பகுத்தறிவு

Raja 3001.76 லட்சம் கோடி ஊழல் வழக்கு என்று ஊரெல்லாம் அவதூறு பரப்பப்பட்டது முதலில். அது ஊழலோ, லஞ்சமோ இல்லை. அரசுக்கான வருமான இழப்பு என்று விளக்கப்பட்டது பிறகு.

நீதிமன்றத்தில், முதல் தகவல் அறிக்கை, குற்றப் பத்திரிக்கை, இறுதி ஆவணம் சமர்ப்பிப்பு என்று படிப்படியான நிலைகளில், மேலே உள்ள தொகையும் சுருங்கிச் சுருங்கி, இறுதியில் ஒன்றும் இல்லாமல் நீதிமன்றத்தில் நிற்கிறது இப்பொழுது.

அந்த வழக்கு இறுதி நிலையை எட்டி உள்ளது. இன்னும் பல ஆவணங்களை சி.பி.ஐ. வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முன்வைக்க முடியாமல் இருக்கின்றார். இந்த கட்டத்தில் அதிர்ஷ்டத்தை நம்பவேண்டிய தேவை அவருக்கு வந்திருக்கிறது.

இதோ ஒரு செய்தி,

2G வழக்கு - 23.02.2017 அன்று உச்சநீதிமன்றத்தில்...

நீதிபதியிடம்...

CBI வழக்கறிஞர்:

அதிர்ஷ்டம் இருப்பவர்கள் வெற்றி பெறட்டும்.

முன்னாள் அமைச்சர் ஆ.ராசா: ஆவணங்களையும், சட்டத்தையும் மட்டும்தான் நான் நம்புகிறேனே தவிர, அதிர்ஷ்டத்தை அல்ல.

மறுபடியும் முதலில் இருந்தா...

அம்மாவின் அடியொற்றி எடப்பாடி அரசு நடக்கும் என்கின்றனர், அ.தி.மு.க.வினர். அடடா மீண்டும் 100 கோடி ரூபாய் அபராதம் கட்ட வேண்டியிருக்குமே!

பாவம் காந்தியார்

சிறை சென்ற காந்தியார், போஸ் படமெல்லாம் அரசு அலுவலகத்தில் இருக்கலாம். ஜெ படம் மட்டும் ஏன் கூடாதாம்! - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அடடா, என்ன அறிவு!

உள்அரசியல் இருக்கிறதா?

முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் வீட்டில் சோதனைகள் நடந்தன. பன்னீர் செல்வத்தின் ‘தியானப் புரட்சிக்குப் பிறகு’ அதுபற்றியெல்லாம் பேச்சே இல்லையே ஏன்?

என்ன ஆனார் சேகர் ரெட்டி?

சேகர் ரெட்டி என்பவரிடம் 174 கோடி ரூபாயும், 127 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டனவே, அந்த வழக்கு என்ன ஆயிற்று? அவர் யாருடைய பினாமி? அவருக்குப் பின்னால் இருந்தவர்கள் யார் யார்? முதல்வர் எடப்பாடியின் சம்மந்திக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? ஏன் இந்த வழக்கில் இன்று வரை எந்த முன்னேற்றமும் இல்லை? 

Pin It