தடைபட்ட மின்சாரம்
தருவித்த அமைதியை,
எடுத்துரைக்க வந்துவிடுகிறது
எப்போதும் ஒரு காகம்!
தனிமையின் சுதந்திரத்தில்,
காதலை கொண்டாடும்,
காதலியின்
இலக்கனமில்லா
மெல்லிய நடனத்தை,
ஒளிந்திருந்து ரசிக்கும்,
காதலனாக்கியது என்னை,
மின்விசிறி இல்லா
அறையில் மிதக்கும்,
ஊதுபத்தி புகை!
- பொ.வெண்மணிச் செல்வன் (