2026 தேர்தலுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரசும், கேரளத்தில் பிரணாய் விஜயன் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியும் பாஜகவை தங்கள் மாநிலங்களுக்குள் நுழைய விடாமல் தடுத்துக் கொண்டு இருந்தன.

தேர்தலுக்குப் பின் நிலைமை மாறின. மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சியை அமைத்து விட்டது.

திரிணாமுல் காங்கிரசில் பிளவு ஏற்பட்டது. ஏற்படுத்தப் பட்டதா என்ற கேள்வியும் இருக்கிறது. காரணம், உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவுடன் ஆட்சியமைத்த பாஜக, ஏக்நாத் ஷிண்டேவை வைத்துக் கொண்டு சிவசேனாவை உடைத்து அவரை முதல்வர் ஆக்கியது. இன்று மகராஷ்டிரத்தின் ஆட்சி பாஜகவிடம், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்.

இப்போது மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்ரஸ் எதிர்க் கட்சி, அதன் தலைவர் மம்தா. அவருக்கு எதிராகக் குரல் கொடுத்த ரீதப்ரதா பானர்ஜி, தலைவர் மம்தாவின் அனுமதியில்லாமல் எதிர்கட்சித் தலைவராகி விட்டார், ஏறத்தாழ சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே போல. எல்லாம் அம்மாநிலத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆசிர்வாதம்.

கேரளத்தில் இப்போது காங்கிரஸ் ஆட்சி. பாஜகவின் மறு உருவம். ஒரே வேறுபாடு காங்ரஸ் கொஞ்சம் மெள்ள நடக்கும்?!

மகராஷ்டிரத்தில் ஒரு ஷிண்டே போல, மேற்குவங்கத்தில் ஒரு ரீதப்ரதா பானர்ஜி போல தமிழ்நாட்டில் ஒரு எடப்பாடி பழனிச்சாமி கிடைத்தார் பாஜகவிடம். அதிமுக இரண்டு பட்டு, ஓர் அணி தவெகவுக்குச் சாதகமாகப் போகிறது. துரை வைகோ ‘துரதிஷ்ட்ரம்' என்கிறார். பாஜகவின் செல்லப்பிள்ளை என்று சொன்ன விஜயின் அமைச்சரவையில் இடம்பிடித்து விட்டார் திருமாவளவன். அதாவது பாஜகவின் செல்லப் பிடியில் இருக்கிறார், முதல்வர் விஜய். பாஜகவின் ஆட்டம் புரிகிறதா?

திமு கழகம் அனைத்தையும் கவனித்து வருகிறது. தோல்விதான் வெற்றிக்குரிய தகுதியைத் தருகிறது என்கிறது வரலாறு. அதற்கு எடுத்துக்காட்டு ரோமப் பேரரசைக் கதிகலக்கிய அன்றைய மாவீரன் ஸ்பார்ட்டகஸ்.

தலைவர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் ஸ்பார்ட்டகஸ், இன்று! மீண்டும் உதிப்பான் உதயசூரியன்!

- கருஞ்சட்டைத் தமிழர்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.