அமர்நாத் குகை, இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் இயற்கையாகப் பனிக்கட்டியால் லிங்கம் உருவாகிறது என்பது இந்து மதத்தைச் சேர்ந்தவர்களின் நம்பிக்கை. பனியால் லிங்கம் உருவாவதற்கான அறிவியல் காரணங்களை நாம் தெரிந்து கொள்ளலாம்.

amarnath lingam

மலைப்பகுதிகளில் உள்ள குகைகளில், வெப்பநிலை உறைநிலைக்குக் கீழே (அதாவது 00 செல்சியசுக்கு கீழே) இருக்கும் போது, குகையின் மேற்பரப்பில் இருந்து குகைக்குள் ஊடுருவும் நீர்க்கசிவானது, தரையில் சிறிது சிறிதாகச் சேர்ந்து, புற்றுப் பாறைகள் எனப்படும் படிவுகள் உருவாகின்றன. இவை புற்றுப்பாறை (Stalagmite), விழுதுப்பாறை (Stalactite) என இருவகைப்படும்.

தரையிலிருந்து மேல்நோக்கி கரையான் புற்றுப்போல் வளர்வது புற்றுப்பாறை எனவும், மேலிருந்து கீழாக விழுதுபோல் இறங்குவது விழுதுப்பாறை எனவும் அழைக்கப்படும்.

பனியால் மட்டுமின்றி, எரிமலைக்குழம்பு, மணல், கனிமங்கள் ஆகியவற்றாலும் புற்றுப்பாறைகள் உருவாகின்றன.

உலகின் மிகப்பெரிய புற்றுப்பாறை, க்யூபா நாட்டில் உள்ளது. இதன் உயரம் 204 அடி.