சியில் பேசினார்களே! அவர்கள் அப்படிப் பேசும் போது, ஓர் இணையற்ற தலைவரிடம் பேசுகிறோம் என்ற அச்சம் துளியும் இல்லாமல் தம் நண்பரிடம் பேசுவதைப் போலல்லவா இருந்தது அந்தக் காட்சி!

இவர் தமிழக முதல்வரா? மக்களின் முதல்வரா? எளிமையின் முதல்வரா? மனசாட்சியின் முதல்வரா....?

சேர்த்துச் சொல்வோம், சமூக நீதியின் முதல்வர், தலைவர்.

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It